We will be uploading exciting new learning resources for Tamil learning!
தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான வளங்களை விரைவில் பதிவேற்றம் செய்கின்றோம்.
We will be uploading exciting new learning resources for Tamil learning!
தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான வளங்களை விரைவில் பதிவேற்றம் செய்கின்றோம்.
படர்க்கை என்பது உரையாடலில் இல்லாத ஒரு மூன்றாம் நபரைக் குறிக்கும். அந்த மூன்றாம் நபர் இரண்டு உயர் திணை அஃறிணை என்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், அதை அடுத்துக் கொடுக்கப்பட்ட படர்க்கைப் பெயர்ச்சொல்லை (மூன்றாம் நபர் பெயர்ச்சொல்) இன்னும் ஒரு பிரிவாகப் பார்க்கலாம். அது தான் பால். பால் என்பது ஆங்கிலத்தில் genderரைக் குறிக்கும் . ஆங்கிலத்தில் ஆண், பெண் என்று இரு பால்களே உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இவற்றைத் தவிர, பலர்பால், ஒன்றன்பால், பலவின பால் என்ற பால்கள் உள்ளன.
இதில் ஆண்பால், பெண்பால்,பலர்பால் உயர்திணையாகவும், ஒன்றன்பால், பலவின பால் ஆகிய இரண்டும் அஃறிணையாக அமைகின்றன. இதில் முக்கியமாக நாம் பார்ப்பது என்னவென்றால் இந்தப் பெயர்ச்சொற்கள் அவற்றின் எண்ணிக்கையையும் காட்டும் பிரிவுகளாகக் காட்டுகின்றன. உயர்திணையின் பால்களில் ஆண் பால், பெண்பால் இரண்டும் ஒருமையையும் பலர்பால் பன்மையையும் காட்டுகின்றது. அஃறிணையில் ஒன்றன் பால் ஒருமையையும், பலவின பால் பன்மையையும் காட்டுகின்றன.
கண்ணன், பையன், அண்ணன், பழம், அகிலா, பெண், தங்கை, பூ
கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பெயர்ச்சொற்களை முதலில் நாம் பிரிக்கலாம். எப்படிப் பிரிப்பது என்று கீழே உள்ள காணொலியில் காணலாம்.
The word third person is படர்க்கை. Naturally a third person noun fall under three categories in Tamil. திணைthiNnie(class),பால் paal(gender) எண் eNn(Count)
In English there are only two genders.Male and Female.
In Tamil we see male, female, plural for the upper class or rational class uyarthiNnie.
The lower class or irrational class akrriNnie has Singlular gender as well as plural gender.
See the video above for more explanation.
https://edpuzzle.com/media/5838de6bda676d413564d803
To write better in Tamil, one have to understand the places and the count.So for we saw singular first person,and singular second person in all three sentences.
So let us review and test our knowledge on first person singular present tense.
என் பெயர் கண்ணன். My name is Kannan
நான் ஒரு பையன் I am a boy
நான் உன் அண்ணன் – Iam your brother
இந்தப் பழம் என்னுடையது
என் பெயர் அகிலா- My name is Akilla
நான் ஒரு சிறுமி I am a girl
நான் உன் தங்கை I am your sister
இந்தப் பூ என்னுடையது This flower is mine!
All these sentences are first person singular in present tense
உன் பெயர் கண்ணன் Your name is kannan
நீ ஒரு பையன் You are a boy
நீ என் அண்ணன் You are my brother
இந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours
உன் பெயர் அகிலா- Your name is Akilla
நீ ஒரு பெண் you are a girl.
நீ என் தங்கை you are my sister
இந்தப்பூ உன்னுடையது This flower is yours!
All these sentences are second person singular in present tense.
This is a simple sentence so naturally it will come in present tense
This sentences also does not have verbs
So we will use this sentences to practice the first person and second pronouns
[iframe src=”http://www.tamilunltd.com/pages/games/games%20resource/Place%20-Review%20-%20Storyline%20output/story_html5.html” width=”100%” height=”500″]
இடைச்சொல்
தொடக்க நிலைப் பாடத்தில் நாம் இடைநிலைச் சொற்களைப் பார்க்கப் போகிறோம். இவை தனியாக நின்று பொருள் தராது. அவை பெயர்ச்சொல்லின் இறுதியில் சேர்ந்து பொருள் தரும் ஒரு இடைநிலைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால் தமிழ்ல் பொருள் தரும் சொற்றொடர்களை அமைக்க முடியும். இந்த இடைநிலைகளைக் கொண்டு தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களை வினைச்சொல்லாகவும் மாற்றலாம்.
தொடக்க நிலையில் இடைநிலை சொற்களை இரு வகையாகப் பிரிக்கலாம்.
காலம் காட்டும் ஈறுகள்
இடம் காட்டும் இடைநிலைகள்,
ஏற்கனவே காலம் காட்டும் இடைநிலைகள் இந்தச் சுட்டியில் கொடுக்கப் பட்டுள்ளது.
அவையாயாவன,இன்” “ட்”ற்”“த்” “கிறு” “கின்று” ஆநின்று“ “ப்” “வ்
இன்” “ட்”ற்”“த்”ஆகியவை இறந்த காலத்தையும், “கிறு” “கின்று” ஆநின்று“ஆகியவை நிகழ்காலத்தையும் “ப்” “வ்
ஆகியவை எதிர்காலத்தையும் காட்டும்.
இடம் காட்டும் ஈறுகளைப் பார்ப்போம்
தன்மை இடம் (ஒருமை) ஏன்
(பன்மை)ஓம்
முன்னிலை இடம் (ஒருமை)- ஆய்
முன்னிலை இடம் (பன்மை) ஈர்கள்
நாம் முதலிலேயே பார்த்தபடி தன்மையும் முன்னிலை எந்தப் பாலையும் காட்டாது.ஆனால் தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களோடு சேர்ந்து பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றும் ஒரு சொற்றொடர் அமைக்கும் போது பெயரைக் குறிக்கும் பெயர்ச்சொல்லை விட ஒரு வினைச்சொல்லே இடத்தையும் காலத்தையும் காட்டும்.
இங்கே நாம் தன்மை முன்னிலை இடங்களை வைத்துச் சில சொற்றொடர்களை அமைக்கலாம்.
அதன் படிகள்
Some particles show the point of view ending. They are “ஏன்yehen”ஓம்om””ஆய் aai” ஈர்கள்eergal”
First person singular- “ஏன்yehen”
First person plural- “ஓம்om”
Second person singular “ஆய் aai”
Second person plural ஈர்கள்eergal”
Now play the game to reinforce the concept for first person past tense
[iframe_loader type=’iframe’ width=’100%’ height=’600′ frameborder=’0′ src=’http://tamilanitham.com/wp-content/uploads/articulate_uploads/pastenseGame8/story.html’]
These are the list of assignments the students need to finish before getting their certificate.
[namaste-assignments lesson_id=”767″]
[namaste-assignments lesson_id=”768″]
[namaste-assignments lesson_id=”2946″]
[namaste-assignments lesson_id=”2946″]
[namaste-assignments lesson_id=”2942″]
[namaste-assignments lesson_id=”2939″]
தமிழ்க் கல்வி நிலையம
Hurry and register.
It is a very sweet opportunity to learn Tamil as a second language. The Tamilunltd Tamil learning institute has been providing sources for primary Tamil education for the last ten years. Now it is announcing the Elementary, Developmental, Intermediate, Higher level and Advanced level of the learners. The learners will learn Tamil through various skill development exercises and games.
The elementary level learners will learn how to introduce themselves and write a journal about them. They will learn Aathicchudi and Muthurai by avvaiyaar.
Through this Online Tamil learning institution the learners can learn, participate in exercises community discussions pertaining to their learning and take tests online. all from their home at their convenience.
தமிழ்க் கல்வி நிலையம
ஜூலை மாதம் 24ம் வெள்ளிக் கிழமை வெள்ளோட்டம் தொடக்கமாகிறது
உலகில் முதல் முதலாக இணையம் வழி மாணவர்களுக்கான தமிழ் கல்வி
தமிழை இரண்டாவது மொழியாக கற்க ஒரு இனிய வாய்ப்பு. தமிழ் அநிதம் என்ற இணையக் தமிழ் கல்வி நிலையம் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் மழலைக் கல்வியை இலவசமாக இணையம் வழி வழங்கி வந்தது. தற்போது இக் கல்வி நிலையத்தில் மழலைக் கல்வி, தொடக்க நிலை வளர்நிலை இடைநிலை உயர்நிலை மேல்நிலை தமிழ் வகுப்புகள் இணையம் வழி நடத்தப்பட்டு சான்றிதழ் ஒவ்வோர் நிலையிலும் வழங்கப்படும் தேர்வுகளும் பயிற்சிகளும் இணையம் வழியாகவே நடத்தப்படும்.
இதன் அறிமுகப் பாடங்கள் ஜூலை மாதம் 24ம் வெள்ளிக் கிழமையிலிருந்து தொடங்குகிறது. பதினைந்து நாட்கள் கொண்ட இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் எழுத்துகள் அறிமுகம், அடிப்படை இலக்கண அறிமுகம் ஆகியவற்றை கற்றுக் கொள்வார்கள் ஆத்திச்சூடி மூதுரை ஆகிய அறநெறிப் பாடல்களையும் மாணவர்கள் கற்றுத் தெளிவார்கள்.அறிமுகப் பாடங்களின் இறுதியில் மாணவ மாணவியர் தமிழில் தங்களைப் பற்றிய ஒரு சுய குறிப்பை தமிழில் எழுதவும், தங்களை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தியும் கொள்வார்கள் ஒரு.தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க நினைப்பவர்கள் எளிதாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரத்திலும் படித்துத் தேர்வு எழுதலாம். வேறுபாடான பயிற்சிகள் மூலமும் விளையாட்டுகள் மூலமும் தமிழ் கற்றுக் கொடுக்கப் படுகிறது.
இந்த முதல் பத்து நாட்களில் பதிவு செய்பவர்களுக்கு மேல்நிலை வரை தமிழ்க் கல்வி இலவசம்.
முன்னிலை பெயர்சொற்களாகிய நீ,உன் ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை முன்னிலை ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது.
ஒரு பெயர்ச்சொல்லினால் முன்னிலை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று விகுதி இடைநிலைகள் ஒரு பொருட்பெயரின் எண்ணிக்கை, அதன் செயல்படும் காலத்தை உணர்த்த பயன்படுகின்றன. இங்கு முன்னிலை இடங்களுக்கான ஒருமை விகுதிகளையும் அவை எவ்வாறு காலங்களைக் காட்டுகின்றன என்பதையும் பார்க்கலாம்
கால இடைநிலைகள்
முன்னிலை ஒருமை பெயர்ச்சொல்லின் செயல்களுக்கு காலம் காட்டும் இடைநிலைகள் “கிறு” “கின்று” “இன்” “த்” “ப்””வ்” ஆகியவை
ஒரு சொல்லின் இறுதியில் வரும் இடைச்சொற்கள் விகுதிகள் என்று அழைக்கப்படும்.
முன்னிலை ஒருமை விகுதிகள் மொத்தம் மூன்று/
“இ” “ஐ” “ஆய்”
இந்த மூன்று விகுதிகளில் “இ” “ஐ” என்ற இரண்டு விகுதிகளும் செய்யுளில் மட்டுமே பயன் படுத்தப் படுகின்றன. “ஆய்” என்ற விகுதியே இன்று வழக்கில் உள்ளது
உன் என்ற தன்மைப் பெயர்சொல்லுக்கு காலம் காட்டும் இடைநிலையும் எண்ணிக்கையைக் காட்டும் இடைநிலையும் படி ஓடு என்ற இரு வினைகளோடு சேர்ந்து எப்படிச் செயலாற்றுகிறது என்று எடுத்துக் காட்டுகள் விளக்கம் தரும்..
நீ படித்தாய்
நீ + படி+த்+ஆய்= நீ படித்தாய்
நீ படிக்கின்றாய்
நீ + படி+கின்று+ஆய்= நீ படிக்கின்றாய்
நீ படிப்பாய்
நீ+படி+ப்+ஆய்= நீ படிப்பாய்
அடுத்த வினை ஓடு
நீ ஓடினாய்
நீ+ஓடு+இன்+ஆய் =நீ ஓடினாய்
நீ ஓடுகின்றாய்
நீ+ஓடு+கின்று+ஆய்= நீ ஓடுகின்றாய்
நீ ஓடுவாய்
நீ+ஓடு+வ்+ஆய்=நீ ஓடுவாய்
The second person nouns you(நான்) and your (என்) can only show the tense and the count through verbs. The in-between words are the connecting characters that change the verb appropriately.
“கிறு” “கின்று” “இன்” “த்” “ப்” “வ்
For the second person singular the ending in-between words are “இ” “ஐ” “ஆய்” Only “ஆய்” is used. The following verb படி(read) ஓடு(run) examples will show how the verb changes.
நான் படித்தேன்= I read
நான்+ படி+த்+ஏன்= நான் படித்தேன்
நான் படிக்கின்றேன் I am reading
நான் + படி+கின்று+ஏன்= நான் படிக்கின்றேன்
நான் படிப்பேன் I will read
நான்+படி+ப்+ஏன்= நான் படிப்பேன்
அடுத்த வினை ஓடு
நான் ஓடினேன்
நான்+ஓடு+இன்+ஏன்=நான் ஓடினேன்
நான் ஓடுகின்றேன்
நான்+ஓடு+கின்று+ஏன்= நான் ஓடுகின்றேன்
நான் ஓடுவேன்
நான் +ஓடு+வ்+ஏன்=நான் ஓடுவேன்
The second person nouns you(நான்) and your (என்) can only show the tense and the count through verbs. The in-between words are the connecting characters that change the verb appropriately.
“கிறு” “கின்று” “இன்” “த்” “ப்” “வ்
For the second person singular the ending in-between words are “இ” “ஐ” “ஆய்” Only “ஆய்” is used. The following verb படி(read) ஓடு(run) examples will show how the verb changes.
நான் படித்தேன்= I read
நான்+ படி+த்+ஏன்= நான் படித்தேன்
நான் படிக்கின்றேன் I am reading
நான் + படி+கின்று+ஏன்= நான் படிக்கின்றேன்
நான் படிப்பேன் I will read
நான்+படி+ப்+ஏன்= நான் படிப்பேன்
அடுத்த வினை ஓடு
நான் ஓடினேன்
நான்+ஓடு+இன்+ஏன்=நான் ஓடினேன்
நான் ஓடுகின்றேன்
நான்+ஓடு+கின்று+ஏன்= நான் ஓடுகின்றேன்
நான் ஓடுவேன்
நான் +ஓடு+வ்+ஏன்=நான் ஓடுவேன்
You must be logged in to post a comment.