Posted on

இறை வாழ்த்து பராபரக்கண்ணி

தாயுமானவர் எழுதிய  பராபாரக்கண்ணி பாடல்  தமிழ் இணையக் கலவி கழகத்தின் சான்றிதழ் படிப்பின் மேல்நிலையின் முதல் பாடமாக உள்ளது.   அந்தப் பாடலை  ஆசிரியர்கள் வகுப்பில் ஒருமுறை  சொல்லிக் கொடுத்தாலும்,  புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை மாணவர்கள்  சொற்களையும் அவற்றை   சொல்ல வேண்டிய முறையையும் இக்காணொளி உதவி செய்கிறது.

பராபரக்கண்ணி

அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே!- தாயுமானவர்.

 இப்பாடலின் ஆங்கில  மொழியாக்கம்:

Oh supreme power, the abundance of eternal bliss you came to protect my beloved life by love
Oh supreme power kindly bestow your blessings so I love and shower kindness to all living things as if it. Is my own.

Meaning of the poem in Tamil.

இப்பாடலின் பொருள் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் கீழ் வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கே விளக்கத்தை இடுவதன் மூலம் இந்தப் பாடத்திட்டங்களைப் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

“என்னிடம் அன்பு என்ற உணர்வை அதிகமாக்கி என் அருமையான உயிரைக் காக்க வந்த இறைவனே, இன்ப வெள்ளமே! ஒப்பற்ற மேலான பொருளே! உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் என் உயிர் போல நினைத்து அவ்வுயிர்கள் மேல் இரக்கம் கொள்ளும்படி நீ எனக்கு அருள்புரிவாயாக”

 பொருளின் ஆங்கில விளக்கம்:

Oh Almighty, the endless joy, you have come to protect my precious life, by magnifying the feeling of love.Please bless me with a sense of benevolence so I can love others as I love myself.

Posted on

இடைச்சொல்- பாடம்

இடைச்சொல்

இடைச்சொல்- பாடம்

தொடக்க நிலைப் பாடத்தில் நாம் இடைநிலைச் சொற்களைப் பார்க்கப் போகிறோம். இவை தனியாக நின்று பொருள் தராது. அவை பெயர்ச்சொல்லின் இறுதியில் சேர்ந்து பொருள் தரும் ஒரு இடைநிலைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால் தமிழ்ல் பொருள் தரும் சொற்றொடர்களை அமைக்க முடியும். இந்த இடைநிலைகளைக் கொண்டு தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களை வினைச்சொல்லாகவும் மாற்றலாம்.

தொடக்க நிலையில் இடைநிலை சொற்களை   இரு வகையாகப் பிரிக்கலாம்.

காலம் காட்டும் ஈறுகள்

இடம் காட்டும் இடைநிலைகள்,

 

ஏற்கனவே காலம் காட்டும் இடைநிலைகள் இந்தச் சுட்டியில் கொடுக்கப் பட்டுள்ளது.

அவையாயாவன,இன்” “ட்”ற்”“த்” “கிறு” “கின்று” ஆநின்று“ “ப்” “வ்

இன்” “ட்”ற்”“த்”ஆகியவை இறந்த காலத்தையும், “கிறு” “கின்று” ஆநின்று“ஆகியவை நிகழ்காலத்தையும் “ப்” “வ்

ஆகியவை எதிர்காலத்தையும் காட்டும்.

இடம் காட்டும் ஈறுகளைப் பார்ப்போம்

தன்மை இடம் (ஒருமை) ஏன்

(பன்மை)ஓம்

முன்னிலை இடம் (ஒருமை)- ஆய்

முன்னிலை இடம் (பன்மை) ஈர்கள்

நாம் முதலிலேயே பார்த்தபடி தன்மையும் முன்னிலை எந்தப் பாலையும் காட்டாது.ஆனால் தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களோடு சேர்ந்து பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றும் ஒரு சொற்றொடர் அமைக்கும் போது பெயரைக் குறிக்கும் பெயர்ச்சொல்லை விட ஒரு வினைச்சொல்லே இடத்தையும் காலத்தையும் காட்டும்.

 

 

இங்கே நாம் தன்மை முன்னிலை இடங்களை வைத்துச் சில சொற்றொடர்களை அமைக்கலாம்.

முதலில் தொழில் பெயர்களை வினைச்சொல்லாக மாற்றலாம்.

அதன் படிகள்

 • “அல்” என்பதை எடுக்க வேண்டும்
 • “காலம் காட்டும் இடைச்சொல்லை”சேர்க்க வேண்டும்
 • இடம் காட்டும் இடைச் சொல்லைச் சேர்க்க வேண்டுமஇடைச்சொல்லைப் பயன் படுத்துதல் Using particlesin Tamil
 • Particles have an important work in Tamil language even though they cannot give any meaning. Particles are also referred as in-between words in Tamil. In an elementary level the learners need to know two types of particles. They are particles that show tense. And point of view.இன்-in” “ட் it”ற் iRr”“த்(ith)” “கிறு(kiRu)” “(கின்று(kinduRu)” ஆநின்று(aaninRu)“ “ப்(ip)” “வ்(iv)
 • Past tense particles areஇன்-in” “ட் it”ற் iRr”“த்(ith)”
 • Present tense are “கிறு(kiRu)” “(கின்று(kinduRu)” ஆநின்று(aaninRu)”
 • Future tense are “ப்(ip)” “வ்(iv)

Some particles show the point of view ending.  They are “ஏன்yehen”ஓம்om””ஆய் aai” ஈர்கள்eergal”

First person singular- “ஏன்yehen”

First person plural- “ஓம்om”

Second person singular “ஆய் aai”

Second person plural ஈர்கள்eergal”

Changing the action nouns to verbs In Tamil

 • Remove the“அல்
 • Add the appropriate tense particle
 • Add the appropriate point of view particle ending

Now play the game to reinforce the concept for  first person past tense

 

Posted on

ஆண்பால் பெண்பால் மீள்பார்வை

ஆண்பால் பெண்பால் மீள்பார்வை

ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு வகைகளுக்கு எனப் பயன் படுத்தப்படும் சில சொற்கள் உள்ளன. அவற்றை மாற்றி எழுத முடியாது/ அப்படி எழுதுவது இலக்கண விதி படி தவறாகும். ஆனால் மொழியை முதலில் கற்பவர்கள் இந்தச் சொற்களை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அதனால் ஆணையும் பெண்ணையும் குறிக்கும் சொற்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது அவர்கள் தமிழைப் புரிந்து படிக்கவும் இலக்கணப் பிழையின்றித் தமிழில் எழுதவும் உதவும்.

இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த விளையாட்டு ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு பாலருக்கும் உள்ள தனித் தனிச் சொற்களை அடையாளப்படுத்த உதவும்.

இந்த விளையாட்டின் சரியான விடை கொடுக்கும் போது அந்த சொல் மறைந்து போகும். தவறான விடை கொடுத்தால் அந்த சொல் மறையாது. இந்தக் குறிப்பைக் கொண்டு ஒருவர் தங்கள் தவற்றைத் திருத்தி கொள்ளலாம்.

Gender

Male – Female gender words review Game

In Tamil language, there are special words to note the male gender and female gender. These words cannot be changed. Changing them will be wrong grammatical term. Yet for a beginner to know these words is hard. So the above game will help the learners identify the words by sight.

Knowing the correct terms will help the learners to understand what they read. Knowing these terms will help the learners to write better too.

In this game the learners will drag and drop the correct the terms. When their choice is right the words will disappear. Using this clue the learners can relearn the terms.

Posted on

First Person Point of view – Review game

ஒருவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதே ஒரு புதிய மொழி கற்றலனின் தேவையும் நோக்கமும் ஆகும். தமிழ் மொழியில் தன்மை இடத்தை குறுக்கும் இரு சொற்கள் புதியதாய்த் தமிழ் கற்பவர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கி விடும் அந்த இரு சொற்கள் “நான்” “என்” ஆகியவை. நான் என்ற சொல் ஒருவர் தன்னைப் பற்றி பேசும் போது பயன் படுத்தப் படுகிறது. “என் என்ற சொல் ஒருவர் தனக்கு உரியவற்றைக் குறிக்கப் பயன் படுகின்றது. இந்த இரண்டுச் சொற்களும் ஆங்கில மொழியில் First Person pronoun என்ற தன்மை மாற்றுப் பெயர்களைக் குறிக்கும். I, My என்ற இரு பொருளைத் தருகின்றன.

இந்தச் சொற்களில் உள்ள இந்தச் சிறு வேறுபாட்டைக் கண்டு கொள்ளும் விதமாக இந்த விளையாட்டு அமைந்து உள்ளது.

Introducing  oneself is an important goal for a new language learner. When one is learning the Tamil Language   they will learn the Tamil words நான்,”என்”. These words refer to the first person point of view. when one is talking about him or her self, They use the word,நான், When  one refers to a object that one posses  they use  the word ,”என்” These two words are the Tamil pronouns for “I” and “My”.  Playing the game will help avoid the confusion between these two words.

தன்மை இடச்சொற்கள் – மீள் பார்வை

First Person Point of view – Review game

Posted on

மெய் எழுத்துக்கள்

மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும். மெய் எழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு.
மெய் எழுத்துக்கள் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,,ள்,ற்,ன் ஆகியவை ஒலிப்பதற்கு அரை மாத்திரை அதவாது அரை வினாடி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒற்று என்று அழைக்கப் படுகின்றன.

மெய் எழுத்துக்கள் தங்களின் ஒலியைப் பொறுத்து வல்லினம், மெல்லினம்,இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். வல்லின எழுத்துக்கள் ஆறு. க்,ச்,ட்,த்,ப்,ற் வல்லின எழுத்துக்களாகும். இந்த எழுத்துக்களின் உச்சரிப்ப்பு வலுவான மூச்சுக்காற்று கொடுக்கும் அழுத்தத்தால் வலுமையாக இருக்கும். மெல்லின எழுத்துக்களும் ஆறு தான். ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகியவை மெல்லின எழுத்துகள் ஆகும். மெல்லிய ஓசைக் கொண்ட இந்த எழுத்துக்களை ஒலிக்க அதிக முயற்சி தேவையில்லை இடையின எழுத்துக்களும் ஆறு எழுத்துக்கள் தான். ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகியவை இடையின எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை ஒலிக்கத் தேவையான முயற்சி நடுத்தரமாக இருக்கும். ஒலி ஓசையும் கடினமாகவோ அல்லது மென்மையாகவோ இல்லாமல் இடையில் வரும்.

வல்லின எழுத்துக்களுக்கு மெல்லின எழுத்துக்கள் இனமாக வரும்.முயற்சியாலும் ஒலியாலும் பொருளாலும் இவை இன எழுத்துக்களாகக் கருதப் படுகிறது.

 • க்- ங்
 • ச்-ஞ்
 • ட்-ண்
 • த்-ந்
 • ப்-ம்
 • ற்-ன்

மெல்லின எழுத்துக்கள் கால அளவு,பொருள் இதனால் ஒரு இனமாகக் கருதப்படும்.

 • ய்- ர்
 • ல்-வ்
 • ழ்-ள்

This slideshow requires JavaScript.

Tamil consonants are dependent on the vowels. There are eighteen consonants.The consonants க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் are categorized on the basis of their sounds. They take half a second to pronounce. They are called ottru.

Apart from the letter duration the consonants are catagorised based on how hard or soft they pronunce. க்,ச்,ட்,த்,,ப்,ற் letters have a hardness to the sound when we pronounce them. They are called vallinam. ங்,ஞ்,ண்,ந்,ம்,ப் letters have a softness to the sound when we pronounce and does not require a lot of effort. They are called mellinam. The letters. ய்,ர்,ல்,வ்,ழ்,ள் have a sound that is in between hardness and softness. They are called idaiyinam.

The hard sounding letters (vallinam) will have the soft sounding letters(mellinam) as their pairs. The sound and the meaning makes them pairs.

மெய் எழுத்துக்களின் பிரிவுகள்
மெய் எழுத்துக்களின் பிரிவுகள்
Posted on

எழுத்துகளின் ஒலியளவு அறிதல்-Phonetic duration

எழுத்துகளின் ஒலியளவு அறிதல்

ஆங்கில உயிர் எழுத்துகளின் குறுகிய ஒலியையும் நீள ஒலிகளைச் சுட்டிக்காட்ட மொத்தம் ஐந்து எழுத்துகளே உள்ளன. அதனால் குறுகிய ஒலியைக் குறிக்க ă,ĕ,ĭ,ŏ,ŭ என்று குறிக்கப் படுகிறது. அதேபோல நீண்ட ஒலியைக் குறிக்க •ā •ī•ō •ū •ȳஎழுத்துகளின் மேல் குறிகள் உள்ளன, ஆனால் தமிழ் மொழியில் குறுகிய உயிர் எழுத்துகளுக்கும், நெடிய உயிர் எழுத்துக்கும் வரிவடிவிலேயே வித்யாசம் இருக்கிறது. இப்படி ஒலிகளை வேறுபடுத்திக் காட்டுவதன் முக்கிய காரணம் மொழியைச் சரியாக உச்சரிக்க ஒருவருக்குத் தெரிந்து இருக்க வேண்டும் என்பது தான்.
ஒலியைக் கொண்டு தமிழ் உயிர் எழுத்துகளைப் பற்றி மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியது மிக அவசியம். ஏன் என்றால் அவையே தமிழ் மொழியின் அடிப்படை. உயிர் எழுத்துகளை அடையாளம் கண்டு கொள்வது , எழுதுவது உச்சரிப்பது போன்ற திறன்களை ஒருவர் வேகமாகப் பெற்று விடலாம். எழுத்துகளின் உச்சரிப்பு தமிழ் மொழியைப் பேசுவதற்கும்,எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவும் உதவும்.அதே போல உயிர் எழுத்துகளின் ஒலியளவு முறைகளை துல்லியமாக ஆரம்பநிலையிலேயே அறிந்து கொள்வது தமிழில் ஒருவர் மரபு இலக்கியமான செய்யுளைப் படைக்க உதவும். இத்துடன் இணைந்துள்ள படம் தமிழ் உயிர் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கத் தேவையான ஒரு துணைக் கருவியாகப் பயன்படுத்தலாம். கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லி உங்கள் திறனை சோதித்துக் கொள்ளுங்கள்.

எழுத்துகளின் ஒலியளவு அறிதல்
எழுத்துகளின் ஒலியளவு அறிதல்

In English there are only five letters that represent the short and long vowels. ă,ĕ,ĭ,ŏ,ŭ are the short vowels. The following are long vowels. ā,ī,ō,ū,ȳ. In Tamil each vowel is differentiated by its written shape. The important reason for the differentiation is to pronounce the language the letters correctly. So learning the vowels based on their sound duration is very important as they are the foundation of the Tamil language. One can get the skills of Identifying the vowels, writing them and pronouncing them very fast. This skill will help one learn the vowels based on their sound. The picture above can be used a study tool to learn the letters easily. This skill is also necessary to learn to write Tamil classical poems called “CheyyuLL” Take the quiz to test your knowledge.

[raw]

உயிர் எழுத்துகள்-மீள் பார்வை/ Review -Tamil vowels

sample quiz for publc

[/raw] [raw]

Leaderboard: உயிர் எழுத்துகள்-மீள் பார்வை/ Review -Tamil vowels

maximum of 6 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
[/raw]
Posted on

உயிர் எழுத்து சொற்களின் காணோளி

உயிர் எழுத்து சொற்களின் காணோளி

உயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள்