Author: Suganthi Nadar

  • தமிழ் அநிதம்

    தமிழ்க் கல்வி நிலையம

    Registration is now open for The beta testing is starting on July 24th 2015. The first ever Online Tamil Learning Institute.

    Hurry and register.

    It is a very sweet opportunity to learn Tamil as a second language. The Tamilunltd Tamil learning institute has been providing sources for primary Tamil education for the last ten years. Now it is announcing the Elementary, Developmental, Intermediate, Higher level and Advanced level of the learners. The learners will learn Tamil through various skill development exercises and games.

    The elementary level learners will learn how to introduce themselves and write a journal about them. They will learn Aathicchudi and Muthurai by avvaiyaar.

    Through this Online Tamil learning institution the learners can learn, participate in exercises community discussions pertaining to their learning and take tests online. all from their home at their convenience.

    தமிழ் அநிதம்

    தமிழ்க் கல்வி நிலையம

    ஜூலை மாதம் 24ம் வெள்ளிக் கிழமை வெள்ளோட்டம் தொடக்கமாகிறது

    விரைந்து படிவு செய்யுங்கள்.

    உலகில் முதல் முதலாக இணையம் வழி மாணவர்களுக்கான தமிழ் கல்வி

    தமிழை இரண்டாவது மொழியாக கற்க ஒரு இனிய வாய்ப்பு. தமிழ் அநிதம் என்ற இணையக் தமிழ் கல்வி நிலையம் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் மழலைக் கல்வியை இலவசமாக இணையம் வழி வழங்கி வந்தது. தற்போது இக் கல்வி நிலையத்தில் மழலைக் கல்வி, தொடக்க நிலை வளர்நிலை இடைநிலை உயர்நிலை மேல்நிலை தமிழ் வகுப்புகள் இணையம் வழி நடத்தப்பட்டு சான்றிதழ் ஒவ்வோர் நிலையிலும் வழங்கப்படும் தேர்வுகளும் பயிற்சிகளும் இணையம் வழியாகவே நடத்தப்படும்.

    இதன் அறிமுகப் பாடங்கள் ஜூலை மாதம் 24ம் வெள்ளிக் கிழமையிலிருந்து தொடங்குகிறது. பதினைந்து நாட்கள் கொண்ட இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் எழுத்துகள் அறிமுகம், அடிப்படை இலக்கண அறிமுகம் ஆகியவற்றை கற்றுக் கொள்வார்கள் ஆத்திச்சூடி மூதுரை ஆகிய அறநெறிப் பாடல்களையும் மாணவர்கள் கற்றுத் தெளிவார்கள்.அறிமுகப் பாடங்களின் இறுதியில் மாணவ மாணவியர் தமிழில் தங்களைப் பற்றிய ஒரு சுய குறிப்பை தமிழில் எழுதவும், தங்களை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தியும் கொள்வார்கள் ஒரு.தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க நினைப்பவர்கள் எளிதாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரத்திலும் படித்துத் தேர்வு எழுதலாம். வேறுபாடான பயிற்சிகள் மூலமும் விளையாட்டுகள் மூலமும் தமிழ் கற்றுக் கொடுக்கப் படுகிறது.

    இந்த முதல் பத்து நாட்களில் பதிவு செய்பவர்களுக்கு மேல்நிலை வரை தமிழ்க் கல்வி இலவசம்.

  • முன்னிலை ஒருமை விகுதிகளும் கால இடைநிலைகளும்

    முன்னிலை பெயர்சொற்களாகிய நீ,உன் ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை முன்னிலை ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது.

    ஒரு பெயர்ச்சொல்லினால் முன்னிலை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று விகுதி இடைநிலைகள் ஒரு பொருட்பெயரின் எண்ணிக்கை, அதன் செயல்படும் காலத்தை உணர்த்த பயன்படுகின்றன. இங்கு முன்னிலை இடங்களுக்கான ஒருமை விகுதிகளையும் அவை எவ்வாறு காலங்களைக் காட்டுகின்றன என்பதையும் பார்க்கலாம்

    கால இடைநிலைகள்

    முன்னிலை ஒருமை பெயர்ச்சொல்லின் செயல்களுக்கு காலம் காட்டும் இடைநிலைகள் “கிறு” “கின்று” “இன்” “த்” “ப்””வ்” ஆகியவை

    ஒரு சொல்லின் இறுதியில் வரும் இடைச்சொற்கள் விகுதிகள் என்று அழைக்கப்படும்.

    முன்னிலை ஒருமை விகுதிகள் மொத்தம் மூன்று/

    “இ” “ஐ” “ஆய்”

    இந்த மூன்று விகுதிகளில் “இ” “ஐ” என்ற இரண்டு விகுதிகளும் செய்யுளில் மட்டுமே பயன் படுத்தப் படுகின்றன. “ஆய்” என்ற விகுதியே இன்று வழக்கில் உள்ளது

    உன் என்ற தன்மைப் பெயர்சொல்லுக்கு காலம் காட்டும் இடைநிலையும் எண்ணிக்கையைக் காட்டும் இடைநிலையும் படி ஓடு என்ற இரு வினைகளோடு சேர்ந்து எப்படிச் செயலாற்றுகிறது என்று எடுத்துக் காட்டுகள் விளக்கம் தரும்..

    நீ படித்தாய்

    நீ + படி+த்+ஆய்= நீ படித்தாய்

    நீ படிக்கின்றாய்

    நீ + படி+கின்று+ஆய்= நீ படிக்கின்றாய்

    நீ படிப்பாய்

    நீ+படி+ப்+ஆய்= நீ படிப்பாய்

    அடுத்த வினை ஓடு

    நீ ஓடினாய்

    நீ+ஓடு+இன்+ஆய் =நீ ஓடினாய்

    நீ ஓடுகின்றாய்

    நீ+ஓடு+கின்று+ஆய்= நீ ஓடுகின்றாய்

    நீ ஓடுவாய்

    நீ+ஓடு+வ்+ஆய்=நீ ஓடுவாய்

     

     

    second person singular verb ending  and tense

     

     

     

    The second person nouns you(நான்) and your (என்) can only show the tense and the count through verbs. The in-between words   are the connecting characters that change the verb appropriately.

    “கிறு” “கின்று” “இன்” “த்” “ப்” “வ்

    For the second person singular the ending in-between words are “இ” “ஐ” “ஆய்” Only “ஆய்”  is used. The following verb படி(read) ஓடு(run) examples will show how the verb changes.

     

    நான் படித்தேன்= I read

    நான்+ படி+த்+ஏன்= நான் படித்தேன்

     

    நான் படிக்கின்றேன் I am reading

    நான் + படி+கின்று+ஏன்= நான் படிக்கின்றேன்

     

     

    நான் படிப்பேன் I will read

    நான்+படி+ப்+ஏன்= நான் படிப்பேன்

     

    அடுத்த வினை ஓடு

    நான் ஓடினேன்

    நான்+ஓடு+இன்+ஏன்=நான் ஓடினேன்

    நான் ஓடுகின்றேன்

    நான்+ஓடு+கின்று+ஏன்= நான் ஓடுகின்றேன்

    நான் ஓடுவேன்

    நான் +ஓடு+வ்+ஏன்=நான் ஓடுவேன்

     

    The second person nouns you(நான்) and your (என்) can only show the tense and the count through verbs. The in-between words   are the connecting characters that change the verb appropriately.

    “கிறு” “கின்று” “இன்” “த்” “ப்” “வ்

    For the second person singular the ending in-between words are “இ” “ஐ” “ஆய்” Only “ஆய்”  is used. The following verb படி(read) ஓடு(run) examples will show how the verb changes.

     

    நான் படித்தேன்= I read

    நான்+ படி+த்+ஏன்= நான் படித்தேன்

     

    நான் படிக்கின்றேன் I am reading

    நான் + படி+கின்று+ஏன்= நான் படிக்கின்றேன்

     

     

    நான் படிப்பேன் I will read

    நான்+படி+ப்+ஏன்= நான் படிப்பேன்

     

    அடுத்த வினை ஓடு

    நான் ஓடினேன்

    நான்+ஓடு+இன்+ஏன்=நான் ஓடினேன்

    நான் ஓடுகின்றேன்

    நான்+ஓடு+கின்று+ஏன்= நான் ஓடுகின்றேன்

    நான் ஓடுவேன்

    நான் +ஓடு+வ்+ஏன்=நான் ஓடுவேன்

  • தன்மை ஒருமை காலம் காட்டும் இடைநிலைகள்

    தன்மை பெயர்சொற்களாகிய நான், என், ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை தன்மை முன்னிலை ஆகிய இரு இடங்களையும் ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது.

    ஒரு பெயர்ச்சொல்லினால் தன்மை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று விகுதி இடைநிலைகள் ஒரு பொருட்பெயரின் எண்ணிக்கை, அதன் செயல்படும் காலத்தை உணர்த்த பயன்படுகின்றன. இங்கு தன்மை முன்னிலை இடங்களுக்கான ஒருமை விகுதிகளையும் அவை எவ்வாறு காலங்களைக் காட்டுகின்றன என்பதையும் பார்க்கலாம்

    கால இடைநிலைகள்

    தன்மை ஒருமை பெயர்ச்சொல்லின் செயல்களுக்கு காலம் காட்டும் இடைநிலைகள்  “கிறு” “கின்று” “இன்” “த்” “ப்” “வ் ஆகியவை

    ஒரு சொல்லின் இறுதியில் வரும் இடைச்சொற்கள் விகுதிகள் என்று அழைக்கப்படும்.

    தன்மை ஒருமை விகுதிகள் மொத்தம் மூன்று/

    “அன்” “என்” ஏன்”

    இந்த மூன்று விகுதிகளில் “அன்” “என்” என்ற இரண்டு விகுதிகளும் செய்யுளில் மட்டுமே பயன் படுத்தப் படுகின்றன. “ஏன்” என்ற விகுதியே இன்று வழக்கில் உள்ளது

    நான் என்ற தன்மைப் பெயர்சொல்லுக்கு காலம் காட்டும் இடைநிலையும் எண்ணிக்கையைக் காட்டும் இடைநிலையும் படி ஓடு என்ற இரு வினைகளோடு சேர்ந்து எப்படிச் செயலாற்றுகிறது என்று எடுத்துக் காட்டுகள் விளக்கம் தரும்..

    நான் படித்தேன்

    நான்+ படி+த்+ஏன்= நான் படித்தேன் நான் படித்தேன்

    நான் படிக்கின்றேன்

    நான் + படி+கின்று+ஏன்= நான் படிக்கின்றேன்

    நான் படிப்பேன்

    நான்+படி+ப்+ஏன்= நான் படிப்பேன்

    அடுத்த வினை ஓடு

    நான் ஓடினேன்

    நான்+ஓடு+இன்+ஏன்=நான் ஓடினேன்

    நான் ஓடுகின்றேன்

    நான்+ஓடு+கின்று+ஏன்= நான் ஓடுகின்றேன்

    நான் ஓடுவேன்

    நான் +ஓடு+வ்+ஏன்=நான் ஓடுவேன்

    http://www.youtube.com/watch?https://youtu.be/d4F3T2iu-Vk

     

     The  first  person  tense and count

    The first person nouns I(நான்) and Me (என்) can only show the tense and the count through verbs. The in-between words   are the connecting characters that change the verb appropriately.

    “கிறு” “கின்று” “இன்” “த்” “ப்” “வ்

    For the first person singular the ending in-between words are “அன்” “என்” ஏன்

    The following verb படி(read) ஓடு(run) examples will show how the verb changes.

     

    நான் படித்தேன்= I read

    நான்+ படி+த்+ஏன்= நான் படித்தேன்

     

    நான் படிக்கின்றேன் I am reading

    நான் + படி+கின்று+ஏன்= நான் படிக்கின்றேன்

     

     

    நான் படிப்பேன் I will read

    நான்+படி+ப்+ஏன்= நான் படிப்பேன்

     

    The  next word

    நான் ஓடினேன்

    நான்+ஓடு+இன்+ஏன்=நான் ஓடினேன்

    நான் ஓடுகின்றேன்

    நான்+ஓடு+கின்று+ஏன்= நான் ஓடுகின்றேன்

    நான் ஓடுவேன்

    நான் +ஓடு+வ்+ஏன்=நான் ஓடுவேன்

  • வேற்றுமை உருபுகள்

     

    இடைசொற்கள் பெயர்ச் சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் இணைக்க இடைச் சொற்கள் பயன் படுத்தப்படுவதால் அவை தனியாக இயங்குவதில்லை. இவைத் தனியாக நின்றால் ஒரு பொருளையும் தராது.
    இடைச் சொற்களின் ஒருவகை வேற்றுமை உருபுகள் என்று அழைக்கப்படும். வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல் ஒரு சொற்றொடர் தொடரில் அமையும் போது ஒருப் பெயர்ச் சொல் சரியானப் பொருளைத் தருவதற்காகப் பயன் படுத்தப் படுகிண்றன, வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் கடைசியில் வந்து பெயர்ச்சொல்லின் பொருளை மாற்றும்
    ஐ, ஆல், ஒ, ஓடு, உடன், கு, இன், இல், அது, கண் ஆகியவை வேற்றுமை உருபுகள் ஆகும்.
    வேற்றுமை உருபுகள் எட்டு வகைப்படும்.
    இது தொடக்க நிலைக்கான விளக்கம் என்பதால் வேற்றுமை உருபுகளின் அறிமுகம் செய்யப்படுகிறது
    முதல் வேற்றுமை எழுவாயில் வரும் பெயர்ச்சொல் எந்த வகை மாற்றமும் இல்லாமல் அமைவது ஆகும்.
    நான் ஒரு மாணவன்
    இந்த சிறு வாக்கியத்தில் நான் என்ற எழுவாய் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சரியான பொருளைத் தருகிறது.
    என்+ = என்னை
    நீ என்னைப் பார்
    இரண்டாம் வேற்றுமை உருபு ஒரு பெயர்சொல்லை செய்யப்படு சொல்லாக மாற்றுகிறது. முதல் எடுத்துக்காட்டில் உள்ள “என்” என்ற தன்மையைக் பெயர்ச்சொல் அதனால் முடிவு பெயர்ச்சொல் தரும் சொல்லின் பெயர் மாறுகிறது. “ஐ” என்ற இரண்டாம் உருபு சேரும் போது தன் முன்னால் இருக்கும் ஒருவர் பார்க்கும் ஒரு தன்மைப் பெயராக மாற்றுகிறது. அதனால் “என்” என்ற சொல் ” என்னை” என்று மாறுகிறது. அதே போல
    முன்னிலை இடத்தைக் குறிக்கும் போது
    உன்+ =உன்னை
    நான் உன்னை தேடினேன்
    “உன்” என்ற சொல்லுடன் “ஐ” சேரும் போது உன் என்ற எளிய பெயர்ச்சொல் தன்மை இடத்தில் உள்ளவர் தேடக்கூடிய ஒரு ஆளாக மாறி “உன்னை என்று மாறுகிறது.

    மூன்றாம் வேற்றுமை(ஆல்,ஓடு) ஆகிய இரண்டு வேற்றுமைகளை இப்போது பார்க்கப் போகிறோம்.
    “ஆல்” என்ற உருபு பெயர் ஒரு செயலைக் கூடிய ஒருவரையோ ஒரு செடலைச் செய்யத் தேவையான கருவையோ இணைத்து பெயர்சொல்லின் பொருளில் மாற்றம் தருகிறது.
    தன்மை முன்னிலைப் பெயர்களைப் பார்க்கும் போது ஒரு எளிய “என்” என்ற தன்மைப் பெயர்ச்சொல் ஒரு செயலைச் செய்கின்ற நபராக மாறி “என்னால்” என்று வருகிறது. கீழே உள்ள எடுத்துகாட்டில் தன்னைப் பற்றி சொல்லும் போது அவரால் வரைதல் செயலைச் செய்ய முடியும் என்று குறிப்பிடுகிறார்.
    என்+ஆல்= என்னால்
    என்னால் வரைய முடியும்
    உன்+ஆல்= உன்னால்
    அதே போல முன்னிலை இடத்தில் இருப்பவரை குறிப்பிடும் போது. ஓடுதல் வேலையைச் செய்யக் கூடிய திறமை உள்ளவராக காட்ட ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபு உதவுகிறது
    உன்னால் ஓட முடியும்
    “ஓடு” என்ற வேற்றுமைச் சொல் நடக்கும் ஒரு நிகழவை ஒத்து நடக்கும் நிகழ்ச்சியைக் காட்டுகிறது அதாவது இரு பெயர்ச்சொற்களை இணைக்க ஓடு பயன் படுகிறது
    என்+ஓடு= என்னோடு
    என்னோடு வா என்றால் தன்மை இடத்தில் இருக்கும் ஒருவர் தான் செல்லும் இடத்திற்கு அழைப்பது போல மாறும்
    உன்+ ஓடு= உன்னோடு
    உன்னோடு விளையாடுவேன்
    நான்காம் வேற்றுமை உருபு கு இந்த வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லை ஒரு உடையைக் குறிக்கும் சொல்லாக மாற்றுகிறது
    என்+கு = எனக்கு
    நீ எனக்கு தம்பி
    உன்+ கு = உனக்கு
    நான் உனக்கு அக்கா
    ஐந்தாம் வேற்றுமை சொல்லுருபு, இரு பெயர்ச்சொற்களை வேறு படுத்தி அவற்றை ஒன்றோடு ஒன்று மற்றொன்றை ஒப்பீடு செய்யப் பயன் படுகிறது
    விட இருந்து ஆகிய இந்த இரண்டு ஐந்தாம் வேற்றுமை உருபுகள் தான் இப்போது பயன் புட்டி உள்ளன.
    என்னை விட நீ பெரியவன்
    உன்னை விட நான் சிறியவள்
    நீ என்னிடம் இருந்து வாங்கினாய்
    நான் உன்னிடம் இருந்து வாங்கினேன்
    ஆறாம் வேற்றுமை
    “அது” “உடைய” என்ற சொல்லுருபுகள்
    என்+அது எனது
    நீ எனது செல்லப்பிராணி
    என்+உடைய என்னுடைய
    நீ என்னுடைய செல்லப்பிராணி
    உன்+அது = உனது
    நான் உனது செல்லப்பிராணி
    உன்+ உடைய உன்னுடைய
    நான் உன்னுடைய செல்லப்பிராணி
    இந்த சொல் உருபுகள் உடையைக் குறிக்கும் வேலையைச் செய்கின்றன.
    ஏழாம் வேற்றுமை உருபு “இல்” “இடம்” இது ஒரு பெயர்சொல்லை ஒரு இடத்தோடு சம்பந்தப் படுத்துகிறது.
    “இல்” செய்யுள் இலக்கணத்திலேயே அதிகம் பயன் படுத்த படுகிறது.
    “இடம்” என்பது அதிகம் பயன் படுத்தப் படுகிறது
    என்+இடம் என்னிடம்
    உன்+இடம் உன்னிடம்

    என்னிடம் நீ பேசு
    உன்னிடம் புத்தகம் இருக்கிறது.
    எட்டாம் வேற்றுமை இதற்கு என்ற சொல்லுருபு இல்லை ஆனால் இது முன்னிலை இடத்தில் இருப்பவரை அழைக்கப் பயன் படுத்தப்படுகிறத்.
    நீ வா
    நீ தா
    நீ சொல்

    Tamil cases

    In Tamil language an in between word which has no meaning of its own while interacting with the noun change the meaning of the noun is called vayTRRUmai urybu.
    The vayttrumai word is called cases in English.
    The in between word does not give any meaning of its own, so it is considered a character rather than a letter or a word.
    There are eight different types of cases.
    The first and the eith case have no separate shepe or letter that is given to them. They are the nouns in the sentence itself
    First case is the subject in the sentence.
    நான் ஒரு மாணவன் means I am a student . The subject of the sentence “நான்” is the first case.
    The second case changes the noun in into a possessive noun or a pronoun.
    என்+ஐ = என்னை
    உன்+ஐ =உன்னை
    In these two examples the noun “என்” will change in to possessive noun என்னை. The noun உன் will change into உன்னை
    The third case has two in between words. They are (ஆல்,ஓடு)
    ஆல் is an in between word that changes the noun to possessive word. The noun என் changes in to என்னால் to show the noun can do some everything. The in between word” ஓடு” makes the noun accompany something
    The fourth case கு changes the noun to show the possessive.
    என்+கு = எனக்கு
    நீ எனக்கு தம்பி

    you are my brother
    You are my brother. In this sentence the noun me has turned in to my by using “கு”

    உன்+ கு = உனக்கு
    நான் உனக்கு அக்கா
    I am your sister. In this sentence by using “கு” you has turned into your.

    The fifth case words are mostly used in classical poetry. But now a days the words “விட” “இருந்து” are being used. These words interact with the noun to have a comparative form
    என்னை விட நீ பெரியவன்
    You are bigger than me
    உன்னை விட நான் சிறியவள்
    I am smaller than you.
    In these examples the in between word,” விட” takes the place of the word “than” in English so there can be a comparison
    நீ என்னிடம் இருந்து வாங்கினாய்
    You bought from me.
    நான் உன்னிடம் இருந்து வாங்கினேன்
    I bought from you.
    The sixth case changes a noun to a possessive to show the object. They are “அது” “உடைய
    என்+அது எனது
    நீ எனது செல்லப்பிராணி
    You are my pet.
    In the above sentence the word “அது” changes the word “me” to “my” or “mine”.

    In the same way in the following example
    என்+உடைய என்னுடைய
    நீ என்னுடைய செல்லப்பிராணி
    The word “உடைய ” changes the word “me” to “my” or “mine”.
    The seventh case “இல்” “இடம்” turns the noun to a place. The in between word “இல்” is mostly used in classical poetry.
    இடம்” is mostly used in present day Tamil.
    என்+இடம் என்னிடம்
    உன்+இடம் உன்னிடம்

    என்னிடம் நீ பேசு
    You talk to me.

    உன்னிடம் புத்தகம் இருக்கிறது.
    The book is with you.
    In the above examples the word “இடம்” changes the noun I and you in to a place or an object an event is taking place.
    The eighth case is used to talk to the second person. It does not have a character of its own.
    நீ வா You come
    நீ தா you give
    நீ சொல் You talk

  • ஒரு சொல் என்பது தமிழில் பல பிரிவுகளில் அடங்கும், முதலில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை இலக்கிய வகைச் சொற்கள் இரண்டாவது இலக்கண வகைச் சொற்கள். இலக்கிய வகைச் சொற்களை இயற்சொல், திசை சொல், வடசொல் எனப் பிரிக்கலாம், இந்த வகைச் சொற்களைத் தமிழ் இடைநிலையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

    இது தொடக்க நிலை என்பதால் தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது தமிழ் கற்றலுக்கு மிகவும் அடிப்படையாகும். அதனால் இங்கு இலக்கண வகைச் சொற்கள் மூன்றைச் சிறிது மேலோட்டமாகக் கற்றுக் கொள்ளலாம்.

    இலக்கண வகைச் சொற்கள் மொத்தம் நான்கு

    பெயர்ச்சொல் இடை சொல் வினை சொல் உரிச்சொல் ஆகியவை ஆகும்.

    பெயர்ச்சொல் ஆங்கிலத்தில் noun என்று அழைக்கப்படும். ஆங்கிலத்தில் வரும், conjucations prepositions particles ஆகியவை இடைச்சொல் என்று அழைக்கப்படும். வினைச்சொல் என்பது ஆங்கிலத்தில் verb என அழைக்கப்படும்.

    இலக்கணச் சொற்களைத் தொடக்க நிலையில் புரிந்து கொள்வதற்குச் சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்வது தமிழைத் தொடக்க நிலையில் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.

    பெயர் சொல் ஒன்றின் பொருளையும் இடத்தையும் காலத்தையும் உறுப்பையும் பண்பையும் தொழிலையும் காட்டும்

    இடைச் சொற்கள் பெயரைச் சொல்லை வினைச்சொல்லோடு இணைக்கும் போது வேற்றுமை உருபுகள் என்று அழைக்கப்படும். இடைச்சொல் ஒரு சொல்லின் இறுதியில் வந்து பால், எண் கால நிலைகளைக் காட்டும் இடை சொல் சாரியை உவமை பெயரெச்சம் வினை யெச்சம் இணைப்பிடைச் சொற்களைக் காட்டும்

    வினை சொல் ஒரு செயலைக் குறிக்கும் இது திணை பால் காலம் ஆகியவற்றைக் காட்டும். ஒரு சில இடங்களில் வினை சொல் ஒன்றின் பொருளையும் இடத்தையும் காலத்தையும் உறுப்பையும் பண்பையும் தொழிலையும் கூடக் காட்டும்

    உரிச்சொல் என்ற வகை செய்யுள் இலக்கணத்தைச் சார்ந்த ஒரு சொல்வகை. அதை செய்யுள் இலக்கணத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

     Introduction to Tamil words

    In Tamil Language the Tamil words are characterized in so many ways. The first two basic categorizations are literary words and grammatical words. The literary awards are classified as, natural words, directional words and words from the north. The grammatical classifications are nouns, in-between words, verbs and interjecting words.

    The nouns show name, place, time, parts, characters and actions, The in-between words connect the nouns and the verbs.Then they are called cases or vettrrumai words, The in-between words also. Some of the other in-between words, act as particles conjugations, prepositions and comparisons also. These words do not have the meaning of their own

    Verb shows the action. The verb can also show the classes, cases, gender, count

    Interjecting words.in tamil is called urri chol. They are part of poetic grammer. So they will be looked in in the poetic grammer in the higher level classes.

     

  • திணைகள்- ஊடாடும் பட அகராதி

    திணைகள்- பட அகராதி:

    தமிழில் உள்ள திணைகளைப் பற்றிய விளக்கங்கள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் ஒரு பட அகரமுதலி திணைகளை மனதில் பதிய உதவி செய்யும். ஒருவர் பெயர்ச்சொல்லை சரியாக இலக்கணப்படி தமிழில் எழுத முடியும். ஏன் என்றால் ஒவ்வொரு திணைக்கும் ஏற்றபடி இலக்கண விதிகள் மாறும். அதனால் இந்தப் பட அகரமுதலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    பட அகரமுதலிக்கான விளக்கமும் கீழே ஒரு சின்ன விளையாட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    உயர் திணை
    உயர் திணை
    அஃறிணை
    அஃறிணை

    Tamil noun classes – an interactive picture dictionary

    The classification of Tamil nouns into upper class and inferior class. Though it is easy to understand the concept using a picture dictionary. Along with the printable pictures there is an interactive picture dictionary also.

    [iframe_loader type=’iframe’ width=’100%’ height=’600′ frameborder=’0′ src=’http://tamilanitham.com/wp-content/uploads/articulate_uploads/classes_of_Tamil_nouns_a_Picture_dictionary/story.html’]

     

     

  • Noun classification- (upper class-inferior class)

    தமிழில் ஒரு பெயர் சொல் யாரைக் குறிக்கிறது என்பதைப் பொருத்து இரு வகைகளாகப் பிரிக்கலாம். தெய்வங்களையும் மனிதர்களையும் உயர்திணை என்று தமிழ் இலக்கணம் குறிக்கிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகள் போன்ற ஆறு அறிவு இல்லாத உயிரினங்களையும் உயிரற்ற சடம் பொருள்களையும் தமிழ் இலக்கணம் அஃறிணை எனக் குறிக்கிறது. இந்தப் பாகுபாடு தமிழ் இலக்கணத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது இந்தப் பாகுபாட்டை மனதில் வைத்துக் கொண்டால் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம்.

    இந்தப் பாகுபாடு தன்மை முன்னிலை இடங்களில் தெளிவாகத் தெரியாது.எனக்்பதைக் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்..

    உயர்திணைஅஃறினை

    Based on to whom it is referring to The nouns in Tamil grammar is classified into two categories. Reference to gods, celestial beings and humans are called Uyar Sinai (upper class)

    When referring to other living things such as plants, birds, animals and the non living things akkRRINNai (the inferior class) is used in Tamil grammar.

    uppercase lowerclass

error: Copyrights: Content is protected !!