தமிழ் சொற்களை எளிதாக வாசிக்கவும் எழுதவும் கற்போம். விளையாட்டு மூலம் எழுத்துகளை கற்போம்
பாடிக் கற்கலாம்
பாரதியார் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்தமிழகத்தில் வாழ்ந்த ஒர் எழுச்சி மிகு மகா கவி ஆவார். அவருடைய பிரபலமான பாடல்களில் முக்கியமானவை சில குழந்தைப் பாடல்கள்.அதில் ஒன்று தான் “ஓடி விளையாடி பாப்பா. அந்தப் பாடலைக் கொண்டு தமிழைக் கற்கலாம். அந்தப் பாடலை இங்குப் பார்த்தும், கேட்டும் முதலில் மகிழுங்கள்.பாடலை மனதிற்குள் பதிய வைத்துக் கொள்ளூங்கள்.
Bharathiyar is well-known poet in Tamil Nadu during India’s freedom struggle. He is a poet, writer and a publisher. Some of his popular poems are written for children. Odi villayaadu paappa is one among them. Please watch the video to see how the song is sung. Watching the video helps the students get to listen to the song. They also try to understand the meaning behind the song. We will learn Tamil using his poem next.
தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும்.
ஒரு மரத்தைப் போலவே தமிழ் மெய் எழுத்துக்கள் அவற்றின் ஒலிக்கும் தன்மை கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன.
மெய் எழுத்துக்கள் தங்களின் ஒலியைப் பொறுத்துவல்லினம், மெல்லினம்,இடையினம்என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். வல்லின எழுத்துக்கள் ஆறு. க்,ச்,ட்,த்,ப்,ற் வல்லின எழுத்துக்களாகும். இந்த எழுத்துக்களின் உச்சரிப்ப்பு வலுவான மூச்சுக்காற்று கொடுக்கும் அழுத்தத்தால் வலுமையாக இருக்கும். மெல்லின எழுத்துக்களும் ஆறு தான். ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகியவை மெல்லின எழுத்துகள் ஆகும். மெல்லிய ஓசைக் கொண்ட இந்த எழுத்துக்களை ஒலிக்க அதிக முயற்சி தேவையில்லை இடையின எழுத்துக்களும் ஆறு எழுத்துக்கள் தான். ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகியவை இடையின எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை ஒலிக்கத் தேவையான முயற்சி நடுத்தரமாக இருக்கும். ஒலி ஓசையும் கடினமாகவோ அல்லது மென்மையாகவோ இல்லாமல் இடையில் வரும்.
மெய் எழுத்துக்களின் பிரிவுகள்
Categorization
The Tamil consonants forms the body of the language. Think of the consonants as tree. The tree has three main parts. The trunk, the leaves and the flowers. The tree trunk is the hardest to touch, The flowers have the softest texture,and the leaves have a in-between texture.
Like a tree tamil consonants are divided in to three groups based on the way we pronounce them. Each group has six letters.
The consonants are categorized based on how hard or soft they pronounce. க்,ச்,ட்,த்,,ப்,ற் letters have a hardness to the sound when we pronounce them. They are calledvallinam. ங்,ஞ்,ண்,ந்,ம்,ப் letters have a softness to the sound when we pronounce and does not require a lot of effort. They are called mellinam. The lettersய்,ர்,ல்,வ்,ழ்,ள் have a sound that is in-between hardness and softness. They are called idaiyinam.
தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள் ஒலி வேறுபாட்டின் மூலம் குறில் நெடில் ஒற்று ஆகியவை கற்றுக் கொடுக்கப் படுகிறது.
குறில்
ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள் குறில் என்று அழைக்கப்படும்.
குறில் உயிர் எழுத்துகள் அ, இ, உ, எ, ஒ
என்பன.
நெடில்
ஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகியவை நெடில் எழுத்துகள் ஆகும்
ஒற்று
ஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுக்கும் எழுத்துகள் ஒற்று என்று அழைக்கப்படுகிறன.”ஃ
” ஒற்று ஆகும்
A poster for short_long Tamil Vowels
இந்த விளையாட்டு காட்சி வில்லைகளாகத் தயாரிக்கப் பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பயன் படுத்தும் வகையாக இங்கு ஒரு கோப்பும் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோப்பில் ஒலி ஒரு சில இடங்களில் வேலை செய்யாது என்பதைப் புரிந்து கொள்ளவும்.
தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் வசதிக்காக குறில்_ நெடில்கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Learning Short and long Tamil vowels through games
To read Tamil correctly one has to understand the grammar behind the letters. This will help the student recognize the letters and read the words properly. For the children to grasp tamil language it is not enough that they see adn hear the letters. They need to play and interact with the letters to use their learning in a practical way
In this lesson through sounds the students will learn the long and short vowels
The pronunciation of these letters depends upon how long it takes to make the particular sound. The unit of measure is called a Mathirai. A mathirai is the time it takes to snap your fingers or blink your eyes naturally. It is usually a second
Short vowels
When a letter take a second to pronounce that letter is called kurril They are அ, இ, உ, எ, ஒ
Long vowels
When a letter take two seconds to pronounce it is called neddill.
Those letters are ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள
Ottru
when a letter has only half second sound duration,it is referred as otRRu
தனிமையில் வாடும் ஆடு ஒன்றுக்குக் கிடைத்த அன்பான நட்பைப் பற்றிப் படித்து மகிழுங்கள்
Book Cover
Enjoy reading the book about a lonely goat and how found a loving friendship.
விளையாடி கற்போம்- தமிழ் மெய் எழுத்துகள்
தமிழ் மெய் எழுத்துகள் பதினெட்டும் ஒரு சொல்லுக்கு முதலில் வராது அதனால் அவற்றை பழக ஒரு விளையாட்டை விளையாடலாம். சொற்களில் வரும் உச்சரிப்பிற்கு ஏற்ப மெய் எழுத்துகளை கண்டு பிடித்து சேர்க்கலாம். கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்திலிருந்து தேனீக்களை வெட்டி சரியான இடத்தில் ஒட்டவும். சொற்களின் உச்சரிப்பின் ஒலியே விளையாட்டிற்கு உதவ வேண்டும். இந்த விளையாட்டின் மூலம் மெய் எழுத்துகளை மறுபடியும் தெரிந்து கொள்வதோடு அவற்றின் வரிசையையும் மனதில் பதிய வைக்கலாம்.
தமிழ் மெய் எழுத்துகள் விளையாட்டு Tamil consonants
Play and learn Tamil consonants
Tamil consonants are eighteen. They do not come in the beginning of the words , so to practice them a game is introduced. In this game one need to match the bees according to the sound of the consonant in the word, IT is a great practice for pronouncing the words. This game is a review of Tamil consonants and their pronunciation as well as their order.
மெய் எழுத்து சொற்கள்
காக்கை
சங்கு
பூச்சி
பஞ்சு
தட்டு
வண்டு
நத்தை
ஆந்தை
பாம்பு
உப்பு
நாய்
மலர்
பல்லி
வெளவ்வால்
குமிழ்
தேள்
சிற்பம்
பன்றி
Tamil consonant words
காக்கை(kaakkie)-crow
சங்கு(sangu)-shell
பூச்சி(poochchi)-Insect
பஞ்சு(panju)=cotton
தட்டு(thattu)-Plate
வண்டு(vaNNdu(beetle)
நத்தை(naththai)-slug
ஆந்தை(aanthai)owl
பாம்பு(paambu) snake
உப்பு(wuppu)-salt
நாய் (naaiy) dog
மலர் (malar) flower
பல்லி(balli)-lizard
வெளவ்வால்(vowvvall)bat
குமிழ்(kumizhl)-bubble
தேள் (theyLL) Scorpion)
சிற்பம்(siRRpam)-statue
பன்றி(pandri)pig
சித்திர சொற்கள் மறுபார்வை
சொற்களை கண்டுபிடிக்கும் எளிமையான விளையாட்டு குழந்தைகளிடன் சூட்சும அறிவுக்கு ஒரு சவாலாகும். இந்த விளையாட்டின் போது அவர்களின் கவனம் சிதறாமல் விளையாடுவர்.
ஏற்கனவே அறிமுகமான அது, அங்கே, எங்கே, என்ன,பூ, பூனை, தீ, நாய் ஆகிய சொற்களை மீண்டும் மறுபார்வை செய்ய இந்த சின்ன விளையாட்டை பயன் படுத்தலாம். குழந்தைகள் தெரிந்த சொற்களை தேடும் போது தெரியாத பல எழுத்துகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
புதிர்
Tamil sight words review
Playing the game of word search helps the curious mind of the children. They play the game. They focus on the game without any distraction. This game helps them review the words they already know. The words are அது, அங்கே, எங்கே, என்ன,பூ, பூனை, தீ, நாய். While they look for these words they may also try to learn the letters they are not familiar with.
விளையாட்டாய்க் கற்கலாம்
குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம்.
Children learn through play. Through this board game. they can practice listening and identifying the Tamil vowels. The board game can be printed for use
You must be logged in to post a comment.