எழுத்துகளின் ஒலியளவு அறிதல்

எழுத்துகளின் ஒலியளவு அறிதல்-Phonetic duration

ஆங்கில உயிர் எழுத்துகளின் குறுகிய ஒலியையும் நீள ஒலிகளைச் சுட்டிக்காட்ட மொத்தம் ஐந்து எழுத்துகளே உள்ளன. அதனால் குறுகிய ஒலியைக் குறிக்க ă,ĕ,ĭ,ŏ,ŭ என்று குறிக்கப் படுகிறது. அதேபோல நீண்ட ஒலியைக் குறிக்க •ā •ī•ō •ū •ȳஎழுத்துகளின் மேல் குறிகள் உள்ளன, ஆனால் தமிழ் மொழியில் குறுகிய உயிர் எழுத்துகளுக்கும், நெடிய உயிர் எழுத்துக்கும் வரிவடிவிலேயே வித்யாசம் இருக்கிறது. இப்படி ஒலிகளை வேறுபடுத்திக் காட்டுவதன் முக்கிய காரணம் மொழியைச் சரியாக உச்சரிக்க ஒருவருக்குத் தெரிந்து இருக்க வேண்டும் என்பது தான்.
ஒலியைக் கொண்டு தமிழ் உயிர் எழுத்துகளைப் பற்றி மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியது மிக அவசியம். ஏன் என்றால் அவையே தமிழ் மொழியின் அடிப்படை. உயிர் எழுத்துகளை அடையாளம் கண்டு கொள்வது , எழுதுவது உச்சரிப்பது போன்ற திறன்களை ஒருவர் வேகமாகப் பெற்று விடலாம். எழுத்துகளின் உச்சரிப்பு தமிழ் மொழியைப் பேசுவதற்கும்,எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவும் உதவும்.அதே போல உயிர் எழுத்துகளின் ஒலியளவு முறைகளை துல்லியமாக ஆரம்பநிலையிலேயே அறிந்து கொள்வது தமிழில் ஒருவர் மரபு இலக்கியமான செய்யுளைப் படைக்க உதவும். இத்துடன் இணைந்துள்ள படம் தமிழ் உயிர் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கத் தேவையான ஒரு துணைக் கருவியாகப் பயன்படுத்தலாம். கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லி உங்கள் திறனை சோதித்துக் கொள்ளுங்கள்.

எழுத்துகளின் ஒலியளவு அறிதல்
எழுத்துகளின் ஒலியளவு அறிதல்

In English there are only five letters that represent the short and long vowels. ă,ĕ,ĭ,ŏ,ŭ are the short vowels. The following are long vowels. ā,ī,ō,ū,ȳ. In Tamil each vowel is differentiated by its written shape. The important reason for the differentiation is to pronounce the language the letters correctly. So learning the vowels based on their sound duration is very important as they are the foundation of the Tamil language. One can get the skills of Identifying the vowels, writing them and pronouncing them very fast. This skill will help one learn the vowels based on their sound. The picture above can be used a study tool to learn the letters easily. This skill is also necessary to learn to write Tamil classical poems called “CheyyuLL” Take the quiz to test your knowledge.

[raw]

உயிர் எழுத்துகள்-மீள் பார்வை/ Review -Tamil vowels

sample quiz for publc

[/raw] [raw]

Leaderboard: உயிர் எழுத்துகள்-மீள் பார்வை/ Review -Tamil vowels

maximum of 6 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
[/raw]