Category: பயிற்சி- Practice

There will be exercises that will be used as a learning tool for deeper understanding.

  • தமிழை ஆழமாகக் கற்க உதவும் மின்னலட்டைகள்:

    தமிழ் மொழியைத் தங்களின்  இரண்டாம் மொழியாகக் கற்க தமிழ் வகுப்பிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களில் மூன்று வெவ்வேறு வகைகளைக் காணலாம்.

    1. தொடக்கப் பள்ளி மாணவர்கள்,
    2. நடுநிலை, உயர்நிலைப் பள்ளி குழந்தைகள்
    3. பெரியவர்கள்.

    இவர்களின் முதல் மொழியின் அறிவும் அனுபவமும் வேறுபடுகின்றன. ஒரு தொடக்கப் பள்ளி குழந்தை முதல் மொழியில் கற்கும்போது  சொற்களில் உள்ள எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளவும், எழுத்துக்களைக் கூட்டிச் சரியான உச்சரிப்புடன் வாசிக்கவும் கற்றுக் கொண்டு இருப்பர். அதே நேரத்தில் நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் முதல் மொழியில்  வாசித்தல், எழுதுதல், புரிந்து படித்தல், தங்களின் கருத்துகளைப் புலமையுடன் வெளிப்படுத்துதல் ஆகிய திறன்களில் முழுமையான அறிவைக் கொண்டிருக்கக் கூடும்.இம்மாணவர்கள் தங்களின் பகுப்பாய்வு திறனில் மொழிப்பயிற்சியை கற்றுக் கொண்டு இருக்கலாம்.

    பள்ளிக்குக் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் தங்களின் முதல் மொழியிலும் தமிழ் மொழியிலும் கற்றுத் தேர்ந்தவர்களாக  இருக்கலாம்.

    புலம்பெயர் தமிழ் வகுப்புக்களின் கல்வி வளங்கள் இந்த மூன்று வேறுபட்ட நிலைக்கும் பொருந்தி வர வேண்டும்.

    தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்நாடு கல்வித் துறை ஆகியவற்றின் பாடப்புத்தகங்கள், தமிழ் எழுத்துக்களையும் சொற்களையும் பார்வை புலன், செவிப்புலன் ஆகியவை வழியாக மனப்பாடம் செய்வதற்கானக் கற்றல் முறையை அணுகுகின்றன. தமிழ் எழுத்துக்களைச் சொற்களைச் சித்திரச்சொற்களாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்கின்றன.

    இதற்கு மாறாக, அமெரிக்க பள்ளிகளில் ஒவ்வொரு நிலைகளுக்கும் மொழி அறிவிற்கான முக்கியத் தரக்கூறுகள் உள்ளன, இந்த முக்கிய தரக்கூறுகள்  சரளமான மொழிப்பயிற்சியை மாணவர்களிடையே ஊக்குவிக்கின்றன. இத்தரக் கூறுகளில் முக்கியமான சில

    1. நூல்களைக்கையாளுதல்,
    2. எழுத்துகளின் அமைப்பு,
    3. ஒலியியல் விழிப்புணர்வு,
    4. ஒலியியல்
    5. சொற்களை அறிந்து கொள்ளுதல்,  
    6. சொற்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக  முதல் பக்கத்திலிருந்து அடுத்தப் பக்கத்திற்கு வாசித்தல்,
    7. சொல்லகராதித்திறனை வளர்த்துக் கொள்ளுதல்
    8. ஒரு உரையில் உள்ள தகவலைப் புரிந்து கொள்ளும்படியான வாசிப்புத் திறன், 
    9. கொடுக்கப்பட்ட உரையின் முக்கிய கருத்துகள்  கட்டமைப்புஇரண்டையும்  புரிந்துகொள்ளுதல்,
    10. உரையில் கொடுக்கப்பட்ட அறிவார்ந்த பொருண்மையையும்  யோசனைகளையும்  ஒருங்கிணைத்தல்,
    11. உரையாடும்போது தரத்திற்கு ஏற்றச் சொற்களைக் கண்டுபிடித்துப்  பயன்படுத்துதல்
    12. ஒரு வாக்கியத்தின் தனித்துவமான அம்சங்களை அங்கீகரித்தல்

    இவ்வாறு  வேறுபட்டத் தரக் கூறுகளைத் தங்களின் முதல் மொழி அனுபவமாகக் கொண்ட மாணவர்களின் மொழித்திறன், அமெரிக்கத் தமிழ் வகுப்பறையில் வேறுபட்டிருப்பதால், அவர்களுக்கு ஒரு விசாலமான கற்றல் கருவியாக இந்த மின்னலட்டைகள் பயன் படுகின்றன.

    மின்னலட்டைகள்  ஒவ்வோரு மாணவருக்கும் பல்வேறு வழிகளில் உதவுகின்றன; இளைய குழந்தைகள் தங்கள் பார்வைபுலன் மூலமான கற்றலை மேம்படுத்த இவ்வட்டைகளைப் பயன்படுத்தலாம். நடுநிலை, உயர்நிலை மாணவர்கள் தமிழ் எழுத்துக்களோடும் சொற்களோடும் ஆழமாக இடைவினையாற்றலாம். தங்களுக்கு தெரிந்த மொழி திறன்களான எழுத்துகளின் அமைப்பு, ஒலியியல் விழிப்புணர்வு, ஒலியியல், சொற்களை அறிந்து கொள்ளுதல்,   சொற்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாகப் பக்கத்திற்கு பக்கமாகப் வாசித்தல், சொல்லகராதியை  கையகப்படுத்தல், ஆகியத் திறன்களைத் தமிழ் மொழியிலும் பெற இந்த அட்டைகளைப் பயன்படுத்தலாம்

    தமிழ் வகுப்பறைக்கு வெளியே, பெற்றோர்கள் இந்த அட்டைகளைப் பயன்படுத்தி தமிழ் மொழி பயிற்சியைப் பிள்ளைகள் விரைவாகவும் அடிக்கடியும் செய்யப் பயன்படுத்தலாம்.

    முதல் பாடத்திற்கான இந்த மின்னலட்டைச் சொற்கள் ஒரு 8.5 x 11 அங்குல (215.9 × 279.4 மிமீ)  அளவு கொண்ட  ஒரு காகிதத்தில் பத்து சொற்களைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆவணத்தில் இருபத்தி மூன்று வார்த்தைகள் உள்ளன.

    ஆங்கில மொழியில் எழுத்து வடிவங்களும்  அவ்வெழுத்துக்களைக் கூட்டி  ஒலியுடன் படிக்கும் முறையும் எழுத்துகளின் ஒலிகளை இணைத்து ஒரு வார்த்தையை உருவாக்கும் வகையும் தற்போது தொடக்கப்பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக அவர்கள் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், ஒற்றை ஒலியுடைய ஈரெழுத்துகள் (digraphs) இணையுயிர்(diphthongs) மற்றும் பிற முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். தொடக்கநிலை மாணவர்கள் வாசிப்பு திறன்களைப் பயிற்சி செய்ய ஒலி அட்டைகளைப்(sound cards) பயன்படுத்துகிறார்கள்.

    தமிழ் மின்னலட்டைகளைப் பற்றிய சிறு குறிப்பு:

    தமிழ் கல்வியாளர்கள் இம்மின்னலட்டைகளை ஒலி அட்டைகளாகவும் பயன்படுத்தலாம். அட்டைகளிலில் உள்ள  வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் வண்ணக் குறியீடு மற்றும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருப்பதை தமிழாசிரியர் கவனிக்க வேண்டும். உயிரெழுத்துக்கள் இளஞ்சிவப்பு, மெய்யெழுத்துக்கள் நீலம், உயிர்மெய்யெழுத்துக்கள் ஊதா. இந்த நிற அமைப்பில் தமிழ் எழுத்துகள் மின்னலட்டைகளில்  காட்டப்பட்டுள்ளன. இக்கட்டமைப்பு ஒலியியல் விழிப்புணர்வு, ஒலியியல் ஆகியவற்றை எளிதாகவும் விரைவாகவும் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன.

    Vowels (உயிர் எழுத்துகள்): ஆங்கிலத்தில் ஐந்து அடிப்படை உயிரெழுத்து ஒலிகள் உள்ளன, இந்த ஒலிகள் குறுகியதாகவும் நீளமாகவும் இருக்கும்.  தமிழ்  உயிர் எழுத்துகள் ஒவ்வொன்றும் குறுகிய அல்லது நீண்ட உயிரெழுத்துக்களையும் அவற்றின் உச்சரிப்பு நீளத்தையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் தனித்துவமான வடிவங்களைக் கொண்டுள்ளன. அ(/ă/), ஆ (/ā/), இ(/ĭ/), ஈ (/ē/), உ(/ŏ/), ஊ (/ū/) எ(/ĕ/), ஒ(/ŏ/).ஓ (/ō/).

    ஏ(/ay/), எழுத்து ஆங்கிலத்தில் இரு எழுத்துகளைக்  கொண்டு ஒலிக்கும். தமிழ் உயிரெழுத்துக்களில் இரண்டு இணையுயிர்கள் உண்டு.ஐ(/aɪ/) ஔ  (/aw/). ஆகிய  இரு எழுத்துக்கள் நீண்ட  உயிரொலி    இணையுயிர்களாகும். அ(/ă/)மற்றும் இ(/ĭ/) உயிரெழுத்து ஒலிகள் ஐ(/a ɪ/) எழுத்துக்குள் உள்ளன.  அ(/ă/) மற்றும் உ (/ŏ/) உயிரெழுத்து ஒலிகள்  ஐ,ஔ அசையில் உள்ளன. இந்த இரண்டு ஒரே உயிரொலியையுடைய இணையுயிர்கள் நீண்ட உயிரெழுத்துக்களாகும்.

    தமிழ் மொழியில் ஐந்து குறுகிய உயிரெழுத்துக்களும் ஏழு நீண்ட உயிரெழுத்துக்களும் உள்ளன. உயிரெழுத்துக்களை உச்சரிக்க ஒரு வினாடிஎடுக்கும்போது, அவை குறுகிய உயிரெழுத்துக்கள் இக்குறுகிய எழுத்தொலிகள் குறில் எனப்படுகின்றது. ஒரு அடிக்கோடு அந்த எழுத்து ஒரு குறுகிய ஒலி  உடையது அதாவது குறில் என்று மாணவர்களுக்கு அடையாளம் காட்டுகின்றது.. உயிரெழுத்துக்களை உச்சரிக்க இரண்டு வினாடிகள் ஆகும்போது, அவை நீண்ட உயிரெழுத்துக்கள் அல்லது நெடில் எனப்படுகின்றன.  இந்நீண்ட நெடில் உயிர் எழுத்துகளை இரட்டைக் கோடுகள் அடையாளம் காட்டுகின்றன.இரட்டை அடிக்கோடிட்டுக்களைக் கொண்ட எழுத்து என்பது நீண்ட ஒலி என்று பொருள்.

    Consonants (மெய் எழுத்துக்கள்): தமிழில் பதினெட்டு மெய்யெழுத்துக்கள் உள்ளன. தமிழ் மெய்யெழுத்துக்களுக்கு மேலே ஒரு வட்டம் அல்லது புள்ளி உள்ளது. மெய்யெழுத்துக்களை உச்சரிக்க அரை வினாடி ஆகும். ஒலி எங்குத் தொடங்குகிறது என்பதைப் பொறுத்து மெய்யெழுத்துக்கள் மூன்று தனித்துவமான வழிகளில் பெயரிடப்படுகின்றன.இவ்வெழுத்துகளின் உச்சரிப்பு மார்பு, தொண்டை அல்லது மூக்கிலிருந்து உருவாகிறது.

    கடினமான ஒலி எழுத்துகள் க், ச், ட், த், ப், ற் (வல்லினம்):மார்பிலிருந்து அழுத்தத்துடன் தொடங்குகின்றன. இவை வல்லின எழுத்துகள் எனப்படுகின்றன. மின்னலட்டையில்  எழுத்துகளின் அடியில் உள்ள தடிமனான கோடுகள் கடினத்தன்மையைக் காட்டுகின்றன.

    மென்மையான ஒலி  எழுத்துக்கள் . ங், ஞ், ண், ந், ம், ன் (மெல்லினம்):குறைந்தபட்ச  முயற்சியுடன் நாசி ஒலிகளாக  உச்சரிக்கப்படும் எழுத்துகள்  மெல்லினம் எனப்படுகின்றன.  மின்னலட்டையில்  எழுத்துகளின் அடியில் உள்ள அலை அலையான கோடுகள் எழுத்து உச்சரிப்பின் மென்மையைக் காட்டுகின்றன

    இடை ஒலிகளைக் கொண்ட எழுத்துக்கள் ய், ர், ல், வ், ழ், ள் (இடையினம்) தொண்டையிலிருந்து தொடங்குகின்றன, தொண்டை மார்புக்கும் மூக்கிற்கும் இடையில் உள்ளது, எனவே அவை “இடையினம்” என்று குறிப்பிடப்படுகின்றன. மின்னலட்டையில்  எழுத்துகளின் அடியில் உள்ள புள்ளியிடப்பட்ட கோடுகள் இடையொலிப் பண்புகளைக் குறிக்கின்றன.

    உயிர்மெய்யெழுத்துக்கள்: உயிரெழுத்துக்களை மெய்யெழுத்துக்களுடன் சேர்க்கும்போது, அவை அவற்றின் சொந்த வடிவத்தையும் ஒலியையும் பெறுகின்றன. இந்த எழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. உயிரெழுத்துக்களுடன் மெய் எழுத்தின் தொடர்பு காரணமாக, உயிர்மெய் எழுத்துக்களும் குறுகிய அல்லது நீண்ட உச்சரிப்புகளைக் கொண்டுள்ளன. இங்குக் குறுகிய உச்சரிப்புகள் ஒரு அடிக்கோடிட்டுக் குறிக்கப்படுகின்றன,  நீண்ட உச்சரிப்புகள் இரட்டை அடிக்கோடுக்களால் குறிக்கப்படுகின்றன ஒரு  எழுத்தின்  ஆரம்ப ஒலி எங்குத் தொடங்குகிறது என்பதன் அடிப்படையில் உயிர்மெய் எழுத்துகள் அவற்றின் பெயரைப் பெறுகின்றன. உயிர்மெய் எழுத்துகளின் ஒலியின் தன்மையைக் காட்டும் வகையில்  மின்னலட்டையில் எழுத்துகளின் அடியில் கோடுகள் தடிமனாகவோ அலை அலையாகவோ  புள்ளிக்  கோடிட்டோ இருக்கின்றன.

    மின்னலட்டைகளைப் பயன்படுத்தும் முறை:

    வகுப்பறையை விட்டு வெளியேறிய பின்னரும் தமிழ் மொழி பயிற்சி செய்ய இந்த மின்னலட்டைகள் உதவுகின்றன.

    நாள் 1

    மாணவர்கள் வார்த்தையைச் சத்தமாகப் படிக்க வேண்டும்.

    நாள் 2

    மின்னலட்டையை ஒலி அட்டையாகப் பயன்படுத்தவும். ஒவ்வொரு எழுத்தையும் சரியான கால அளவுடன் உச்சரித்துப் பார்க்கவும். உயிரெழுத்து மெய்யெழுத்துக்கள் (உயிர்மெய்) எழுத்துக்கள் என்ன என்பதை மாணவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் முதல் மொழி திறன்கள் தமிழ் சொல்லைச் சரளமாக வாசிக்க உதவுகின்றன.

    நாள் 3

    முதல் இரு நாட்களின் பயிற்சிகளை மீள்பார்வை செய்யவும்.

    நாள் 4

    ஒவ்வொரு எழுத்தையும் சரியான கால அளவுடன் உச்சரிக்கவும், அவை சரியான கால அளவில் வார்த்தையை உச்சரிக்க எத்தனை நொடிகள் ஆகின்றது என்று கணக்கிடவும்.

    நாள் 5 

    ஒலிபெயர்ப்பு வண்ண குறியீடு இரண்டு ஆதரவுமின்றி  வார்த்தையைப் படிக்கவும் எழுதவும் முயற்சி செய்ய வேண்டும்..

    நாள் 6

    மின் அட்டையில் உள்ள எழுத்துக்களை வெட்டி மூன்று புதிய சொற்களை உருவாக்கவும்.

    இப்பயிற்சி முறைகள் கற்பவர்கள் தங்கள் தமிழ் மொழித்திறனில் ஒலியியல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது.

    Flash Cards as sound cards for Tamil Learning:

    Among Diaspora Tamil, one can see three distinct types of second language learners of Tamil. They are elementary school students, Middle and high school kids, and adults. Their first language knowledge and experience differ. An elementary school child may learn the decoding and encoding of the words in their first language, while the middle school and high school students may have complete knowledge in reading, comprehending, and expressing in their first language. They may be working on their analytical expression in their first language. Adults may be very fluent in their first and second language skills.

    The textbooks of the Tamil Virtual Academy and the Department of Education Tamil Nadu approach the learning process at the beginner level, usually as the visual cue and memorization of the letter forms and the corresponding words. They use the method of sight words to introduce the letters and the words.

    In contrast, the American schools have common core standards for every grade, that encourages language fluency. The  common core standards include book handling, letter concepts, phonological awareness, phonics, word recognition, informational text reading, understanding key ideas and structure, integration of knowledge and Ideas, vocabulary acquisition, follow words left to right, top to  bottom, and page by page, acquire and use grade-appropriate words in conversations recognize the distinguishing features of a sentence.

    Since the grade level of each student is different in the American Tamil classroom, memorizing Tamil words and letters are very basic for them and it does not transpire into Tamil language acquisition they need a comprehensive tool. Hence these flashcards.

    Flashcards help the different audiences in diverse ways; younger children can use this to improve their sight learning. The older children can interact with the letters and words in-depth, applying their known language skills. The parents can use the cards to practice language learning outside the Tamil classroom for themselves or as a review tool for their children. The flashcard for the first lesson is designed to have ten vocabulary words for one 8.5 by 11 inches (215.9 × 279.4 mm) paper. There are twenty-three words.

    The decoding and encoding skills of English involve connecting the written shape of the letters (graphemes) to their corresponding sounds (phonemes) to make a word. For that they use vowels, consonants, digraphs, diphthongs, and other methods. In early reading, the students use sound cards to practice reading skills. Most American students are familiar with sound cards. Tamil educators can use these flashcards as sound cards. The Tamil teacher can notice each letter in the word is color-coded and underlined. The vowels are pink, the consonants are blue, and the vowel consonants are purple.

    Vowels (உயிர் எழுத்துகள்): There are five basic vowel sounds in English. These sounds can be short and long. In Tamil Short and long vowels have distinct forms to denote their pronunciation length. There are five short vowels and seven long vowels.  அ(/ă/), ஆ (/ā/), இ(/ĭ/), ஈ (/ē/), உ(/ŏ/), ஊ (/ū/) எ(/ĕ/), ஒ(/ŏ/).ஓ (/ō/).

    The Tamil letter ஏ(/ay/), is a digraph. . Tamil vowels have two diphthongs. ஐ(/aɪ/)  and ஒள (/aw/).  அ(/ă/)and இ(/ĭ/) vowel sounds are within the ஐ(/aɪ/) syllable.  அ(/ă/) and உ (/ŏŏ/) vowel sounds are with in the ஔ syllable. These two diphthongs are also long vowels.

    When vowels take one second to pronounce, they are short vowels. A letter with one underline means it is a short sound. When vowels take two seconds to pronounce, they are long vowels. The letter with double underlines means it is a longer sound

    Consonants (மெய் எழுத்துக்கள்): There are eighteen consonants in Tamil. Tamil Consonants have a circle or a dot above them. Consonants take half a second to pronounce. The consonants are pronounced in three distinct ways, depending upon where the sound begins. Their pronunciation originates from the chest, throat, or nose.

    The hard sounding letters start from the chest with pressure. The thick lines show hardness. (வல்லினம்)க்,ச்,ட்,த்,ப்,ற்

    Soft-sounding letters are nasal sounds with minimal pressure and effort. The wavy lines show softness. (மெல்லினம்)ங், ஞ், ண், ந், ம், ன்

    Letters with in-between sounds initiate from the throat, which is between the chest and nose, so they are referred to as “in-between letters.”  The dotted lines indicate the mid sound characteristics. (இடையினம்)ய், ர், ல், வ், ழ், ள்

    The Vowel consonants: In Tamil When vowels are added to the consonants, they get their own form and sound. These letters are called vowel-consonant letters. Because of their association with vowels, the vowel-consonant letters also have either short or long pronunciation durations. The short pronunciations are indicated by an underline, and the long pronunciations are indicated by a double underline. The consonants and the vowel-consonants get their names based on where their initial sound begins.

    How to use the flash cards

    Flashcards are a tool to practice the language away from the classroom.

    Day 1

    They can read the word aloud.

    Day 2

    Use the flash card as a sound card. Pronounce each letter with the correct phonics and duration. They may not learn   what is the Tamil consonants and the Vowel consonants (உயிர்மெய்) letters yet. But their first language skills help with their fluent reading of the word.

    Day 3

    Repeat and review Day one and Day two exercises.

    Day 4

    Pronounce each letter with the correct phonics and duration along with the timer to check if they are pronouncing the word in the correct duration.

    Day 5

    Try to read the word without any transliteration or color-coded support. Practice writing the word.

    Day 6

    Cut the letters in the flash card to make three new words.

    This method helps the learners have phonological awareness of Tamil to practice their language skills.

error: Copyrights: Content is protected !!