Posted on

இறை வாழ்த்து பராபரக்கண்ணி

தாயுமானவர் எழுதிய  பராபாரக்கண்ணி பாடல்  தமிழ் இணையக் கலவி கழகத்தின் சான்றிதழ் படிப்பின் மேல்நிலையின் முதல் பாடமாக உள்ளது.   அந்தப் பாடலை  ஆசிரியர்கள் வகுப்பில் ஒருமுறை  சொல்லிக் கொடுத்தாலும்,  புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை மாணவர்கள்  சொற்களையும் அவற்றை   சொல்ல வேண்டிய முறையையும் இக்காணொளி உதவி செய்கிறது.

பராபரக்கண்ணி

அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே!- தாயுமானவர்.

 இப்பாடலின் ஆங்கில  மொழியாக்கம்:

Oh supreme power, the abundance of eternal bliss you came to protect my beloved life by love
Oh supreme power kindly bestow your blessings so I love and shower kindness to all living things as if it. Is my own.

Meaning of the poem in Tamil.

இப்பாடலின் பொருள் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் கீழ் வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கே விளக்கத்தை இடுவதன் மூலம் இந்தப் பாடத்திட்டங்களைப் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

“என்னிடம் அன்பு என்ற உணர்வை அதிகமாக்கி என் அருமையான உயிரைக் காக்க வந்த இறைவனே, இன்ப வெள்ளமே! ஒப்பற்ற மேலான பொருளே! உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் என் உயிர் போல நினைத்து அவ்வுயிர்கள் மேல் இரக்கம் கொள்ளும்படி நீ எனக்கு அருள்புரிவாயாக”

 பொருளின் ஆங்கில விளக்கம்:

Oh Almighty, the endless joy, you have come to protect my precious life, by magnifying the feeling of love.Please bless me with a sense of benevolence so I can love others as I love myself.

Posted on

படர்க்கையும் பாலும்- The third person and the gender in Tamil language

படர்க்கையும் பாலும்

படர்க்கை என்பது உரையாடலில் இல்லாத ஒரு மூன்றாம் நபரைக் குறிக்கும். அந்த மூன்றாம் நபர் இரண்டு உயர் திணை அஃறிணை என்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், அதை அடுத்துக் கொடுக்கப்பட்ட படர்க்கைப் பெயர்ச்சொல்லை (மூன்றாம் நபர் பெயர்ச்சொல்) இன்னும் ஒரு பிரிவாகப் பார்க்கலாம். அது தான் பால். பால் என்பது ஆங்கிலத்தில் genderரைக் குறிக்கும் . ஆங்கிலத்தில் ஆண், பெண் என்று இரு பால்களே உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இவற்றைத் தவிர, பலர்பால், ஒன்றன்பால், பலவின பால் என்ற பால்கள் உள்ளன.

படர்க்கை - பால்
படர்க்கை – பால்

இதில் ஆண்பால், பெண்பால்,பலர்பால் உயர்திணையாகவும், ஒன்றன்பால், பலவின பால் ஆகிய இரண்டும் அஃறிணையாக அமைகின்றன. இதில் முக்கியமாக நாம் பார்ப்பது என்னவென்றால் இந்தப் பெயர்ச்சொற்கள் அவற்றின் எண்ணிக்கையையும் காட்டும் பிரிவுகளாகக் காட்டுகின்றன. உயர்திணையின் பால்களில் ஆண் பால், பெண்பால் இரண்டும் ஒருமையையும் பலர்பால் பன்மையையும் காட்டுகின்றது. அஃறிணையில் ஒன்றன் பால் ஒருமையையும், பலவின பால் பன்மையையும் காட்டுகின்றன.
கண்ணன், பையன், அண்ணன், பழம், அகிலா, பெண், தங்கை, பூ
கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பெயர்ச்சொற்களை முதலில் நாம் பிரிக்கலாம். எப்படிப் பிரிப்பது என்று கீழே உள்ள காணொலியில் காணலாம்.

 The third person and the gender in Tamil language

The word third person is படர்க்கை. Naturally a third person noun fall under three categories in Tamil. திணைthiNnie(class),பால் paal(gender) எண் eNn(Count)
In English there are only two genders.Male and Female.
In Tamil we see male, female, plural for the upper class or rational class uyarthiNnie.
The lower class or irrational class akrriNnie has Singlular gender as well as plural gender.
See the video above for more explanation.

 

 

Posted on

Review -Places and Count in with Tamil words

To write better in Tamil, one have to understand the places and the count.So for we saw singular first person,and singular second person in all three sentences.
So let us review and test our knowledge on first person singular present tense.

என் பெயர் கண்ணன். My name is Kannan
நான் ஒரு பையன் I am a boy
நான் உன் அண்ணன் – Iam your brother
இந்தப் பழம் என்னுடையது
என் பெயர் அகிலா- My name is Akilla
நான் ஒரு சிறுமி I am a girl
நான் உன் தங்கை I am your sister
இந்தப் பூ என்னுடையது This flower is mine!

All these sentences are first person singular in present tense
உன் பெயர் கண்ணன் Your name is kannan
நீ ஒரு பையன் You are a boy
நீ என் அண்ணன் You are my brother

இந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours
உன் பெயர் அகிலா- Your name is Akilla
நீ ஒரு பெண் you are a girl.
நீ என் தங்கை you are my sister
இந்தப்பூ உன்னுடையது This flower is yours!
All these sentences are second person singular in present tense.
This is a simple sentence so naturally it will come in present tense
This sentences also does not have verbs
So we will use this sentences to practice the first person and second pronouns
[iframe src=”http://www.tamilunltd.com/pages/games/games%20resource/Place%20-Review%20-%20Storyline%20output/story_html5.html” width=”100%” height=”500″]

Play the game here

Posted on

இடைச்சொல்-Particles

இடைச்சொல்

தொடக்க நிலைப் பாடத்தில் நாம் இடைநிலைச் சொற்களைப் பார்க்கப் போகிறோம். இவை தனியாக நின்று பொருள் தராது. அவை பெயர்ச்சொல்லின் இறுதியில் சேர்ந்து பொருள் தரும் ஒரு இடைநிலைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால் தமிழ்ல் பொருள் தரும் சொற்றொடர்களை அமைக்க முடியும். இந்த இடைநிலைகளைக் கொண்டு தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களை வினைச்சொல்லாகவும் மாற்றலாம்.

தொடக்க நிலையில் இடைநிலை சொற்களை   இரு வகையாகப் பிரிக்கலாம்.

காலம் காட்டும் ஈறுகள்

இடம் காட்டும் இடைநிலைகள்,

 

ஏற்கனவே காலம் காட்டும் இடைநிலைகள் இந்தச் சுட்டியில் கொடுக்கப் பட்டுள்ளது.

அவையாயாவன,இன்” “ட்”ற்”“த்” “கிறு” “கின்று” ஆநின்று“ “ப்” “வ்

இன்” “ட்”ற்”“த்”ஆகியவை இறந்த காலத்தையும், “கிறு” “கின்று” ஆநின்று“ஆகியவை நிகழ்காலத்தையும் “ப்” “வ்

ஆகியவை எதிர்காலத்தையும் காட்டும்.

இடம் காட்டும் ஈறுகளைப் பார்ப்போம்

தன்மை இடம் (ஒருமை) ஏன்

(பன்மை)ஓம்

முன்னிலை இடம் (ஒருமை)- ஆய்

முன்னிலை இடம் (பன்மை) ஈர்கள்

நாம் முதலிலேயே பார்த்தபடி தன்மையும் முன்னிலை எந்தப் பாலையும் காட்டாது.ஆனால் தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களோடு சேர்ந்து பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றும் ஒரு சொற்றொடர் அமைக்கும் போது பெயரைக் குறிக்கும் பெயர்ச்சொல்லை விட ஒரு வினைச்சொல்லே இடத்தையும் காலத்தையும் காட்டும்.

 

 

இங்கே நாம் தன்மை முன்னிலை இடங்களை வைத்துச் சில சொற்றொடர்களை அமைக்கலாம்.

முதலில் தொழில் பெயர்களை வினைச்சொல்லாக மாற்றலாம்.

அதன் படிகள்

  • “அல்” என்பதை எடுக்க வேண்டும்
  • “காலம் காட்டும் இடைச்சொல்லை”சேர்க்க வேண்டும்
  • இடம் காட்டும் இடைச் சொல்லைச் சேர்க்க வேண்டுமஇடைச்சொல்லைப் பயன் படுத்துதல் Using particlesin Tamil
  • Particles have an important work in Tamil language even though they cannot give any meaning. Particles are also referred as in-between words in Tamil. In an elementary level the learners need to know two types of particles. They are particles that show tense. And point of view.இன்-in” “ட் it”ற் iRr”“த்(ith)” “கிறு(kiRu)” “(கின்று(kinduRu)” ஆநின்று(aaninRu)“ “ப்(ip)” “வ்(iv)
  • Past tense particles areஇன்-in” “ட் it”ற் iRr”“த்(ith)”
  • Present tense are “கிறு(kiRu)” “(கின்று(kinduRu)” ஆநின்று(aaninRu)”
  • Future tense are “ப்(ip)” “வ்(iv)

Some particles show the point of view ending.  They are “ஏன்yehen”ஓம்om””ஆய் aai” ஈர்கள்eergal”

First person singular- “ஏன்yehen”

First person plural- “ஓம்om”

Second person singular “ஆய் aai”

Second person plural ஈர்கள்eergal”

Changing the action nouns to verbs In Tamil

  • Remove the“அல்
  • Add the appropriate tense particle
  • Add the appropriate point of view particle ending

Now play the game to reinforce the concept for  first person past tense