Category: Short and Long vowels

difference between short and long vowels

  • தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும்.

    இந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள் ஒலி வேறுபாட்டின் மூலம் குறில் நெடில் ஒற்று ஆகியவை கற்றுக் கொடுக்கப் படுகிறது.

    குறில்

    ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள் குறில் என்று அழைக்கப்படும்.
    குறில் உயிர் எழுத்துகள் அ, இ, உ, எ, ஒ
    என்பன.

    நெடில்

    ஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகியவை நெடில் எழுத்துகள் ஆகும்

    ஒற்று

    ஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுக்கும் எழுத்துகள் ஒற்று என்று அழைக்கப்படுகிறன.”ஃ
    ” ஒற்று ஆகும்

    a picture short_long Tamil Vowels
    A poster for short_long Tamil Vowels

    இந்த விளையாட்டு காட்சி வில்லைகளாகத் தயாரிக்கப் பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பயன் படுத்தும் வகையாக இங்கு ஒரு கோப்பும் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோப்பில் ஒலி ஒரு சில இடங்களில் வேலை செய்யாது என்பதைப் புரிந்து கொள்ளவும்.

    தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் வசதிக்காக  குறில்_ நெடில்கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Learning Short and long Tamil vowels through games

    To read Tamil correctly one has to understand the grammar behind the letters. This will help the student recognize the letters and read the words properly. For the children to grasp tamil language it is not enough that they see adn hear the letters. They need to play and interact with the letters to use their learning in a practical way

    In this lesson through sounds the students will learn the long and short vowels

    The pronunciation of these letters depends upon how long it takes to make the particular sound. The unit of measure is called a Mathirai. A mathirai is the time it takes to snap your fingers or blink your eyes naturally. It is usually a second

    Short vowels

    When a letter take a second to pronounce that letter is called kurril They are அ, இ, உ, எ, ஒ

    Long vowels

    When a letter take two seconds to pronounce it is called neddill.
    Those letters are ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள

    Ottru

    when a letter has only half second sound duration,it is referred as otRRu

    a picture short_long Tamil Vowels
    A poster for short_long Tamil Vowels

    This game is a power point slide show One can use the link . In some places the audio will not work. But for the convenience of the teachers

    Shor_ Longcan download the file here.

  • உயிர் எழுத்து சொற்கள்

    vowels

    கீழே சில உயிர் எழுத்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை உயிர் எழுத்துக்களை மறு பார்வை பார்க்க உதவும் இந்த சொற்களை தமிழ் அநிதம் இணைய தளத்தில்   விளையாட்டாக கற்கலாம்

    அ வார்த்தைகள்
    அ சொற்கள்
    • அம்மா(amma)
    • அணில்(aNNil)
    • அன்னம்(annam)
    ஆ வார்த்தைகள்
    ஆ சொற்கள்
    • ஆடு(aadu)
    • ஆந்தை(aNthai)
    • ஆல மரம்(aallamaram)
    இ வார்த்தைகள்
    இ சொற்கள்
    • இலை(elai)
    • இல்லம்(ellam)
    • இதழ்(ethazh)
    ஈ வார்த்தைகள்
    ஈ சொற்கள்
    • ஈட்டி(eette)
    • ஈ(ee)
    • ஈச்ச மரம்(eecha maram)
    உ வார்த்தைகள்
    உ சொற்கள்மு(eette)
    • உழவன்(wuzhavan)
    • உரல்(wural)
    • உப்பு(wuppu)
    ஊ வார்த்தைகள்
    ஊ சொற்கள்
    • ஊஞ்சல்(oohnjal)
    • ஊசி(oohsi)
    • ஊதல்(oohthal)
    எ வார்த்தைகள்
    எ சொற்கள்
    • எறும்பு(ehRRumbu)
    • எலி (ehli)
    • எட்டு(ehttu)
    ஏ வார்த்தைகள்
    ஏ சொற்கள்
    • ஏடு(audu)
    • ஏழு (ayzhu)
    • ஏணி(ayNNi)
    ஐ வார்த்தைகள்
    ஐ சொற்கள்
    • ஐஸ்வரியம்(ieswariyam)
    • ஐந்து(ienthu)
    • ஐங்கரன்(iengaran)
    ஒ  வார்த்தைகள்
    ஒ சொற்கள்
    • ஒட்டகம்(ohttagam)
    • ஒன்பது(ohnbathu)
    • ஒன்று(ondRu)
    ஓ வார்த்தைகள்
    ஓ சொற்கள்
    • ஓநாய்(ohhnnai)
    • ஓடம்(ohhdam)
    • ஓட்டம்(ohhttam)
    ஒள வார்த்தைகள்
    ஒள சொற்கள்
    • ஒளடதம்(Owdatham)
    • ஒளவை(owvai)
    • ஒளவியம்(owviyam)

    Tamil vowels

    Above words ae words that represent Tamil vowels. Learning them will reinforce Tamil vowels. These vowels can be learnt through games in the site TamilUnltd.

  • விளையாட்டாய்க் கற்கலாம்

    குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம்.

    உயிர் எழுத்துகள் விளையாட்டு
    உயிர் எழுத்துகள் விளையாட்டு

    Tamil vowels Game

    Play and learn

    Children learn through play. Through this board game. they can practice listening and identifying the Tamil vowels. The board game can be printed for use

  • அம்மா

    அம்மாவினால் கற்போம்

    தமிழில் அம்மா என்ற பொருளில் ஐந்து சொற்கள் இருக்கின்றன. அன்னையர் தினமான இன்று அந்த ஐந்து சொற்களையும் அதில் உள்ள எழுத்துக்களையும் தெரிந்து கொள்வோம்.
    மறு பார்வையிடப் போகும் உயிர் எழுத்துக்கள் அ, ஆ ஐ
    மறுபார்வையிடப் போகும் மெய் எழுத்துக்கள் த்,ம்,ய், ள்,ன்

    என்று உருவாகும் மா.தா, னை ஆகிய உயிர் எழுத்துக்களையும் இங்கு மறுபார்வை செய்யலாம்.

    அம்மா
    அ,ஆ ஆகிய உயிர் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வருகின்றன. ஐ இங்கு “னை” உயிர்மெய் எழுத்தை உருவாக்க உதவுகிறது.

    1. ம்+ஆ= மா
    2. த்+ஆ=தா
    3. ன்+ஐ=னை

    uyirmeiy

    இந்த எழுத்துக்கள் கூடி உருவாக்கும் சொற்கள் ஐந்து. அவை
    ammaWordList

    1. அம்மா
    2. அன்னை
    3. ஆத்தாள்
    4. தாய்
    5. மாதா

    -----

    amma

    uyirmeiy

    Let us learn through amma

    There are five words in Tamil that means mother. Let us learn those words and review the letters on mother’s day.
    Vowels for review are அ, ஆ ஐ
    consonants for review are த்,ம்,ய், ள்,ன்

    There will be review on Tamil uyirmeiy letters that are மா.தா, னை.
    அம்மாEnglish

    The vowels அ, ஆ come in the beginning of the words. The vowel ஐ is to create the letter னை
    uyirmeiy

    These letters make the following words

    1. அம்மா (amma)
    2. அன்னை (annai)
    3. ஆத்தாள் (aaththaaLL)
    4. தாய்(Thaai)
    5. மாதா(Maathaa)

    ammaWordList

  • உயிர் எழுத்துக்களின் ஐந்தாவது எழுத்து “உ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “உ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒருமாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறிலாக மாறுகின்றன.
     உகார உயிர்மெய்கள்The fifth Tamil vowel “உ”(wu) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel”உ”(wu) and have a shortersound duration of one second.

    எப்படி மாறுகிறது?

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு சுற்று, விழுது, இருக்கை என்று சொல்லப்படும் ஏதாவது ஒரு குறீயீடு  சேரும். க்,ட்,ம்,ர்,ழ்,ள் , ஆகியவை சுற்றுக் குறீயீட்டை ஏற்றுக் கு,டு,மு,ரு,ழு,ளு என மாறும். ங்.ச்.ப்,ய்,வ்  ஆகியவை  விழுது என்றக் குறியீட்டை சேர்த்துக் கொண்டு ஙு,சு,  பு,யு,வு  என மாறும்.ஞ்,ண்,த்,ந்,ல்,ள்,ற்,ன் ஆகியவை இருக்கை என்ற குறியீட்டைக் கொண்டு ஞு,ணு,து,நு,லு,ளு,று, னு என மாறும்.

    உகாரக் குறியீடுகள்
    The consonants will have have any one of these symbols: curve, aerial root and seat. The consonants க்,ட்,ம்,ர்,ழ்,ள் will have  the curve symbol and  change like கு,டு,மு,ரு,ழு,ளு.  The letters ங்.ச்.ப்,ய்,வ் will take the aerial root symbol and change ஙு,சு,  பு,யு,வு  like this. The consonants ஞ்,ண்,த்,ந்,ல்,ள்,ற்,ன் will have the symbol called seat and change in to ஞு,ணு,து,நு,லு,ளு,று, னு.

    1. க்+உ= கு   ik+wu=ku  ku as in kufi
    2. ங்+உ= ஙு  ing+wu=nguu
    3. ச்+உ= சு   ich+uu=chu  su as in sew
    4. ஞ்+உ= ஞு   inj+wu=njnu
    5. ட்+உ= டு    it+wu=tu  tu as in to
    6. ண்+உ= ணு  iNn+wu+Nnuu Nnuu as in canoe
    7. த்+உ= து   ith+wu=thu Thu as in enthusiasm
    8. ந்+உ= நு  inth+wu=Nu Nu as in noodle
    9. ப்+உ= பு  ip+wu= pu  pu as in put
    10. ம்+உ= மு   im+wu=mu mee as in meet
    11. ய்+உ= யு   iy+wu=yu   yu as in you
    12. ர்+உ= ரு   ir+wu=ru  ru as in rude
    13. ல்+உ= லு   il+wu=lu  lee as in leap
    14. வ்+உ= வு  iv+wu=vu vee as in weep
    15. ழ்+உ= ழு   izhl+wu=zhlu
    16. ள்+உ= ளு   ILl+wu=Illu illu as in illusion
    17. ற்+உ= று   irr+wu= rree   ree as in read
    18. ன்+உ= னு   in+wu =nee nee as in need
  • தமிழ்  மொழியின் சிறப்பு  ஒரு பொருளைக் கூற சில சமயங்களில் ஓர் எழுத்தேப்  போதுமானது. அஃதாவது எழுத்தின் வரிவடிவம்  அந்த எழுத்தை மட்டும் அடையாளம் காட்டாது ஒரு சொல்லாகவும்  இருக்கிறது.  அனைவருக்கும்  தெரிந்த அப்படிப் பட்ட சொற்கள் சில கை, தீ, பூ ஆகியவை. ஆனால் அவை எல்லாம் உயிர் மெய் எழுத்துக்கள். நாம் இதுவரை உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் மட்டுமே கற்றுள்ளோம்.  நம் மொழிக்கே உயிராகச் செயயல்படும் உயிரெழுத்துக்கள்     சொற்களாக செயல் பட்டிருக்கின்றனவா என்று அகராதிகளை ஆராய்ந்துப் பார்த்ததில் மன்னிரெண்டு  உயிரெழுத்துக்களில் “ஓள” என்ற உயிரெழுத்தைத் தவிர மற்ற எல்லா உயிரெழுத்துக்களும் ஆய்த எழுத்தும் செய்யுள்களில்  சொற்களாகப்  பொருள் கொடுத்து நிற்கின்றன.

    1.  அ=  Lord Vishnu
    2.  ஆ=   cow
    3.  இ= now,or this moment
    4.  ஈ= Fly  an insect
    5.  உ = Siva Sakthi
    6.  ஊ= permeate and also flesh or meat
    7.  எ= உவர் நிலம், Soil with high ph
    8.  ஏ= who, abundance,  ஐ= god or king, or beauty, minute, phlegm
    9. ஒ=equal, conform, agree ,consent
    10.  ஓ= flood gate  ஒள=
    11.  ஃ=solitariness.

    There are a lot of Tamil letters that  act as  words.     தீ means fire , கை means hand, பூmeans the flower.  These are words made out of the combined letter form of vowels and consonants. The above list shows how the vowels were used as one letter in ancient poems.

error: Copyrights: Content is protected !!