அனைத்துலகச்சிறுவர் சிறுகதைப் போட்டி 2021 நடுவர்ஆசிரியர்/எழுத்தாளர் கே.பாலமுருகன்

 

ஆசிரியர்/எழுத்தாளர் கே.பாலமுருகன்

 

 

 

 

கெடா மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் எழுத்தாளர். Guru cemerlang Bahasa Tamil. இதுவரை மாணவர்களுக்காக 18க்கும் மேற்பட்ட நூல்களும், இலக்கியத்தில் 14 நூல்களும் இயற்றியுள்ளார்.

சிறுவர்களுக்கான தொடர் நாவலை மலேசியாவில் முதலில் தமிழில் எழுதியவரும் இவரே. மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற அச்சிறுவர் நாவல் பல்லாயிரம் மாணவர்களால் ஆர்வத்துடன் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது. அதே போல மேலும் பாகம் இரண்டு, பாகம் மூன்று என சிறுவர்களின் உலகில் விருப்பமான எழுத்தாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

🔖விருதுகள்

  1. நாமக்கல் கண்ணதாசன் அறவாரியத்தின் பாரதி விருது 2018,
  2. தமிழ்நாடு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருது,
  3. அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது 2019,
  4. கபிலர் குருஞ்சி இலக்கிய அமைப்பின் குடியரசு தின விருது 2020 என்று சர்வதேச விருதகளையும்,
  5. மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறுகதைப் போட்டியில் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது,
  6. மழைச்சாரல் இலக்கிய குழுமத்தின் ஆதி.ராஜகுமாரன் விருது 2019,
  7. சிலாங்கூர் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சின் இளம் சாதனையாளர் விருது,
  8. புத்தாக்க ஆசிரியர் விருது 2012, மாநிலக் கல்வி இலாகா
  9. கற்பனைவளமிக்க ஆசிரியர் விருது, மாவட்டக் கல்வி இலாகா
  10. தமிழக மனித உரிமை மேம்பாட்டுக் கழகத்தின் *தேவநேயப் பாவாணர் விருது
  11. தமிழக மனித உரிமை மேம்பாட்டுக் கழகத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

என்று மேலும் இலக்கியத்திலும் கல்வித்துறையிலும் பல விருதுகளைப் பெற்றவர்.

🔖அவரது பேபி குட்டி என்கிற சிறுகதை தமிழ்நாடு கல்வித்துறை பாடப்புத்தகத்தில் அயலக சிறுகதை என 11ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்ப்பிரிவில் சேர்த்துள்ளது. இதுவே தமிழ்நாட்டு அரசுப் பாடநூலில் இடம்பெறும் மலேசியாவின் முதல் சிறுகதையாகும்.

🔖அதோடுமட்டுமல்லாம் இவரது மூக்குத் துறவு, தட்டான்களற்ற வானம் போன்ற சிறுகதைகள் அரூ நடத்திய உலகலாவிய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் இரண்டு முறை சிறந்த 10-இல் தேர்வாகியுள்ளன.

இவரது அப்பா வீடு சிறுகதை 2007ஆம் ஆண்டில் மக்கள் ஓசையின் மோதிரக் கதையாக தேர்வாகியது.

-2007, 2019 என இரு முறை மலாயாப்பல்கலைக்கழகத்தின் பேரவை சிறுகதைப் போட்டியில் முதல் நிலை பெற்றுள்ளார்.

-மாலன் தொகுத்த உலகின் சிறந்த தமிழ்க்கவிதைகள் தொகுப்பில் இவரது இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

-சிங்கை ஜெயந்தி சங்கர் தொகுத்த உலகின் 100 சிறுகதை ஆங்கில மொழியாக்க நூலில் இவருடைய சிறுகதை ‘tiger team’ தேர்ந்தெடுக்கப்பட்டது.

-2020 -இல் தமிழ்நாடு குறிஞ்சி கபிலர் தமிழ் சங்கம் இவருக்கு சர்வதேச அளவிலான அப்துல்கலாம் கல்வி விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.

-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திர சிறந்த சிறுகதை தேர்வில் இரு முறை பரிசு பெற்றுள்ளார்.

 

🔖பணிகள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை 8 வகையான இலக்கிய/கல்வி சார்ந்த போட்டிகளை நடத்தி 4000 மேற்பட்ட மாணவர்களின் படைப்புகளைத் திரட்டியுள்ளார்.

பாரதி கற்பனைத் தளம் என்கிற வலையொளி (Youtube Channel) இயக்கத்தைத் தோற்றுவித்து மலேசியாவில் உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இதுவரை இலவசமாக 120 இயங்கலைச் சார்ந்த வகுப்புகள், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளார். இவருடைய பாரதி கற்பனைத் தளத்திற்கு கேரளா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு அங்கீகார விருதை அளித்துக் கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

error: Copyrights: Content is protected !!