தமிழ் மெய் எழுத்துக்கள்:Tamil Consonants

மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும். மெய் எழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு.

    க்

    ங்

    ச்

    ஞ்

    ட்

    ண்

    த்

    ந்

    ப்

    ம்

    ய்

    ர்

    ல்

    வ்

    ழ்

    ள்

    ற்

    ன்

Tamil consonants are dependent on the vowels. There are eighteen consonants.

    ik (க்)

    ing (ங்)

    ich (ச்)

    inj (ஞ்)

    it (ட்)

    iNn (ண்)

    ith(த்)

    inth (ந்)

    ip (ப்)

    im (ம்)

    iy (ய்)

    ir (ர்)

    il (ல்)

    iv(வ்)

    izhl (ழ்)

    ILL (ள்)

    irr(ற்)

    in (ன்)

பிரிவுகள்:Categorization

மெய் எழுத்துக்கள் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,,ள்,ற்,ன் ஆகியவை ஒலிப்பதற்கு அரை மாத்திரை அதவாது அரை வினாடி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒற்று என்று அழைக்கப் படுகின்றன.

மெய் எழுத்துக்கள் தங்களின் ஒலியைப் பொறுத்து வல்லினம், மெல்லினம்,இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். வல்லின எழுத்துக்கள் ஆறு. க்,ச்,ட்,த்,ப்,ற் வல்லின எழுத்துக்களாகும். இந்த எழுத்துக்களின் உச்சரிப்ப்பு வலுவான மூச்சுக்காற்று கொடுக்கும் அழுத்தத்தால் வலுமையாக இருக்கும். மெல்லின எழுத்துக்களும் ஆறு தான். ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகியவை மெல்லின எழுத்துகள் ஆகும். மெல்லிய ஓசைக் கொண்ட இந்த எழுத்துக்களை ஒலிக்க அதிக முயற்சி தேவையில்லை இடையின எழுத்துக்களும் ஆறு எழுத்துக்கள் தான். ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகியவை இடையின எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை ஒலிக்கத் தேவையான முயற்சி நடுத்தரமாக இருக்கும். ஒலி ஓசையும் கடினமாகவோ அல்லது மென்மையாகவோ இல்லாமல் இடையில் வரும்.

The consonants க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் are categorized on the basis of their sounds. They take half a second to pronounce. They are called ottru.

Apart from the letter duration the consonants are catagorised based on how hard or soft they pronunce. க்,ச்,ட்,த்,,ப்,ற் letters have a hardness to the sound when we pronounce them. They are called vallinam. ங்,ஞ்,ண்,ந்,ம்,ப் letters have a softness to the sound when we pronounce and does not require a lot of effort. They are called mellinam. The lettersய்,ர்,ல்,வ்,ழ்,ள் have a sound that is in between hardness and softness. They are called idaiyinam.

    இன எழுத்துகள்:The pairs

வல்லின எழுத்துக்களுக்கு மெல்லின எழுத்துக்கள் இனமாக வரும்.முயற்சியாலும் ஒலியாலும் பொருளாலும் இவை இன எழுத்துக்களாகக் கருதப் படுகிறது.,

    க்- ங்

    ச்-ஞ்

    ட்-ண்

    த்-ந்

    ப்-ம்

    ற்-ன்

மெல்லின எழுத்துக்கள் கால அளவு, பொருள் இதனால் ஒரு இனமாகக் கருதப்படும்.

 ய்- ர்

ல்-வ்

ழ்-ள்

The hard sounding letters (vallinam) will have the soft sounding letters(mellinam) as their pairs. The sound and the meaning makes them pairs.

    க்- ங்

    ச்-ஞ்

    ட்-ண்

    த்-ந்

    ப்-ம்

    ற்-ன்

The duration of the sounds, and the meanings make the idaiyinam pair with each other.

    ய்- ர்

    ல்-வ்

    ழ்-ள்

மெய்மயக்கம்:Mey mayaakkam

ஒரு சொல்லில் மெய்யெழுத்துக்கள் இரண்டு தொடர்ந்து வருவது மெய்மயக்கம் எனப்படும். ஒரு மெய்யெழுத்தைத் தொடர்ந்து அதேக் குடும்பத்தைச் சார்ந்த உயிர் மெய் எழுத்து சேர்ந்து வரும் போது அது உடனிலை மெய்மயக்கம் என்று அழைக்கப்படும்.

    செந்நீர்

    தண்ணீர்

    கன்னம்

    பக்கம்

    தாத்தா

    எச்சம்

    குப்பம்

ஒரு மெய் எழுத்தைத் தொடர்ந்து அதே மெய்யழுத்து வராமல் வேறு உயிர்மெய் எழுத்து சேர்ந்து வரும்.இது வேற்றுநிலை மெய்மயக்கம் எனப்படும். அப்படி வரும் எழுத்துக்கள் இன எழுத்துக்களாக இருப்பதைக் காணலாம்.

    தாழ்ப்பாள்

    கல்வி

    சந்தை

    ஐம்பது

    திங்கள்

    தூண்டில்

    ஒன்று

மெய் எழுத்துக்கள் உயிரெழுத்தோடு சேர்ந்து ஒரு சொல்லுக்குப் பொருள் வடிவம் கொடுக்க உதவுகின்றன. பலவித ஒலிகளை உள்ளடக்கிய இவ்வெழுத்துக்கள். உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து உயிர் மெய் எழுத்துக்களாக உருவாகின்றன.

When two consonants follow each other in one word it is called mey mayakkan There are two types of mey mayaakkam. When the two consonants are of the same family they are called udanillai mey mayyakkam(The same consonants type) Look at the samples carefully. We can see the consonants are followed by the same family uirmey letters.

    செந்நீர்

    தண்ணீர்

    கன்னம்

    பக்கம்

    தாத்தா

    எச்சம்

    குப்பம்

When the two consonants belong to two different families of letters, it is called vettRRunilai mey mayakkam(Two different consonants type) Look at the samples to see the consonants is not followed by the same letter family. Note that the consonants are pairs.

    தாழ்ப்பாள்

    கல்வி

    சந்தை

    ஐம்பது

    திங்கள்

    தூண்டில்

    ஒன்று

In conclusion, the consonants combine with the vowels to help form words with meaning, Since these words contains different kind of sounds, they can interact with vowels to create a new family of letters called uyir meiy. Uyir being the vowels the life of the language and meiy being the consonants the structure of the language.

error: Copyrights: Content is protected !!