இயல் பதிப்பகம்

ளியல் பதிப்பகம் மலேசியா

வணக்கம். இயலின் செயல்பாடுகள்.

– இளைஞர்கள் எழுத்துலகில் வளர வேண்டும். அவர்கள் எழுத ஒரு  தளம் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தோற்றுவிக்கப்பட்டது.

 

  • வெண்பலகை சிறுகதை பயிலரங்கம்

-1, 2, 3 என வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்தது.

வெண்பலகைக்கு எழுதிய நிறைய இளைஞர்களின் சிறுகதைகள் பரிசு பெற்றும் மலேசிய நாளிதழ்களில் சிறுகதை வெளியீடு, வானொலி நாடகம் போன்ற ஊடகங்களில் வெளி வந்த வண்ணமாகவும் இருக்கின்றன. பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக சிறுகதை எழுதியவர்களை வெண்பலகை இளம் படைப்பாளர்கள் அறிமுகம் நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வண்ணம் அறிமுகம் செய்து வைத்தோம்.

– வெண்பலகை எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு விரைவில் தனித்தனி நூலாக வெளியீடு காணவிருக்கிறது.

 

  • கரும்பலகை : புதுக்கவிதை பயிலரங்கம்

– 1,2 என வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்தது. இளைஞர்கள் பலரும் தொடர்ந்து சிறப்பாக கவிதைகளை எழுதி வருகின்றனர்.

 

  • இயல் அரங்கம்

– நூல் அறிமுகம் நிகழ்ச்சி. இளைஞர்கள் தாங்கள் வாசித்த நூல்களைப் பற்றிய பகிர்வு அங்கம்.

– மலேசிய, இலங்கை எழுத்தாளர்கள் அறிமுகம்

– வட்ட மேசை

 

  • எழுத்தாளர்களின் நூல் வெளியீடு

 

  • இயல் புதிர்போட்டி

 

  • எழுத்தாளர் கே. பாலமுருகன் சிறுகதை போட்டி

– வெண்பலகை இளையோர்களுக்காகத் 2021ல் முதல் முறையாகத் தொடங்கிய போட்டி. இளையோர்கள் ஆழமாக வாசிக்கவும் திறனாய்வு பார்வை கொண்டிருப்பதற்காகவும் தொடங்கிய போட்டி.

 

  • கதை சொல்லி அமர்வு – நூலிழை

– வெண்பலகை இளம் எழுத்தாளர்கள் வாரந்தோறும் பங்கு பெறும் அமர்வு. சிறுகதை திறனாய்வு, சிறுகதை பார்வை, கலந்துரையாடல் நடைபெறும் அங்கம்.

 

  • இயல்வது கரவேல்- மின்னிதழ்

– கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற பல படைப்புகள்; இளைஞர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1,2 முடிந்து தற்போது ஆகத்து மாதம் மூன்றாவது மின்னிதழ் வெளிவரவிருக்கின்றது.

 

முழுமையாக இளைஞர்களுக்காகச் செயல்படும் ஓர் அமைப்பாக இயல் பதிப்பகம் இயங்கி வருகிறது.

error: Copyrights: Content is protected !!