Word search Game in Tamil

தமிழ் சொல் தேடல்

Word search in Tamil:


Tamil word search games are fun way to review, reinforce what the learners learnt and practiced for a week. The weekend Tamil language learners would have practiced the அ words and the ஆ words from in their respective textbooks. On weekdays. When they return to class on seventh day simple language practice will set their mindset for that day’s class
The attached word search games help them learners to focus on their language retaining skills. The clues for the search game are given in English. They translate the words into Tamil to search the words and circled. Once the words are circled, they can use the puzzle as an aid to fill in the blanks in Tamil. This practice helps the student with letter recognition, the corresponding phonics, and the meaning of the words. This stimulating practice helps the learners to interact with Tamil deeply in ten minutes.

சொல் தேடல் விளையாட்டு:


வாரத்தின் ஒவ்வோருநாளும் தங்களின் தமிழ் பாடங்களைப் பயிற்சி செய்து வார இறுதியில் தமிழ் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தாங்கள் வாரம் முழுவதும் பயிற்சி செய்ததை மதிப்பாய்வு செய்யவும், வலுப்படுத்தவும் வேடிக்கையான வழியாகச் சொல்தேடல் புதிர்கள் விளங்குகின்றன
வார இறுதி தமிழ் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பாடப்புத்தகங்களில் உள்ள ‘அ’ சொற்களையும் ‘ஆ’ சொற்களையும் பயிற்சி செய்திருப்பார்கள். வாரத்தின். ஏழாம் நாள் அவர்கள் வகுப்புக்குத் திரும்பும்போது, எளிய மொழி விளையாட்டுப் பயிற்சி அந்த நாளின் வகுப்பிற்கு மாணவர்களைத் தயார்படுத்தும்.
இப்பதிவில் இணைக்கப்பட்துள்ள சொல் தேடல் விளையாட்டு தமிழ் கற்பவர்களின் மொழி தக்கவைப்பு திறன்களில் கவனம் செலுத்த உதவுகின்றன. சொல் தேடல் விளையாட்டுக்கான குறிப்புகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பின் அந்தச் சொற்களைத் தேடி வட்டமிடுகிறார்கள். சொற்கள் வட்டமிடப்பட்டவுடன், அவர்கள் புதிரைப் பயன்படுத்தி தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்பலாம்.
இந்த நடைமுறை மாணவருக்கு எழுத்தறிவைப் பெறவும், எழுத்துடன் தொடர்புடைய உச்சரிப்பு சொற்களின் பொருள் ஆகியவற்றை ஆழமாகப் தெரிந்து புரிந்து கொள்ளவும். உதவுகிறது. மூளையைத் தூண்டும் இப்பயிற்சி கற்பவர்கள் பத்து நிமிடங்களில் தமிழுடன் ஆழமாக உறவாட உதவுகிறது.

Comments

Leave a Reply

error: Copyrights: Content is protected !!