Category: உயிர்மெய் எழுத்துகள்

  • பட வார்த்தைகள்

    சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் . அதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். இந்த முறையை ஆங்கில மொழியில் கண்டு பிடித்தவர். Edward William Dolch. இவர் 1948 ஆம் ஆண்டு இதை  “Problems in Reading” என்ற தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய ஆங்கில சொற்களை ஒட்டி எழுதப்பட்ட சிலதமிழ் சொற்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    1. அங்கே
    2. அது
    3. அப்பா
    4. அம்மா
    5. அவர்
    6. அவள்
    7. அவன்
    8. ஆண்
    9. இங்கே
    10. இது
    11. இவர்
    12. இவள்
    13. இவன்
    14. உள்ளே
    15. உன்
    16. எங்கே
    17. எடு
    18. எது
    19. எலி
    20. எவர்
    21. எவள்
    22. எவன்
    23. என்
    24. என்ன
    25. ஏன்
    26. கீழே
    27. குதி
    28. கை
    29. கொடு
    30. சிறியது
    31. தை
    32. நட
    33. நாய்
    34. நான்
    35. நீ
    36. படி
    37. பாடு
    38. புலி
    39. பூனை
    40. பெண்
    41. பெரியது
    42. போ
    43. மேலே
    44. யார்
    45. யானை
    46. வா
    47. விடு
    48. வீடு
    49. வெளியே
    50. வை

      பட வார்த்தைகள்
      பட வார்த்தைகள்

    Sight words

    Sight words are frequent words that the children keep them in their memory thus starting to read sentences faster. This concept was introduced by Edward William Dolch in 1948 through his book “Problems in Reading”. These Tamil words are created on the basis of his list.

    1. அங்கே(angay)- there
    2. அது (athu)=that
    3. அப்பா(appaa)-father
    4. அம்மா(ammaa) – mother
    5. அவர் (avar)- he with respect
    6. அவள்(avaLL)-she
    7. அவன்(avan)- he
    8. ஆண் (aaNn)-male
    9. இங்கே(ingay) -here
    10. இது(ithu)-this
    11. இவர் (ivar)-he who is closer
    12. இவள்(ivaL)-she who is closer
    13. இவன் (ivan)-he  who is closer
    14. உள்ளே(wuLLay)-inside
    15. உன் (un)-you
    16. எங்கே (engay) -where
    17. எடு(edu)-take
    18. எது (ethu) -which
    19. எலி(eli)-rat
    20. எவர் (evar)-who
    21. எவள் (evaLL)who female form
    22. எவன்(evan) who male form
    23. என்(yen)-mine
    24. என்ன(enna)-what
    25. ஏன் (ayen)-why
    26. கீழே (keezhay)- down
    27. குதி (kuthi) -jump
    28. கை (kai)-hand
    29. கொடு (kodu)-give
    30. சிறியது(ciRiyathu)=small
    31. தை(thai)-sew
    32. நட (nada)-walk
    33. நாய்(naai)-dog
    34. நான்(naan)- me
    35. நீ (nee)-you
    36. படி (paddi)-read
    37. பாடு (paadu)-sing
    38. புலி(puli)-tiger
    39. பூனை(puunai) -cat
    40. பெண்(peNn)-female
    41. பெரியது(perriyathu)-big
    42. போ (pohh)-go
    43. மேலே (maylay)-up
    44. யார்(yaar)-who
    45. யானை (yaanai)-elephant
    46. வா(vaa) come
    47. விடு(vidu) let go
    48. வீடு (veedu)-house
    49. வெளியே (veLLiyay) -outside
    50.  வை (vai)-put
  • “ர்” “ற்” வேறுபாடு

    “ர்” “ற்” என்ற இரண்டு எழுத்துகளுமே மெய் எழுத்துகள். இவற்றின் ஒலியும் ஒன்று போலவே ஒலிக்கும்.ஆனால் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது.

    • ·”ற்” ஒரு வல்லின மெய்யெழுத்து இதைச் சற்று அழுத்தி உச்சரிக்க வேண்டும். இதைப் பெரிய”ற் “என்று சொல்லலாம்.
    • ·”ர்” இடையினத்தைச் சேர்ந்த மெய்யெழுத்து அதனால் அதன் ஓசை “ற்” எழுத்தைவிட சற்று இறங்கி இருக்கும். இதைச் சின்ன “ர்” என்று சொல்லலாம்.
    • ·”ற்”  மெய் எழுத்து சொல்லின் கடைசியில் வராது.
    • “ர்” மெய் எழுத்து சொல்லின் கடைசியில் வரும்.
     "ற்" "ர்"
    “ற்” “ர்” வேறுபாடு
    “ற்” “ர்” வேறுபாடு

    The difference in “ர்” “ற்”

    The two letters “ர்” “ற்” are consonants. They have similar sounds,yet their differences are very important

    • ·”ற்” is a hard consonant. One has to pronounce it with little pressure. It is referred as big ·”ற்”(irr)
    • ·”ர்” is a medial consonants. It’s pronunciation has lesser pressure, It is referred as small “ர்”(ir)
    • The consonant·”ற்”  will not be a ending sound of a word.
    • The consonant “ர்” can form a ending sound of the word.
  • வேறுபாடு

    ஏன் கவனிக்க வேண்டும்?

    ண்,ந்,ன் ஆகிய மூன்று மெய்யெழுத்துக்களை கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். இவை தோற்றத்தில் வேறு பட்டிருந்தாலும் ஒலி அளவில் ஒரே மாதிரியாக இருக்கும். இவை உயிர் மெய் எழுத்துக்களாக மாறும் போது குழப்பம் இன்னும் அதிகரிக்கலாம் எனவே இந்த எழுத்துக்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை கவனிக்க வேண்டும்.

      The difference between ண்,ந்,ன்

    The difference

    Why notice?

    The three consonants though look different they have similar sounds. When they transform in to uyir mey letters the confusion increases too. So it is important to understand the basic differences.

    என்ன வேறுபாடு?

    • ந் என்ற  மெய் எழுத்து சொல்லின் இடையிலேயே வரும்.
    • ண் என்ற மெய் எழுத்தும் ன் என்ற மெய் எழுத்தும் சொல்லின் இறுதியிலிம் இடையிலும் வரும்
    • உயிர் மெய் எழுத்தாக மாறி வரும் போது ண் மெய் எழுத்துன் குடும்பம் சொல்லின் முதலில் வராது
    • உயிர் மெய் எழுத்தாக மாறி வரும் போது ந் மெய் எழுத்துக்களின் குடும்பம் ஒரு சொல்லின் முதலில் வரும். இறுதியில் வராது
    • உயிர் மெய் எழுத்தாக மாறி வரும் போது ன் மெய் எழுத்துன் குடும்பம் சொல்லின் முதலில் வராது

    ண் என்ற மெய் எழுத்தையும் ன் என்ற மெய் எழுத்தையும் சரியாகப் பயன் படுத்த வேண்டும் இல்லை என்றால் பொருள் மாறி விடும்.

    1. ஆண் (male)ஆன்(to control)
    2. உண் (to eat)உன் (your)
    3. ஊண்(food)ஊன் (flesh or muscle)
    4. எண் (number) என் (my)
    5. ஏண்(strength) ஏன் (why)

    What is the difference?

    • The consonant “ந்” will come in the middle of the words only.
    • The consonant “ண்” and the consonant “ன்” will come at the middle and at the end of words
    • When the consonant “ண்” becomes a uyir meiy it will not come in the beginning of any word
    • When the consonant “ந்” becomes a uyir meiy it will only come at the beginning of the word. It will not come at the end of a any word
    • When the consonant “ன்” becomes a uyir meiy it will not come in the beginning of any word

    The letters ண் and ன் have to be used correctly otherwise the meaning of the word will change.

    1. ஆண் (male)ஆன்(to control)
    2. உண் (to eat)உன் (your)
    3. ஊண்(food)ஊன் (flesh or muscle)
    4. எண் (number) என் (my)
    5. ஏண்(strength) ஏன் (why)
  • இதுவரை நாம் பார்த்த உயிர் மெய் எழுத்துக்களும் அவற்றின் ஆங்கில ஒலி அடையாளங்களுடன் முழு அட்டவணையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை நன்கு அறிந்து கொண்டபின் நாம் தமிழ் சொற்களை வாசிக்கக் முடியும். புது சொற்களை வாசிக்க ஆரம்பிக்கும் போது இந்த அட்டவணை மிகவும் உதவியாக இருக்கும்.

    uyirmeyChart
    Attached is a table of Uyirmiey chart of Tamil Letters . English pronunciation is also given in the table. Learning and recognizing these letters will help us read Tamil words. This also can be a reference when we learn new words.

  • உயிர் எழுத்துக்களின் பன்னிரெண்டாவது எழுத்து “ஓள” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓள”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.

    The twelfth vowel “ஓள” (ow) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓள” (ow) and have a longer sound duration of two seconds.
    ஒளகார உயிர்மெய்

    எப்படி மாறுகின்றன?

    How do they change?

    ஒளகாரக் குறி

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் ஒற்றை கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து ள வடிவமுள்ள ஒலியை நீட்டும் குறியீடு வரும்.. இந்தக் குறியீடு ள என்ற உயிர்மெய் எழுத்திலிருந்து வேறு பட்டது. இந்தக் குறிக்கு என்று தனியாக ஒலிவடிவம் ஏதும் இல்லை. ஒலி நீண்டு ஒலிக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இந்தஒளகார வடிவ மாற்ற விதி எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

    The consonants will have the symbol called single horn preceding them. The symbol with the shape of ள will come after the consonants to indicate the elongated sound of the letter. This shape is different form the letter ள. This does not have a sound. It is nearly a shape that shows the letter has a longer sound duration.This rule applies to all the consonants.

    ”ஓள”(ow) is pronounced as ow like in the word “owl”

    க்+ஓள= கெள ik+ow=kow as in cow
    ங்+ஓள= ஙெள ing+ow=ngow
    ச்+ஓள= செள ich+ow=chow chow as in chow
    ஞ்+ஓள= ஞெள inj+ow=njow
    ட்+ஓள= டெள it+ow=tow tow as in town
    ண்+ஓள= ணெள iNn+ow=Nnow Nnow as is now
    த்+ஓள= தெள ith+ow=thigh
    ந்+ஓள= நெள inth+ow=Now Now as in now
    ப்+ஓள= பெள ip+ow= pow pow as in pow
    ம்+ஓள= மெள im+ow=mow mow as in mow
    ய்+ஓள= யெள iy+ow=yow
    ர்+ஓள= ரெள ir+ow=row row
    ல்+ஓள= லெள il+ow=low low as in loud
    வ்+ஓள= வெள iv+ow=vow vow as in vow
    ழ்+ஓள= ழெள izhl+ow=
    ள்+ஓள= ளெள ILl+ow=Illow
    ற்+ஓள= றெள irr+ow= irrow
    ன்+ஓள= னெள in+ow =now now as in now

  • உயிர் எழுத்துக்களின் பதினோராவது எழுத்து “ஓ” பதினெட்டு மெய் ஓழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓ”வின் ஓலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.

    The eleventh Tamil vowel “ஓ” (ohh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓ” (ohh) and have a longer sound duration of two seconds.
    ஓகார உயிர்மெய்

    எப்படி மாறுகின்றன?

    How do they change?

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் இரட்டைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

    The consonants will have the symbol called double horn preceding them. The supporting will come after the consonants. It applies to all the consonants.
    இரட்டைக் கொம்பும் துணைக்காலும்

    ”ஓ”(ohh) is pronounced as ohh like in the word “ohh” Note that the words may be similar but one need to lengthen the sound of the letter to two seconds.

    க்+ஓ= கோ ik+ohh=kohh as in coat
    ங்+ஓ= ஙோ ing+ohh=ngohh
    ச்+ஓ= சோ ich+ohh=chohh chohh as in choke
    ஞ்+ஓ= ஞோ inj+ohh=njohh
    ட்+ஓ= டோ it+ohh=tohh tohh as in tone
    ண்+ஓ= ணோ iNn+ohh=Nnohh Nnohh as is no
    த்+ஓ= தோ ith+ohh=thigh
    ந்+ஓ= நோ inth+ohh=Nohh Nohh as in note
    ப்+ஓ= போ ip+ohh= pohh pohh as in pope
    ம்+ஓ= மோ im+ohh=mohh mohh as in mobile
    ய்+ஓ= யோ iy+ohh=yohh
    ர்+ஓ= ரோ ir+ohh=rohh rohh as in rope
    ல்+ஓ= லோ il+ohh=lohh lohh as in load
    வ்+ஓ= வோ iv+ohh=vohh vohh as in vocab
    ழ்+ஓ= ழோ izhl+ohh=
    ள்+ஓ= ளோ ILl+ohh=Illohh
    ற்+ஓ= றோ irr+ohh= irrohh
    ன்+ஓ= னோ in+ohh =nohh nohh as in noble

  • உயிர் எழுத்துக்களின் பத்தாவது எழுத்து “ஒ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஒழுத்துக்களை உருவாக்குகிறது. “ஒ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாக மாறுகின்றன.

    The tenth Tamil vowel “ஒ” (oh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஒ” (oh) and have a shorter sound duration of one second.

    ஒகார உயிர்மெய்

    எப்படி மாறுகின்றன?

    How do they change?

    ஒற்றைக் கொம்பும் துணைக்காலும்

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் ஒற்றைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

    The consonants will have the symbol called Single horn preceding them. The supporting will come after the consonants. It applies to all the consonants.
    ”ஒ”(oh) is pronounced as oh like in the word toe

    க்+ஒ= கொ ik+oh=koh as in coat
    ங்+ஒ= ஙொ ing+oh=ngoh
    ச்+ஒ= சொ ich+oh=choh choh as in choke
    ஞ்+ஒ= ஞொ inj+oh=njoh
    ட்+ஒ= டொ it+oh=toh toh as in toe
    ண்+ஒ= ணொ iNn+oh=Nnoh Nnoh as is no
    த்+ஒ= தொ ith+oh=tho
    ந்+ஒ= நொ inth+oh=Noh Noh as in know
    ப்+ஒ= பொ ip+oh= poh poh as in poke
    ம்+ஒ= மொ im+oh=moh moh as in mope
    ய்+ஒ= யொ iy+oh=yoh
    ர்+ஒ= ரொ ir+oh=roh roh as in row
    ல்+ஒ= லொ il+oh=loh loh as in low
    வ்+ஒ= வொ iv+oh=voh voh as in vote
    ழ்+ஒ= ழொ izhl+oh=
    ள்+ஒ= ளொ ILl+oh=Illoh
    ற்+ஒ= றொ irr+oh= irroh
    ன்+ஒ= னொ in+oh =noh noh as in nope

error: Copyrights: Content is protected !!