Category: தமிழ் மெய் எழுத்துகள்

  • உயிர் எழுத்துக்களின் நான்காவது எழுத்து “ஈ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஈ”யின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.
      ஈகார உயிர்மெய்

    The fourth Tamil vowel “ஈ”(ee) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel”ஈ”(ee) and have a longer sound duration of two seconds.

    எப்படி மாறுகிறது?

    மெய் எழுத்தின் தலை மேல் சுழிக்கொக்கி என்ற குறியீடு சேரும். இநத சுழிக்கொக்கி நீண்ட ஒலியைக் குறிக்கும்.

    ஈகாரக் குறியீடு
    The forth vowel “ஈ”(ee) merges with the consonants to make the eighteen uyirmey letters.
    The consonants will have a
    symbol called curled hook on their head instead of a dot.

    1. க்+ஈ= கீ   ik+ee=kee  kee as in keep
    2. ங்+ஈ= ஙீ  ing+ee=ngee there
    3. ச்+ஈ= சீ   ich+ee=chee  chee as in cheap
    4. ஞ்+ஈ= ஞீ   inj+ee=njee
    5. ட்+ஈ= டீ    it+ee=tee   tee as in team
    6. ண்+ஈ= ணீ  iNn+ee+Nnee Nnee as in knead
    7. த்+ஈ= தீ   ith+ee=thee   thee as in theme
    8. ந்+ஈ= நீ   inth+ee=Nee  Nee as in Neem
    9. ப்+ஈ= பீ  ip+ee= pee   pee as in peel
    10. ம்+ஈ= மீ   im+ee=mee mee as in meet
    11. ய்+ஈ= யீ   iy+ee=yee   yee as in eel
    12. ர்+ஈ= ரீ   ir+ee=ree  ree as in reed
    13. ல்+ஈ= லீ   il+ee=lee  lee as in leap
    14. வ்+ஈ= வீ   iv+ea=vee vee as in weep
    15. ழ்+ஈ= ழீ   izhl+ee=zhli
    16. ள்+ஈ= ளீ   ILl+ee=ILlee
    17. ற்+ஈ= றீ   irr+ea rree   ree as in read
    18. ன்+ஈ= னீ   in+ea=nee nee as in need
  • தமிழ் எழுத்துக்களின் உயிரான  உயிர் எழுத்துக்களும், மெய்யான மெய் எழுத்துக்களும் ஒன்று சேர்ந்து மனிதன் எல்லா ஒலிகளுக்கும்  உயிர்மெய் எழுத்துக்கள் என்ற பெயரால்  வரிவடிவம் கொடுக்கின்றன. அதில் முதலில் வருவது அகர உயிர் மெய்.

    உயிர் எழுத்து “அ” மெய் எழுத்துக்கள் பதினெட்டோடு கலந்தால் ஏற்படும் வரி வடிவ மாற்றத்தையும் ஒலி மாற்றத்தையும் இங்குப் பார்க்கலாம்.

    க்+அ=க

    மெய்யெழுத்து”க்”ன் ஒலியோடு உயிரெழுத்தின் ஒலி “அ”   இணையும் போது எழும்பும் “க்”ஒலிவடிவம் “க” என்ற எழுத்தாக வரிவடிவம் பெறுகிறது.இது போல பதினெட்டு மெய் எழுத்துக்களோடும் அகரம் கலக்கிறது.
    இந்த அகர உயிர்மெய் எழுத்துக்கள்  ஒரு மாத்திரை அளவைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாகும்.

     அகர உயிர்மெய்

    The Tamil vowels, the life of the language, and the consonants that give structure to the language mix together to make all the sounds that is humanly possible. We will see what happens the vowel அ interacts with the eighteen consonants

    எப்படி மாறுகிறது?

    How do they change?

    இந்த வரிவடிவத்தில் ஒவ்வோரு மெய் எழுத்தும் அதன் தலையின் மேலுள்ள புள்ளியை இழக்கிறது.
    The consonants when writing in this form loose their dot on top of their head.
    say the vowel அ as “ah” like in the word “about”.

    க்+அ= க

    ik+a=ka

    The sound ik(க்) mingles with a(அ) makes the sound ka(க).Like wise the vowel அ interacts with all the consonants. They have a one second duration to sound out the letter.

    1. க்+அ= க ik+a=ka
    2. ங்+அ= ங ing+a=nga
    3. ச்+அ= ச ich+a=cha
    4. ஞ்+அ= ஞ inj+a=nja
    5. ட்+அ= ட it+a=ta
    6. ண்+அ= ண iNn+a-Nna
    7. த்+அ= த ith+a=tha
    8. ந்+அ= ந inth+a=Na
    9. ப்+அ= ப ip+a=pa
    10. ம்+அ= ம im+a=ma
    11. ய்+அ= ய iy+a=ya
    12. ர்+அ= ர ir+a=ra
    13. ல்+அ= ல il+a=la
    14. வ்+அ= வ iv+a=va
    15. ழ்+அ= ழ izh+a=zha
    16. ள்+அ= ள iLl+a=ILa
    17. ற்+அ= ற irr+a=rra
    18. ன்+அ= ன in+a=na
  • பிரிவுகள்

    தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும்.
    ஒரு மரத்தைப் போலவே தமிழ் மெய் எழுத்துக்கள் அவற்றின் ஒலிக்கும் தன்மை கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன.
    மெய் எழுத்துக்கள் தங்களின் ஒலியைப் பொறுத்து வல்லினம், மெல்லினம்,இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். வல்லின எழுத்துக்கள் ஆறு. க்,ச்,ட்,த்,ப்,ற் வல்லின எழுத்துக்களாகும். இந்த எழுத்துக்களின் உச்சரிப்ப்பு வலுவான மூச்சுக்காற்று கொடுக்கும் அழுத்தத்தால் வலுமையாக இருக்கும். மெல்லின எழுத்துக்களும் ஆறு தான். ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகியவை மெல்லின எழுத்துகள் ஆகும். மெல்லிய ஓசைக் கொண்ட இந்த எழுத்துக்களை ஒலிக்க அதிக முயற்சி தேவையில்லை இடையின எழுத்துக்களும் ஆறு எழுத்துக்கள் தான். ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகியவை இடையின எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை ஒலிக்கத் தேவையான முயற்சி நடுத்தரமாக இருக்கும். ஒலி ஓசையும் கடினமாகவோ அல்லது மென்மையாகவோ இல்லாமல் இடையில் வரும்.

    மெய் எழுத்துக்களின் பிரிவுகள்

    Categorization

    The Tamil consonants forms the body of the language. Think of the consonants as tree. The tree has three main parts. The trunk, the leaves and the flowers. The tree trunk is the hardest to touch, The flowers have the softest texture,and the leaves have a in-between texture.
    Like a tree tamil consonants are divided in to three groups based on the way we pronounce them. Each group has six letters.
    The consonants are categorized based on how hard or soft they pronounce. க்,ச்,ட்,த்,,ப்,ற் letters have a hardness to the sound when we pronounce them. They are called vallinam. ங்,ஞ்,ண்,ந்,ம்,ப் letters have a softness to the sound when we pronounce and does not require a lot of effort. They are called mellinam. The lettersய்,ர்,ல்,வ்,ழ்,ள் have a sound that is in-between hardness and softness. They are called idaiyinam.

  • தமிழ் மெய் எழுத்துக்களை எழுதும் பயிற்சி

    தமிழ் மெய் எழுத்துக்களை எழுதுவதே ஒரு கலை.  பார்வைக்கு எழுதுவது கடினமாகத் தோன்றினாலும்  ஒரு வரி வடிவ  ஓவியமாக இவற்றை எழுதி விடலாம்.  கீழே உள்ள படங்கள்  மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு  உதவி செய்யும். முயன்று பார்கள். சித்திரமும் கைப் பழக்கம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துக்களை  எழுதிப் பழகினாலே  சித்திரம் வரையும் கலை தானாய் நமக்கு வந்து விடும்.

    முயன்று பாருங்கள்!

    Practice writing Tamil consonants

    Writing Tamil consonants is an art. The letters look hard to write but one can draw them as a line drawing easily. It is said that the art of drawing comes with practice, but for me practicing the Tamil letters itself will give you the art of drawing will come naturally.

    Try it

  • தமிழ் மெய் எழுத்துக்கள்

    உயிர் எழுத்துக்கள் அடிப்படை ஒலி வடிவமாக  தமிழ் மொழிக்கு உயிர்  கொடுக்கின்றன. அந்த உயிர் ஒலிகளைத் தாங்கிச் சொற்களை வடிவமைக்க உதவுவது மெய் எழுத்துக்கள். உயிருக்கு உடல் உதவுவது போல இவை இயங்குவதால் இவை மெய் எழுத்துக்கள் என அழைக்க்கபடுகின்றன..  மெய் எழுத்துக்கள்  உயிர் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் அவை தனியாக இயங்க இயலாது. மெய் எழுத்துக்கள் பதினெட்டு. அவை

    1. க்
    2. ங்
    3. ச்
    4. ஞ்
    5. ட்
    6. ண்
    7. த்
    8. ந்
    9. ப்
    10. ம்
    11. ய்
    12. ர்
    13. ல்
    14. வ்
    15. ழ்
    16. ள்
    17. ற்
    18. ன்

    ஆகும் இவை ஒலிப்பதற்கு அரை மாத்திரை அதவாது அரை வினாடி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒற்று என்றும் அழைக்கப் படுகின்றன.

     Tamil consonants with their pronounciation  in English
    Tamil consonants

    Tamil Consonants

    Tamil Vowels give shape to the basic sounds thus they breathe life to the Tamil Language. Tamil consonants helps the vowels to create the structure for the words. If vowels are life to the language , the consonants act as a body to the language. There are eighteen consonants in the Tamil language. They are

    1. ik (க்)
    2. ing (ங்)
    3. ich (ச்)
    4. inj (ஞ்)
    5. it (ட்)
    6. iNn (ண்)
    7. ith(த்)
    8. inth (ந்)
    9. ip (ப்)
    10. im (ம்)
    11. iy (ய்)
    12. ir (ர்)
    13. il (ல்)
    14. iv(வ்)
    15. izhl (ழ்)
    16. ILL (ள்)
    17. irr(ற்)
    18. in (ன்)

    They take half a second to pronounce. They are called ottru.

error: Copyrights: Content is protected !!