பதம் இன்னெதென்பதும் அதன் வகையும் -நன்னூல்128


பாடல்

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின்
பதமாம் அதுபகாப் பதம் பகுபத மென
இருபா லாகி இயலும் என்ப 128

சொற்களைப் பிரித்து எழுதிய பாடல்

எழுத்து ஏ தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின்
பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப 128

பாடலுக்கான  சொல் வளம்

எழுத்து -letters
ஏ- suffix
தனித்து — be alone
உம்- and
தொடர்ந்து – continuous
உம் -and
பொருள் – meaning
தரின்- give
பதம்- word
ஆம்9ஆகும்)- it will be
அது- that
பகா -prime, indivisible
பதம் – word
பகா பதம்-indivisible word
பகு divide distribute
பகுபதம்- dividable word
என- that,connective of things enumerated
இரு- be
பால்- parts
ஆகி- to become
இயலும்’ – may
என்ப- it said that

 

தமிழ் இலக்கணத்தில் சொல் என்றால் என்ன?

செய்யுள் விளக்கம்:- ஒரு எழுத்து தனியாகவும் ஒன்றை ஒன்று தொடர்ந்தும் அமைந்து விளக்கம் தருமாயின் அது பதம் என்று அழைக்கப்படும். பொருளைக் குறிக்கும் இச்சொற்கள் பகுபதம் பகுப்பதம் இரண்டு வகைகளாக அமையும். பிரித்து எழுத்தைக் கூடிய சொற்கள் பகுபதம் என்றும், பிரித்து எழுத முடியாத சொற்கள் பகாப்பதம் என்றும் இரண்டு வகைப் படும்.

 1. சொல் என்று இக்காலத் தமிழில் அழைக்கப்படுவது செய்யுளிலும் இலக்கணத்திலும் பதம் என்ற வார்த்தையால் அறியப்படுகின்றது.தமிழில் விளக்கம் தரக்கூடிய ஓரே ஒரு எழுத்துக்கள். தமிழ் மொழியின் சிறப்பு. ஓரெழுத்துச் சொற்கள் பல மொழிகளில் இல்லை சொல். பதம் வார்த்தை என்று அழைக்கப்படும் சொல் மொழியின் முக்கியமான ஒரு அலகாக எல்லா மொழி இலக்கணத்திலும் உண்டு. அவை ஒரே ஓசை உடையதாகவும், பல ஓசைகள் உடையதாகவும் அமையும் இந்த ஓசைகளின் வரி வடிவமான எழுத்துக்களைக் கொண்ட தொகுப்பு. ஒரு விளக்கத்தைக் கொடுப்பதாகவோ, ஒரு பொருளைக் குறிப்பிடுவதாகவும் அமைந்தால் அது சொல் என்று அழைக்கப்படுகின்றது. தமிழ் எழுத்துக்கள் ஓசைகளின் வரிவடிவம் அதனால் நன்னூல், ஆசிரியர் ஒரு எழுத்தோ, எழுத்துக்கள் ஒன்றை ஒன்று தொடர்ந்தோ அமைந்து விளக்கம் கொடுக்கும் என்றால் அது சொல் என்று கூறுகின்றார். அவர் அடுத்தபடியாக பிரித்துப் பொருள் கொடுக்கும் சொற்கள்(பகுபதம்), பிரித்தால் விளக்கம் இழந்து நிற்கும் பிரிக்கப்படாத சொல்லாகவும் (பகாப்பதம்) என இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்கின்றார். பகுபதத்திற்கு உதாரணமாக ஒரு மணி மாலையை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் உள்ள மணிகளைத் தனித்து எடுக்க முடியும். அது போல பகு பதத்தில் உள்ள சொற்களை பிரித்து தனியே ஒரு பொருள் கொள்ள முடியும். பகாப்பதம் என்பது ஒரு பொடி போன்றது. அந்தப் பொடியிலிருந்து ஒரு துகளைத் தனியாக எடுத்துத் தனியாக எப்படிப் பயன்படாதோ அது போல பகாப்பதத்திலிருந்து சொற்களைத் தனியாகப் பிரிக்க முடியாது.  பகு பதம் பகாப்பதம் என்பவற்றின் எடுத்துக்காட்டைப் புரிந்து கொள்ளும் முன் புரிந்து கொள்ள தமிழ் எழுத்திலக்கணத்தின் சில தன்மைகளையும் சிரிந்து பார்க்க வேண்டும். பகுபதத்திலிர்ந்து வரும் சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பிடிவதாகவோ, அகராதியில் வரும் விளக்கத்தைத் தாங்கி வரலாம். அதே போல தமிழ் எழுத்து இலக்கணத்தின் பல கூறுகளைக் கொண்டும் ஒரு பகுபதம் அமையலாம்.. ஒரு சொல்லைத் தனியாகவும் வாக்கியங்களாகவும் அமைக்கலாம்.
  எடுத்துக்காட்டு
  ஒரெழுத்துச் சொற்கள்:
  பை வை வா பூ
  பொருள் தரும் தொடரெழுத்து சொற்கள்
  கல்
  கல்வி
  மழை
  மாலை
  சிங்கம்
  அகராதி விளக்கம் தரும் பகுபதங்கள்
  என்னுயிர் என்+உயிர்- என்னுடைய உயிர்
  ஆருயிர் ஆர்+உயிர் அரிய உயிர்
  அருட்கருணை அருள்+ கருணை – அருள் கலந்த கருணை
  இன்பப்பெருக்கு இன்பம்+ பெருக்கு ஆனந்தப் பிரவாகம்

இந்தப்பகுபத இலக்கணக் கூறுகளை அடுத்து அடுத்து நாம் காணலாம்
இலக்கண பொருள் தரும் பகுபதங்கள்
இறையே (இறை+ ஏ )- கடவுள்+ஏ()விகுதி)
இரங்கவும் இரங்கு+உம் (பரிவு+உம்(இடைச்சொல் இணைப்பதற்காக வந்துள்ளது.
செய்யாய் செய+ ஆய் முன்னிலை விகுதி

 

Above is the audio file of the nannool 128. This song is starting to explain the concept of “word” in Tamil grammar.
The explanation of the poem: A letter can give a meaning by a standing alone or form a meaning by continuously standing next to each other. These clusters of letters that give a meaning can be classified into two parts as indivisible word (pagappatham) and divisible word (paguppatham).

The word “sol’ is known as patham in Tamil classical poems and grammar. The specialty of the Tamil language is that, it has words made up of single letter. It is not so in many languages. A word is an unit for every language. When a sound of cluster of sounds denotes meaning it is considered a word. In Tamil all the sounds have a written letter representation. So according to the author of nannool pavanathi muniver when a single letter or a letters stand continuously to give a meaning or a explanation it is defined as patham or word. These words can be divisible or indivisible words. Divisible words can be explained using a bead garland. One can take the beads out of the garland and re use them separately. Similarly when a word is devided in tow a it gives two meanings, like the compound words of English. Indivisible words are like a powder, that you cannot separate each other to get two different meaning. Before we go through the examples, it is crucial to know that, the Tamil words may have two kinds of meaning, They can carry the meaning of dictionary, and also a meaningful category of Tamil grammar. The grammatical categories can be discussed later.
Examples
One letter words
பை (pai) வை((vai) வா (vaa)பூ(poo)

Multi letter words in tamil

கல்(kal)- stone
கல்வி-(kalvi)- education

மழை (mazhai)-rain
மாலை(maalai)- garland
சிங்கம்9singam)- lion

Dividable words that give dictionary meaning.

என்னுயிர் enuyir என்+உயிர் en+ uyir my+life
ஆருயிர் ஆர்+உயிர் aaruyir aar+ uyir rare life
அருட்கருணை அருள்+ கருணை arudkarunai arul+karuNai graceful kindness
இன்பப்பெருக்கு இன்பம்+ பெருக்கு inbapperrukku inbam+perrukku abundant bliss
Divisible words with Tamil grammatical meaning.

இறையே (eaRrai+ yay )- god+yey(vikuthi ,similar to suffix for a word
இரங்கவும் irangu+wum (kindness+wum(conjucation word
செய்யாய் seyyaai chehiy+ aai second person suffix

தேசிகர் தண்டபானி. நன்னூல் விருத்தியுரை. சாரதா பதிப்பகம், 2014.

பறவைகள் சொற்களஞ்சியம்

 

பறவைகளின் பெயர்கள் இங்கு ஒரு விளையாட்டு மூலமாக கற்றுக் கொள்ளலாம்.  இந்த ஒவ்வோரு சொற்களும் பெயர்ச் சொல்ல்லாகும். பறவைகள் அஃறிணை  என்ற திணையை சேர்ந்தவை ஆகும்.

This is a game of the bird’s name in Tamil. bird  is classified as lower category. One can say they are neuter gender in Tamil grammar.

தன்மை (thanmai) First person

தன்மை:

தமிழில் ஒருவர் தன்னைப் பற்றி குறிக்கும் போது அது தன்மை இடத்தைக் குறிக்கிறது.  தன்மை பெயர்களுக்கு பால் கிடையாது. திணையும் கிடையாது.

“thanmai”தன்மை:

in Tamil grammar refers to the first person in English Language. This  pronouns  does not have gender classifications. The first person does not have upper and lower class.

நான் (naan)- I

நான் 

தமிழ் இலக்கணத்தில் ஒருமையைக் குறிக்கும் தன்மைப் பெயர்,அதாவது ஒருவர் தன்னைப் பற்றி பேசும் போது”நான்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது  தன்மை  ஒருமை மாற்றுப் பெயர் ஆகும்.

“naan”

is  pronounced as”naan” in English. This  is the pronoun “I” in English It is a   singular  first person noun. The  synonyms are “than”(தன்) tham, (தம்) thanngal(தங்கள்) thaangaL தாங்கள்)