Blog

  • ஊகார உயிர்மெய்

    உயிர் எழுத்துக்களின் ஆறாவது எழுத்து “ஊ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஊ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.
     ஊகார உயிர்மெய்
    The sixth Tamil vowel “ஊ” (ooh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஊ” (ooh) and have a longer sound duration of two seconds.

    எப்படி மாறுகிறது?

    How do they change?

    ஊகாரக் குறியீடுகள்
    புள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு  கூட்டு,சுழிச்சுற்று,  இருக்கைக்கால்  கொண்டை என்று சொல்லப்படும் ஏதாவது ஒரு குறீயீடு  சேரும். க்  என்ற மெய்உஎழுத்து கூட்டு என்ற குறியீட்டைக் கொண்டு  கூ என்று வரும். ங் ,ச்,ப்,ய்,வ், ஆகியவை சுழிச்சுற்றுக் குறீயீட்டை ஏற்று ஙூ,சூ,பூ, யூ,வூ  என மாறும்.  ஞ்,ண்,த்,ந்,ல்,ற்,ன் ஆகியவை இருக்கைக்கால்   என்ற குறியீட்டைக் கொண்டு ஞூ,ணூ,தூ,நூ,லூ.றூ,னூ என மாறும்.ச்,ட்,ம்,ர்,ழ்,ள் ஆகியவை கொண்டை என்ற குறியீட்டைக் கொண்டு சூ,டூ, மூ,ரூ,ழூ,ளூ என மாறும்

    The consonants will have have any one of these symbol accesstion,curled curve, legged sea and crest. The consonant   க்  will be joined with a symbol called  accession and become   கூ. The consonants ங் ,ச்,ப்,ய்,வ்,will have  the curled  curve symbol and  change like ஙூ,சூ,பூ, யூ,வூ.  The consonants ஞ்,ண்,த்,ந்,ல்,ற்,ன் will have the symbol called  legged seat and change in to  ஞூ,ணூ, தூ,நூ,லூ.றூ,னூ. The consonants ச்,ட்,ம்,ர்,ழ்,ள் will have a symbol  crest on them and  will turn like சூ,டூ, மூ,ரூ,ழூ,ளூ.

    ”ஊ”(ooh) is prounced as ooh like in the word too

    1. க்+ஊ= கூ   ik+ooh=koo  koo as in cuckoo
    2. ங்+ஊ= ஙூ  ing+ooh=ngoo
    3. ச்+ஊ= சூ   ich+ooh=choo  choo as in chooser
    4. ஞ்+ஊ= ஞூ   inj+ooh=njoo
    5. ட்+ஊ= டூ    it+ooh=too  too as in too
    6. ண்+ஊ= ணூ  iNn+ooh=Nnoo Nnoo as in noodle
    7. த்+ஊ= தூ   ith+ooh=thoo
    8. ந்+ஊ= நூ inth+ooh=Noo Noo as in noon
    9. ப்+ஊ= பூ  ip+ooh= poo  poo as in pool
    10. ம்+ஊ= மூ   im+ooh=moo moo as in moon
    11. ய்+ஊ= யூ   iy+ooh=yoo
    12. ர்+ஊ= ரூ   ir+ooh=roo  roo as in rune
    13. ல்+ஊ= லூ   il+ooh=loo  loo as in loop
    14. வ்+ஊ= வூ  iv+ooh=voo  voo as in voodoo
    15. ழ்+ஊ= ழூ   izhl+ooh=zhloo
    16. ள்+ஊ= ளூ   ILl+ooh=Illoo
    17. ற்+ஊ= றூ   irr+ooh= irroo
    18. ன்+ஊ= னூ  in+ooh =noo noo as in snood
  • உகார உயிர்மெய்

    உயிர் எழுத்துக்களின் ஐந்தாவது எழுத்து “உ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “உ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒருமாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறிலாக மாறுகின்றன.
     உகார உயிர்மெய்கள்The fifth Tamil vowel “உ”(wu) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel”உ”(wu) and have a shortersound duration of one second.

    எப்படி மாறுகிறது?

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு சுற்று, விழுது, இருக்கை என்று சொல்லப்படும் ஏதாவது ஒரு குறீயீடு  சேரும். க்,ட்,ம்,ர்,ழ்,ள் , ஆகியவை சுற்றுக் குறீயீட்டை ஏற்றுக் கு,டு,மு,ரு,ழு,ளு என மாறும். ங்.ச்.ப்,ய்,வ்  ஆகியவை  விழுது என்றக் குறியீட்டை சேர்த்துக் கொண்டு ஙு,சு,  பு,யு,வு  என மாறும்.ஞ்,ண்,த்,ந்,ல்,ள்,ற்,ன் ஆகியவை இருக்கை என்ற குறியீட்டைக் கொண்டு ஞு,ணு,து,நு,லு,ளு,று, னு என மாறும்.

    உகாரக் குறியீடுகள்
    The consonants will have have any one of these symbols: curve, aerial root and seat. The consonants க்,ட்,ம்,ர்,ழ்,ள் will have  the curve symbol and  change like கு,டு,மு,ரு,ழு,ளு.  The letters ங்.ச்.ப்,ய்,வ் will take the aerial root symbol and change ஙு,சு,  பு,யு,வு  like this. The consonants ஞ்,ண்,த்,ந்,ல்,ள்,ற்,ன் will have the symbol called seat and change in to ஞு,ணு,து,நு,லு,ளு,று, னு.

    1. க்+உ= கு   ik+wu=ku  ku as in kufi
    2. ங்+உ= ஙு  ing+wu=nguu
    3. ச்+உ= சு   ich+uu=chu  su as in sew
    4. ஞ்+உ= ஞு   inj+wu=njnu
    5. ட்+உ= டு    it+wu=tu  tu as in to
    6. ண்+உ= ணு  iNn+wu+Nnuu Nnuu as in canoe
    7. த்+உ= து   ith+wu=thu Thu as in enthusiasm
    8. ந்+உ= நு  inth+wu=Nu Nu as in noodle
    9. ப்+உ= பு  ip+wu= pu  pu as in put
    10. ம்+உ= மு   im+wu=mu mee as in meet
    11. ய்+உ= யு   iy+wu=yu   yu as in you
    12. ர்+உ= ரு   ir+wu=ru  ru as in rude
    13. ல்+உ= லு   il+wu=lu  lee as in leap
    14. வ்+உ= வு  iv+wu=vu vee as in weep
    15. ழ்+உ= ழு   izhl+wu=zhlu
    16. ள்+உ= ளு   ILl+wu=Illu illu as in illusion
    17. ற்+உ= று   irr+wu= rree   ree as in read
    18. ன்+உ= னு   in+wu =nee nee as in need
  • ஈகார உயிர்மெய்

    உயிர் எழுத்துக்களின் நான்காவது எழுத்து “ஈ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஈ”யின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.
      ஈகார உயிர்மெய்

    The fourth Tamil vowel “ஈ”(ee) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel”ஈ”(ee) and have a longer sound duration of two seconds.

    எப்படி மாறுகிறது?

    மெய் எழுத்தின் தலை மேல் சுழிக்கொக்கி என்ற குறியீடு சேரும். இநத சுழிக்கொக்கி நீண்ட ஒலியைக் குறிக்கும்.

    ஈகாரக் குறியீடு
    The forth vowel “ஈ”(ee) merges with the consonants to make the eighteen uyirmey letters.
    The consonants will have a
    symbol called curled hook on their head instead of a dot.

    1. க்+ஈ= கீ   ik+ee=kee  kee as in keep
    2. ங்+ஈ= ஙீ  ing+ee=ngee there
    3. ச்+ஈ= சீ   ich+ee=chee  chee as in cheap
    4. ஞ்+ஈ= ஞீ   inj+ee=njee
    5. ட்+ஈ= டீ    it+ee=tee   tee as in team
    6. ண்+ஈ= ணீ  iNn+ee+Nnee Nnee as in knead
    7. த்+ஈ= தீ   ith+ee=thee   thee as in theme
    8. ந்+ஈ= நீ   inth+ee=Nee  Nee as in Neem
    9. ப்+ஈ= பீ  ip+ee= pee   pee as in peel
    10. ம்+ஈ= மீ   im+ee=mee mee as in meet
    11. ய்+ஈ= யீ   iy+ee=yee   yee as in eel
    12. ர்+ஈ= ரீ   ir+ee=ree  ree as in reed
    13. ல்+ஈ= லீ   il+ee=lee  lee as in leap
    14. வ்+ஈ= வீ   iv+ea=vee vee as in weep
    15. ழ்+ஈ= ழீ   izhl+ee=zhli
    16. ள்+ஈ= ளீ   ILl+ee=ILlee
    17. ற்+ஈ= றீ   irr+ea rree   ree as in read
    18. ன்+ஈ= னீ   in+ea=nee nee as in need
  • இகார உயிர்மெய்

    உயிர் எழுத்து “இ”மெய் எழுத்துக்களோடு இணையும் போது அவை “இ”யின் ஒலியைப் பெற்று குறிலாக ஒலிக்கும்.

    உயிர்மெய்3
    The vowel “இ” joins the consonants they have shorter duration of one second

    எப்படி மாறும்?

    How do they change?

    மெய் எழுத்துக்களோடு கொக்கி என்ற குறியீடு சேரும்.
    இகார உயிர்மெய்
    The vowel “இ” joins the consonants they loose their dot on the head but get a symbol called hook on top of them. They have shorter duration of one second.

    The vowel “இ”  is pronounced as  in ea in ea t

    1. க்+இ= கி   ik+ea=ki  ki as in kit
    2. ங்+இ= ஙி  ing+ea=ngi
    3. ச்+இ= சி   ich+ea=chi  chi as in chip
    4. ஞ்+இ= ஞிinj+ea=nji
    5. ட்+இ= டி it+ea=ti  ti as in tip
    6. ண்+இ= ணி iNn+ea+Nni  Nni as in knee
    7. த்+இ= தி ith+ea=thi thi as in thin
    8. ந்+இ= நி inth+ea=Ni  Ni as in Nibble
    9. ப்+இ= பி ip+ea= pi  pi as in pin
    10. ம்+இ= மி im+ea=mi mi as in mint
    11. ய்+இ= யி iy+ea=yi
    12. ர்+இ= ரி ir+ea=ri ri as in rim
    13. ல்+இ= லி il+ea=li li as in lid
    14. வ்+இ= வி iv+ea=vi vi as in win
    15. ழ்+இ= ழி izhl+ea=zhli
    16. ள்+இ= ளி ILl+ea=ILli
    17. ற்+இ= றி irr+ea rri rri as in brick
    18. ன்+இ= னி in+ea=ni ni as in nib
  • ஆகார உயிர்மெய்

    உயிர் எழுத்தின் இரண்டாம் எழுத்தான “ஆ” மெய் எழுத்துக்களோடு கலக்கும் போது அடுத்தப் பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன. அவை அனைத்தும் இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாக ஒலிக்கின்றன.
     ஆகார உயிர்மெய்

    The Second vowel ஆ mix with the eighteen consonants w the next uyirmey letters of the Tamil language is created. These letters have the long sound duration of two seconds.

    எப்படி மாறுகிறது?

    How do the letters change?

    மெய் எழுத்துக்கள் தங்கள் புள்ளியை இழப்பதோடு ஒவ்வோரு எழுத்துக்கும் பின்னால் துணைக்கால் என்ற குறியீடு சேருகிறது.

    ஆகார உயிர்மெய்க் குறியீடு
    A symbol called supporting leg is attached the consonants with out dots on their head.

    இதில் ஒவ்வோரு மெய் எழுததுக்களும் வடிவம் மாறுவதோடு அவற்றின் ஒலியும் நீண்டு ஒலிக்கிறது நீண்ட ஒலிப்பததைக் குறிக்கும் வகையில் துணைக்கால் குறியீடு ஒவ்வோரு எழுததின் பின் வருகிறது.
    The vowel ஆ pronounced as “aa” like in the word paw.

    All the consonants have changed their sounds as well as shape. A symbol called supporting leg is following each letter. It is important to note that the consonants lost their dot on top of their head.

    1. க்+ஆ= கா ik+aa=kaa
    2. ங்+ஆ= ஙா ing+aa=ngaa
    3. ச்+ஆ= சா ich+aa=chaa
    4. ஞ்+ஆ= ஞா inj+aa=njaa
    5. ட்+ஆ= டா it+aa=taa
    6. ண்+ஆ= ணா INn+aa=NNaa
    7. த்+ஆ= தா ith+aa=thaa
    8. ந்+ஆ= நா inth+aa=naa
    9. ப்+ஆ= பா ip+aa=paa
    10. ம்+ஆ= மா im+aa=maa
    11. ய்+ஆ= யா iy+aa=yaa
    12. ர்+ஆ= ரா    ir+aa=raa
    13. ல்+ஆ= லா   il+aa=aa
    14. வ்+ஆ= வா  iv+aa=vaa
    15. ழ்+ஆ= ழா   izhl+aa=izhlaa
    16. ள்+ஆ= ளா  ILl+aa=LLaa
    17. ற்+ஆ= றா   iRR+aa=RRaa
    18. ன்+ஆ= னா  in+aa=naa
  • அகர உயிர் மெய்

    தமிழ் எழுத்துக்களின் உயிரான  உயிர் எழுத்துக்களும், மெய்யான மெய் எழுத்துக்களும் ஒன்று சேர்ந்து மனிதன் எல்லா ஒலிகளுக்கும்  உயிர்மெய் எழுத்துக்கள் என்ற பெயரால்  வரிவடிவம் கொடுக்கின்றன. அதில் முதலில் வருவது அகர உயிர் மெய்.

    உயிர் எழுத்து “அ” மெய் எழுத்துக்கள் பதினெட்டோடு கலந்தால் ஏற்படும் வரி வடிவ மாற்றத்தையும் ஒலி மாற்றத்தையும் இங்குப் பார்க்கலாம்.

    க்+அ=க

    மெய்யெழுத்து”க்”ன் ஒலியோடு உயிரெழுத்தின் ஒலி “அ”   இணையும் போது எழும்பும் “க்”ஒலிவடிவம் “க” என்ற எழுத்தாக வரிவடிவம் பெறுகிறது.இது போல பதினெட்டு மெய் எழுத்துக்களோடும் அகரம் கலக்கிறது.
    இந்த அகர உயிர்மெய் எழுத்துக்கள்  ஒரு மாத்திரை அளவைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாகும்.

     அகர உயிர்மெய்

    The Tamil vowels, the life of the language, and the consonants that give structure to the language mix together to make all the sounds that is humanly possible. We will see what happens the vowel அ interacts with the eighteen consonants

    எப்படி மாறுகிறது?

    How do they change?

    இந்த வரிவடிவத்தில் ஒவ்வோரு மெய் எழுத்தும் அதன் தலையின் மேலுள்ள புள்ளியை இழக்கிறது.
    The consonants when writing in this form loose their dot on top of their head.
    say the vowel அ as “ah” like in the word “about”.

    க்+அ= க

    ik+a=ka

    The sound ik(க்) mingles with a(அ) makes the sound ka(க).Like wise the vowel அ interacts with all the consonants. They have a one second duration to sound out the letter.

    1. க்+அ= க ik+a=ka
    2. ங்+அ= ங ing+a=nga
    3. ச்+அ= ச ich+a=cha
    4. ஞ்+அ= ஞ inj+a=nja
    5. ட்+அ= ட it+a=ta
    6. ண்+அ= ண iNn+a-Nna
    7. த்+அ= த ith+a=tha
    8. ந்+அ= ந inth+a=Na
    9. ப்+அ= ப ip+a=pa
    10. ம்+அ= ம im+a=ma
    11. ய்+அ= ய iy+a=ya
    12. ர்+அ= ர ir+a=ra
    13. ல்+அ= ல il+a=la
    14. வ்+அ= வ iv+a=va
    15. ழ்+அ= ழ izh+a=zha
    16. ள்+அ= ள iLl+a=ILa
    17. ற்+அ= ற irr+a=rra
    18. ன்+அ= ன in+a=na
  • உயிர் எழுத்துக்களில் ஒரெழுத்துச் சொற்கள்

    தமிழ்  மொழியின் சிறப்பு  ஒரு பொருளைக் கூற சில சமயங்களில் ஓர் எழுத்தேப்  போதுமானது. அஃதாவது எழுத்தின் வரிவடிவம்  அந்த எழுத்தை மட்டும் அடையாளம் காட்டாது ஒரு சொல்லாகவும்  இருக்கிறது.  அனைவருக்கும்  தெரிந்த அப்படிப் பட்ட சொற்கள் சில கை, தீ, பூ ஆகியவை. ஆனால் அவை எல்லாம் உயிர் மெய் எழுத்துக்கள். நாம் இதுவரை உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் மட்டுமே கற்றுள்ளோம்.  நம் மொழிக்கே உயிராகச் செயயல்படும் உயிரெழுத்துக்கள்     சொற்களாக செயல் பட்டிருக்கின்றனவா என்று அகராதிகளை ஆராய்ந்துப் பார்த்ததில் மன்னிரெண்டு  உயிரெழுத்துக்களில் “ஓள” என்ற உயிரெழுத்தைத் தவிர மற்ற எல்லா உயிரெழுத்துக்களும் ஆய்த எழுத்தும் செய்யுள்களில்  சொற்களாகப்  பொருள் கொடுத்து நிற்கின்றன.

    1.  அ=  Lord Vishnu
    2.  ஆ=   cow
    3.  இ= now,or this moment
    4.  ஈ= Fly  an insect
    5.  உ = Siva Sakthi
    6.  ஊ= permeate and also flesh or meat
    7.  எ= உவர் நிலம், Soil with high ph
    8.  ஏ= who, abundance,  ஐ= god or king, or beauty, minute, phlegm
    9. ஒ=equal, conform, agree ,consent
    10.  ஓ= flood gate  ஒள=
    11.  ஃ=solitariness.

    There are a lot of Tamil letters that  act as  words.     தீ means fire , கை means hand, பூmeans the flower.  These are words made out of the combined letter form of vowels and consonants. The above list shows how the vowels were used as one letter in ancient poems.

error: Copyrights: Content is protected !!