Blog

  • What next?

    திராவிட மொழியான தமிழ், இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாகாணத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது. உலகிலேயே இது மிகத் தொன்மையான மொழியாகும்.20004 ஆம் ஆண்டு இம்மொழி ஒரு செம்மொழி என்று ஏற்றுக் கோள்ளப் பட்டது. தமிழ்நாடு இலங்கை மற்றும் சிங்கபூர் ஆகிய இடங்களில் அதிகார மொழியாக இருக்கிறது. உலகில் எழுபத்து ஏழு மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள். நாம் இப்படி நம் தமிழின் பழம் பெருமையைப் பேசுவதோடு,இந்தச் செய்திப் பரிமாற்ற காலத்தில் புதிய அறிவியல் படைப்புகளையும் பல்வேறு இலக்கியங்களையும் படைக்க வேண்டும். நமக்குத் தெரிந்தச் செய்திகளையும் தமிழ் அறிவையும் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும். இந்தக் கணினிக் காலத்தின் சவாலைத் தைரியமாகச் எதிர் கொள்ளும் துணிவோடு இந்தக் கணினியுகக் கலாச்சாரத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை நம் மொழிக்கு உண்டு. அதனால் நம் குழதைகளுக்குத் தமிழைக் கற்பிப்பதிலும் கற்க ஊக்குவிப்பதிலும் நம் பங்கச் செய்வோம்.

    Tamil books through out history
    Tamil books

    Tamil is a Dravidian language spoken mainly in Tamilnadu, India. It is one of the oldest languages in the world. It was announced as a classical language of India in 2004. It is the official language in Tamil Nadu, Sri lanka, and Singapore. More than seventy seven million people around the world speak Tamil. That being said we need to work on not only preserving the language; we need to create new literatures and scientific work in the new informative age. We need to practice sharing our information and knowledge in Tamil. Our language is bold enough to take the challenge of digital age. Not only that, tt has the capacity to transform the culture of the digital age too. So Let us do our share and educate and inspire our kids to learn and practice our mother tongue.

  • Connect the dots

    உயிர் எழுத்துக்களின் வரிசையை நாம் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள  நாம்  பயிற்சி எடுக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் புள்ளிகளை இணைப்து ஒரு விளையட்டாக  உயிர் எழுத்துக்களின் வரிசையை நம் மனதில் பதிய வைக்கும்.

    vowels-connect-the-dots picture
    Connect the dots to draw a flower

    To learn the order of the vowels  we need to practice.  The above connect the dot picture should help us memorize the order of the vowels by playing

  • Short and Long Vowels

    ஒலியளவு

    தமிழில் ஒலி அளவு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    நாம் கண் இமைக்கும் நேரமோ கை நொடிக்கும் நேரமோ மாத்திரை என்று அழைக்கப் படுகிறது.அதாவது ஒரு வினாடி நேரத்தை மாத்திரை என்று அழைக்கின்றனர்.

    ஒவ்வோரு தமிழ் எழுத்தும் அது ஒலிக்கும் கால அளவைக் கொ்ண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

    தமிழ் உயிர் எழுத்துக்கள்  தங்கள் ஒலியை அடிப்படையாகக் கொண்டு குறில் நெடில் என்றுப் பிரிக்கப்படுகிறது. ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி அளவே ஒலிக்கும் எழுத்துக்கள் குறில் என்று அழைக்கப்படும். அ,இ,உ,எ,ஒ  என்ற எழுத்துக்கள்  ஒலிக்க ஒரு வினாடி நேரமே ஆகும் அதனால் அவை குறில் எழுத்துக்கள் ஆகும்படத்தில் இவை பச்சை நிறத்தில் குறிக்கப் பட்டுள்ளன..

    இரண்டு மாத்திரைகள் அல்லது இரண்டு வினாடிகள் நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் நெடில் ஆகும்.ஆ,ஈ,ஊ, ஐ,ஓ,ஓள ஆகியவை  ஒலிக்க இரண்டு வினாடிகள் தேவை அதனால் அவை நெடில் எழுத்துக்கள் ஆகும். படத்தில் இவை நீல நிறத்தில் குறிக்கப் பட்டுள்ளன.

    ஆய்த எழுத்தை நாம் உயிரெழுத்துக்களோடு சேர்ந்தே படிக்கிறோம். கற்றுக் கொள்கிறோம்.

    Vowels Chart with long and short sounds
    Short and long sounds

    In Tamil language the duration of the sound in a letter helps us categorize the letters. The word”mathirai” refers to the measurement of a sound. This word refers to the time it takes to blink the eye  or snap a finger,which usually takes one second.

     The twelve vowels can be divided based on the duration of their sound too, The short sound vowels are called kurril. The duration of the syllable is one second.அ, இ, உ, எ, ஒ are kurril. The long sounding letters are called nedil. The duration of the syllable is two seconds.ஆ, ஈ, ஊ, ஏ,ஐ, ஓ, ஒள are neddill because the duration of their sound is two seconds.

    The letter Aydham  always accompanies  the tamil vowels we learn the vowel letters.

  • உயிர் எழுத்துக்கள் இன எழுத்துக்கள்/Vowels are pairs

    இன எழுத்துக்கள்

    தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வரும் உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் ஒலியமைப்பு, ஒலியளவு பொருள் இவற்றைக் கொண்டு இன எழுத்துக்களாகவும் கருதப்படும். பொருளால், ஒலியால், இடத்தால் ஒத்திருப்பதால் இவை ஒரே இனமாகக் கருதப்படும்..
    உயிர் எழுத்துக்களை இனமாக அடையாளம் கண்டு கொள்வதால் அவற்றை வரிசைப் படுத்தி எழுத வசதியாகிறது.

    • அ,ஆ
    • இ,ஈ
    • உ,ஊ
    • எ,ஏ
    • ஒ,ஓ

    ஆகியவை, பிறக்கும் இடம் ஒலியமைப்பு, ஒலியளவு பொருள் என்று அனைத்திலும் ஒத்துப் போவதால் ஒரே இனமாகக் கொள்ளப்படுகின்றன.

    • ஐ இ

    ஒலியாலும், இடத்தாலும் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.

    • ஐ,இ, ஒள, உ

    ஒலியாலும், இடத்தாலும் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.

    • ஒள,உ

    என்ற உயிர் எழுத்துக்கள் தங்களின் ஒலியால் மொழிக்கே ஒரு அடிக்கல்லாக அமைகின்றன.

    The vowels are paired with each other. the vowels are pairs because they look and sound the same, they can also mean similar thing.They then take the beginning of the word. These vowels are also paired based on their sound and their place in the word. In conclusion the vowels takes the main stage in the Tamil language. They act as a foundation for the language with their sound

    • அ(ah), ஆ(aa)
    • இ(ea),ஈ(ee)
    • உ(wu),ஊ(ooh)
    • எ(eh) , ஏ(ay)
    • ஒ(oh) ,ஓ(ooh)

    They are pairs because of their similar look, similar sound, similar meaning, the duration of the sound.

    • ஐ(ie) , இ(ea)

    They are considered pairs because of their sound and their place in the word.

    • ஓள(ow) and உ(ooh)

    They are considered pairs because of their sound and their place in the word.

  • Tamil Vowels

     

    தமிழ் உயிரெழுத்துக்கள்.

    தமிழ் மொழிக்கு அடிப்படை ஒலியாக அமைவது உயிரெழுத்துக்கள். இவை மொத்தம் பன்னிரெண்டு.

    அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஓள 

    ஆங்கில மொழியில் இருக்கும் a, e,i o, u என்ற ஐந்து உயிர் எழுத்துக்களின் ஒலியை தமிழ் எழுத்துக்கள் பன்னிரெண்டும் உண்டாக்குகின்றன. ஆங்கிலத்தில் இந்த ஐந்து ஒலிகளில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் அதே ஐந்து எழுத்துக்களே அவற்றிற்கும் வரி வடிவம் கொடுக்கின்றன.

    ஆனால் தமிழில் குறுகிய ஒலிக்கு ஒரு வரிவடிவமும், நீண்டு ஒலிக்கும் ஒலிக்கு ஒரு வடிவமும் உண்டு. அ,ஆ என்ற இரண்டு எழுத்துக்களும் a என்ற ஆங்கில எழுத்துக்கு இணையான ஒலிகளைக் குறிக்கின்றன, இ,ஈ என்ற இரண்டு எழுத்துக்களும் e என்ற எழுத்தின் ஒலியைக் குறிக்கின்றன.   உ,ஊ என்ற தமிழ் உயிர் எழுத்துக்கள் U என்ற ஆங்கில எழுத்தின் ஒலிகளை உருவாக்குகின்றன.எ,ஏ என்ற எழுத்துக்களும் அதன் ஒலிகளும் ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்களாக இல்லை.ஆங்கில எழுத்து ன் ஒலியை ஐ என்ற எழுத்துக் குறிக்கிறது O என்ற ஆங்கில எழுத்தின் ஒலியை ஒ,ஓ என்ற இரண்டு உயிர் எழுத்துக்களும் உருவாக்குகின்றன.
    ஒள என்ற தமிழ் உயிர் எழுத்து o,u என்ற இரு எழுத்துக்களின் ஒலியையும் இணைத்து ஒள என்ற ஒலியை உருவாக்குகிறது. ஆக தமிழ் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் அடிப்படை ஒலிகளின் வரிவடிவமாக இருக்கின்றன.

    உயிரெழுத்துக்கள் பிற எழுத்துக்களின் உதவியில்லாமல் தானாகவே இயங்கும். மற்ற எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து அவை இயங்க காரணமாக இருக்கிறது. அதனால் உயிரெழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    Tamil Vowels with their sound
    Tamil Vowels

    Tamil Vowels

    The Tamil vowels becomes the basic building block of Tamil language. There are twelve tamil vowels. In English language  the letters “a,e,i,o,u” are the vowels.  They represent both short and long vowels. In tamil each short and long vowels have their own letters. The sound of letter a is represented by அ,ஆ. The Tamil letters இ,ஈ  are the letters for the sound in letter”e” உ,ஊ  letters produce the same sound    for the vowel “u” .எ ஏ makes the sound that is not in the english vowels. The letter ஐ makes the same sound as “i” The letter “O” is sound is made throughஒ,ஓ. ஒள makes the combination sound of “o”and “u”. So the twelve vowels are the basic building block of the Tamil language.

    The Tamil vowels can operate self sufficiently. They don’t depend upon other Tamil letters  to work. So they are also referred as  the “first letters”

error: Copyrights: Content is protected !!