தமிழ் இலக்கணம் Tamil Grammar

தமிழ் இலக்கணம் Tamil Grammar

காலத்தின் சோதனையைத் தாண்டி ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால், திறந்த முறையில் வரையறுக்கப்பட்ட இலக்கணம் அந்த மொழியின் அடிப்படையாக அமைய வேண்டும். தமிழைப் போலவே தமிழ் இலக்கணமும் தனக்கென்று ஒரு தனி வரலாற்றைக் கொண்டுள்ளது.நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியர் எழுதிய தொலகாப்பியம் ஆகும்.(கி.மு6000-3000) அன்றிலிருந்து இன்றுவரை பல இலக்கண நூல்கள் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுவிட்டன. தற்போது மிக எளிய முறையில் இலக்கணம் கற்றுக் கொள்ளும் வகையில் பல புத்தகங்கள் வந்து விட்டன.தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் ஐந்தாம் ஆறாம் வகுப்புப் பாடங்களைத் தழுவி இந்தப் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன.

For a language to be strong enough to withstand the test of time, it needs a strong foundation of grammar. Like the history of the language the grammar also has its own history, It is said that the first available grammar for tamil was written by Tholkoppiyaar called tholkappiyam(B.C. 6000-3000). From then to now the basic structure has seen very little change. At present there is lot of simplified Tamil grammar books available. We tried to follow the structure and concept of grammar mainly from Tamil Nadu government fifth and sixth grade lessons.

தமிழ் இலக்கணம் ஒரு அறிமுகம்!

An Introduction

தமிழ் இலக்கணம் தமிழ் மொழியின் அமைப்பைப் புரிந்துக் கொள்ள உதவுகிறது அது தமிழில் பிழையின்றி எழுத உதவுகிறது. மேலும் தமிழ் இலக்கியங்களை ரசிக்க உதவுகிறது. தமிழ் இலக்கணம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை

  • எழுத்து இலக்கணம்
  • சொல் இலக்கணம்
  • பொருள் இலக்கணம்
  • அணி இலக்கணம்
  • யாப்பு இலக்கணம்

This is an introduction to Tamil grammar. Tamil Grammar helps us understand the structure of the language. By learning and understanding grammar we can write in Tamil without any mistakes. We can also enjoy the Tamil literatures better. Tamil grammar has five parts. They are

  1. Grammar for Letters
  2. Grammar for Words
  3. Grammar for Meaning
  4. Rhyme scheme
  5. Structural Grammar

தமிழ் எழுத்துக்களின் தன்மையை விளக்கிச் சொல்வது எழுத்து இலக்கணம். எழுத்துக்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விதிகளைச் சொல்கிறது.
சொல் இலக்கணம்
தமிழ் சொற்களின் தன்மையை விளக்கிச் சொல்கிறது.
வாழ்விற்கு முக்கியமான அன்பு வீரம், ஈகை ஒழுக்கம் அறம் என்றக் குணங்களை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணம்.
செய்யுள்களின் வகைகள் பற்றியும் அவற்றை எப்படி அமைப்பது என்றும் விளக்குவது செய்யுள் இலக்கணம்.
உரைநடை செய்யுள் இரண்டிலும் உள்ள பொருள் மற்றும் சொல் அழகினை பிரித்துக் காட்டுவது அணி இலக்கணம்.
தமிழைப் பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் உதவி செய்வது இலக்கணமாகும்.
Grammar for letters explains the characteristics of Tamil letters. It also gives rules as to how to use these letters. Grammar for words explains the characteristics of Tamil words. Grammar for meaning explains the characteristics of good living like love, bravery, charity and good behavior. Grammar for poems explains the types of poems and how to write the poems. Grammar of beauty explains the beauty of words and their meaning in prose and poems. To learn Tamil the right way, we have to learn and understand the grammar the right way too. Tamil Grammar helps us read and write Tamil without any mistakes.

எழுத்து Letters

ஆங்கில எழுத்துக்களின் உயிர் எழுத்து மெய் எழுத்து ஆகிய இரு பிரிவுகளையும் உயிர்மெய் என்ற மூன்றாம் வகையையும் உள்ளடக்கியது  தமிழ் எழுத்துக்கள்.  தமிழ்ல் எழுத்துக்கள் மொழிக்கு  ஒலி வடிவம் கொடுத்து, ஒலிக்கு வரிவடிவம் கொடுப்பது மட்டுமல்லாமல் மொழியின் இலக்கண உருபுகளாகவும் செயல்படுகின்றன. அதாவது ஒலிவரிவடிவம் கொண்ட  ஒரு எழுத்து  இலக்கண உருபாகச் செயல்படும்போது இலக்கணக் கட்டமைப்பிற்குத் தேவையானப் பணிகளையும் செய்கின்றது.

மேலும்

  The Tamil alphabet consists of two divisions of the English alphabet namely vowel and consonant and the third type of vowel consonant.  Letters in Tamil not only give sound form to  the language and transcribe the sound but also act as the grammatical forms of the language. That is, when a letter act as a grammatical form, it also performs the necessary functions for grammatical structure.

Read more

சொற்கள் Words

தமிழில் சொற்கள், பெயர்சொற்கள் வினைச்சொற்கள் என்ற பொதுவான பணிகளைச் செய்தாலும், இடைச்சொல் என்ற வகையில்  இலக்கணக் கட்டமைப்பிற்கு உதவியாகவும் உள்ளன. உரிச்சொல் என்ற வகை செய்யுள் அமைப்பில் மட்டுமேக் காணப்படுகின்றது.அடிப்படையான  இவ்வகைகளைக் கற்பது மட்டுமல்லாமல் என்று சொல்லப்படும்  சித்திரச் சொல் பட்டியலையும் இந்தத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும்

In Tamil,  though words perform the general functions of nouns and verbs,  they also help in grammatical structure as interjections. Urichchol is  found only in verse structure. In addition to learning these basic types, you can also find a list of pictorial terms on this site.

Read more

error: Copyrights: Content is protected !!