Category: Play and learn

  • Word search Game in Tamil

    Word search in Tamil:


    Tamil word search games are fun way to review, reinforce what the learners learnt and practiced for a week. The weekend Tamil language learners would have practiced the அ words and the ஆ words from in their respective textbooks. On weekdays. When they return to class on seventh day simple language practice will set their mindset for that day’s class
    The attached word search games help them learners to focus on their language retaining skills. The clues for the search game are given in English. They translate the words into Tamil to search the words and circled. Once the words are circled, they can use the puzzle as an aid to fill in the blanks in Tamil. This practice helps the student with letter recognition, the corresponding phonics, and the meaning of the words. This stimulating practice helps the learners to interact with Tamil deeply in ten minutes.

    சொல் தேடல் விளையாட்டு:


    வாரத்தின் ஒவ்வோருநாளும் தங்களின் தமிழ் பாடங்களைப் பயிற்சி செய்து வார இறுதியில் தமிழ் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தாங்கள் வாரம் முழுவதும் பயிற்சி செய்ததை மதிப்பாய்வு செய்யவும், வலுப்படுத்தவும் வேடிக்கையான வழியாகச் சொல்தேடல் புதிர்கள் விளங்குகின்றன
    வார இறுதி தமிழ் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பாடப்புத்தகங்களில் உள்ள ‘அ’ சொற்களையும் ‘ஆ’ சொற்களையும் பயிற்சி செய்திருப்பார்கள். வாரத்தின். ஏழாம் நாள் அவர்கள் வகுப்புக்குத் திரும்பும்போது, எளிய மொழி விளையாட்டுப் பயிற்சி அந்த நாளின் வகுப்பிற்கு மாணவர்களைத் தயார்படுத்தும்.
    இப்பதிவில் இணைக்கப்பட்துள்ள சொல் தேடல் விளையாட்டு தமிழ் கற்பவர்களின் மொழி தக்கவைப்பு திறன்களில் கவனம் செலுத்த உதவுகின்றன. சொல் தேடல் விளையாட்டுக்கான குறிப்புகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பின் அந்தச் சொற்களைத் தேடி வட்டமிடுகிறார்கள். சொற்கள் வட்டமிடப்பட்டவுடன், அவர்கள் புதிரைப் பயன்படுத்தி தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்பலாம்.
    இந்த நடைமுறை மாணவருக்கு எழுத்தறிவைப் பெறவும், எழுத்துடன் தொடர்புடைய உச்சரிப்பு சொற்களின் பொருள் ஆகியவற்றை ஆழமாகப் தெரிந்து புரிந்து கொள்ளவும். உதவுகிறது. மூளையைத் தூண்டும் இப்பயிற்சி கற்பவர்கள் பத்து நிமிடங்களில் தமிழுடன் ஆழமாக உறவாட உதவுகிறது.

  • இரண்டு வெவ்வேறு மொழிகளில் வாசிப்ப்பையும் எழுதும் திறனையும் வளர்ப்பது மாணவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளில் பலர் தமிழ் வகுப்புகளில் பெற்றோர்களின் ஊக்குவிப்பால் மட்டுமேக் கலந்துகொள்கிறார்கள், எனவே மாணவர்களை வகுப்பில் ஈடுபாட்டுடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம். எண்ணியியல் மின்னலட்டைகள் மாணவர்களின்  தமிழ் கற்றலுக்கானத் தொடர்பை  அதிகரிக்கத்து அவர்களின் தமிழ் கற்றலுக்கு ஊக்கம் கொடுக்கும் வளமாக அமைகிறது.

    மின்னியல் மின்னலட்டைகளைப் பற்றி:

    இந்த மின்னியல் மின்னலட்டைகள்  ‘அ’ வார்த்தைகள், ‘ஆ’  சொற்கள்,இரண்டையும் எண்ணியியல் அட்டை வடிவத்தில் வழங்குகிறது. மற்ற பல மின்னியல் மின்னலட்டைகளைப் போல இல்லாமல், இந்த அட்டைகளுக்கு கற்பவர்கள் தங்கள் பதில்களை தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும். இதனால் மாணாக்கர் தமிழில் எழுதும் கலையைக் கற்கின்றனர்.

    முந்தையப் பதிவில் பரிந்துரைக்கப்பட்டபடி ஆறு நாட்களுக்கு அச்சு மின்னலட்டைகளைப் பயன்படுத்தும்போது, தாங்கள் கற்றதை மாணவர்கள் மீள்பார்வை செய்யும்  திறமையை இந்த எண்ணியியல் மின்னலட்டைகள் வலுப்படுத்தும்.அது மட்டுமில்லாமல் மாணவர்கள் கற்றுக்கொண்டதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள உதவும்.

    இம்மின்னலட்டைகள் முக்கியமான எண்ணியியல் கல்வியறிவு திறன்களையும் ஆதரிக்கின்றன:

    • எழுத்துக்கலையின் ஒரு பகுதியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்கின்றன.
    • முதல் மொழி எழுத்தறிவு திறன்களையும் தமிழ் மொழியின் எழுத்தறிவையும் இணைக்க உதவுகின்றன.
    • தமிழ் தட்டச்சு செய்வதில் விழிப்புணர்வு இல்லாதக் குழந்தைகளுக்குத் தமிழ் விசைப்பலகை பயிற்சியை அவர்கள் இம்மின்னியியல் மின்னலட்டைகள் அறிமுகப்படுத்துகின்றன.

    இந்த அணுகுமுறை முதல் மொழி அறிவிற்கான முக்கியத் தரக்கூறுகளுடன் ஒத்துப்போகிறது, முதல் மொழி தரக்கூறுகள்  மழலையர் பள்ளியில் தங்கள் கருத்தை எண்ணியில் முறையில் தட்டச்சு செய்யவும் வெளியிடவும் எண்ணியியல் கருவிகளைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்கிறது.  மூன்றாம் வகுப்பில் மாணவர்கள் முதல் மொழிவிசைப்பலகை திறன்களை வளர்க்கத் தொடங்குகிறார்கள்; நான்காம் வகுப்பில்அவர்கள் ஒரே அமர்வில்முதல் மொழியில் ஒரு பக்கத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும் என்றும்; ஐந்தாம் வகுப்பில் தொடர்ச்சியாக இரண்டு பக்கங்கள் தட்டச்சு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

    முக்கியமாக ,பல புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகள்  தமிழ் சமூக நிகழ்வுகளின்  மூலமாகத் தமிழ் மொழியை அனுபவிக்கிறார்கள், எனவே தமிழ் தட்டச்சு பற்றிய விழிப்புணர்வும் ஒருங்குறி தட்டச்சு செய்வதின் இன்றியமையாமையும் அவர்களுக்குப் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. இந்த எண்ணியியல் மின்னலட்டைப் பயிற்சிகளின் மூலம் தமிழ் ஒருங்குறி விசைப்பலகை திறன்களை வளர்ப்பதற்கான நடைமுறை வழியை வழங்குகின்றன, அதே நேரத்தில் மொழி கற்றலையும் வலுப்படுத்துகின்றன.

    குறிப்பு: இந்த  எண்ணியல் மின்னலட்டைப் பயிற்சிகளை முடிக்க மாணவர்களுக்கு தமிழ் ஒருங்குறித் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    தாய்மொழி கையகப்படுத்தல் நம் குழந்தைகளின்கல்வியறிவை வேறு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது. எனவே தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தமிழைக் கற்றுக்கொள்ளவும் பயிற்சி செய்யவும் நம் இளையோர்களை ஊக்குவிப்போம்.

    Digital Flashcards Matter for Tamil Learners

    Developing reading and writing skills in two very different languages can be challenging for learners. Many children in the Tamil diaspora attend Tamil classes because their parents encourage them to do so, so keeping them engaged is especially important. Digital flashcards can increase interaction with learning materials and make practice more active and motivating.

    About This Activity:

    This activity presents அ words and ஆ words in a digital postcard format. Unlike many other digital flashcards, these cards require learners to type their answers in Tamil, which adds an active writing component to the exercise.

    When used alongside the printable flashcards for six days as suggested, these digital flashcards can strengthen retrieval practice and help learners remember what they have learned.

    They also support important digital literacy skills:

    •              They encourage learners to use technology as part of the writing process.

    •              They help bridge first-language literacy skills and Tamil language learning.

    •              They introduce Tamil keyboarding practice for children who have limited exposure to Tamil typing.

    This approach aligns with Common Core writing standards, which encourage students to use digital tools to produce and publish writing from kindergarten onward. By Grade 3, students begin developing keyboarding skills; by Grade 4, they are expected to type one page in a single sitting; and by Grade 5, that expectation increases to two pages.

    Many diaspora Tamil children mainly experience the language through community events, so their exposure to Tamil typing is often limited. These digital flashcard exercises provide a practical way to build Tamil Unicode keyboarding skills while reinforcing language learning.

    Note: Students need to know Tamil Unicode typing to complete these flashcard exercises

    Native language acquisition takes the literacy of our learners to a different dimension. So let us  encourage our learners to learn and practice Tamil in their everyday activities.

  • விளையாடிப் பார்க்கலாம்!

    Match the words to the pictures.

error: Copyrights: Content is protected !!