படர்க்கையும் பாலும்- The third person and the gender in Tamil language

படர்க்கையும் பாலும்

படர்க்கை என்பது உரையாடலில் இல்லாத ஒரு மூன்றாம் நபரைக் குறிக்கும். அந்த மூன்றாம் நபர் இரண்டு உயர் திணை அஃறிணை என்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், அதை அடுத்துக் கொடுக்கப்பட்ட படர்க்கைப் பெயர்ச்சொல்லை (மூன்றாம் நபர் பெயர்ச்சொல்) இன்னும் ஒரு பிரிவாகப் பார்க்கலாம். அது தான் பால். பால் என்பது ஆங்கிலத்தில் genderரைக் குறிக்கும் . ஆங்கிலத்தில் ஆண், பெண் என்று இரு பால்களே உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இவற்றைத் தவிர, பலர்பால், ஒன்றன்பால், பலவின பால் என்ற பால்கள் உள்ளன.

படர்க்கை - பால்
படர்க்கை – பால்

இதில் ஆண்பால், பெண்பால்,பலர்பால் உயர்திணையாகவும், ஒன்றன்பால், பலவின பால் ஆகிய இரண்டும் அஃறிணையாக அமைகின்றன. இதில் முக்கியமாக நாம் பார்ப்பது என்னவென்றால் இந்தப் பெயர்ச்சொற்கள் அவற்றின் எண்ணிக்கையையும் காட்டும் பிரிவுகளாகக் காட்டுகின்றன. உயர்திணையின் பால்களில் ஆண் பால், பெண்பால் இரண்டும் ஒருமையையும் பலர்பால் பன்மையையும் காட்டுகின்றது. அஃறிணையில் ஒன்றன் பால் ஒருமையையும், பலவின பால் பன்மையையும் காட்டுகின்றன.
கண்ணன், பையன், அண்ணன், பழம், அகிலா, பெண், தங்கை, பூ
கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பெயர்ச்சொற்களை முதலில் நாம் பிரிக்கலாம். எப்படிப் பிரிப்பது என்று கீழே உள்ள காணொலியில் காணலாம்.

 The third person and the gender in Tamil language

The word third person is படர்க்கை. Naturally a third person noun fall under three categories in Tamil. திணைthiNnie(class),பால் paal(gender) எண் eNn(Count)
In English there are only two genders.Male and Female.
In Tamil we see male, female, plural for the upper class or rational class uyarthiNnie.
The lower class or irrational class akrriNnie has Singlular gender as well as plural gender.
See the video above for more explanation.