உயிர் எழுத்துகளும்குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்

தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள் ஒலி வேறுபாட்டின் மூலம் குறில் நெடில் ஒற்று ஆகியவை கற்றுக் கொடுக்கப் படுகிறது.

குறில்

ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள் குறில் என்று அழைக்கப்படும்.
குறில் உயிர் எழுத்துகள் அ, இ, உ, எ, ஒ
என்பன.

நெடில்

ஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகியவை நெடில் எழுத்துகள் ஆகும்

ஒற்று

ஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுக்கும் எழுத்துகள் ஒற்று என்று அழைக்கப்படுகிறன.”ஃ
” ஒற்று ஆகும்

a picture short_long Tamil Vowels
A poster for short_long Tamil Vowels

இந்த விளையாட்டு காட்சி வில்லைகளாகத் தயாரிக்கப் பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பயன் படுத்தும் வகையாக இங்கு ஒரு கோப்பும் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோப்பில் ஒலி ஒரு சில இடங்களில் வேலை செய்யாது என்பதைப் புரிந்து கொள்ளவும்.

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் வசதிக்காக  குறில்_ நெடில்கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Learning Short and long Tamil vowels through games

To read Tamil correctly one has to understand the grammar behind the letters. This will help the student recognize the letters and read the words properly. For the children to grasp tamil language it is not enough that they see adn hear the letters. They need to play and interact with the letters to use their learning in a practical way

In this lesson through sounds the students will learn the long and short vowels

The pronunciation of these letters depends upon how long it takes to make the particular sound. The unit of measure is called a Mathirai. A mathirai is the time it takes to snap your fingers or blink your eyes naturally. It is usually a second

Short vowels

When a letter take a second to pronounce that letter is called kurril They are அ, இ, உ, எ, ஒ

Long vowels

When a letter take two seconds to pronounce it is called neddill.
Those letters are ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள

Ottru

when a letter has only half second sound duration,it is referred as otRRu

a picture short_long Tamil Vowels
A poster for short_long Tamil Vowels

This game is a power point slide show One can use the link . In some places the audio will not work. But for the convenience of the teachers

Shor_ Longcan download the file here.