தமிழ் எழுத்துக்களின் அறிமுகம்

Tamil Letters: An introduction

தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப் படும்.

    உயிர் எழுத்துக்கள்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஓள.(12)

    மெய் எழுத்துக்கள்: க், ங், ச், ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன். (18)

    உயிர்மெய் எழுத்துக்கள்: க்+அ=க, ங்+அ= ங (216)

    ஆய்தம்ஃ.(1)

தமிழை எழுதவும்  வாசிக்கவும்  இந்தப் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது போதுமானது.

   இலக்கணக் கட்டமைப்பில்  தமிழ் எழுத்துக்கள்:

Gramatical structure of the Tamil letters:

ஒலி அளவு:Phonetic Duration

இதே தமிழ் எழுத்துக்கள் தங்களின் ஒலியின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. தமிழில் ஒரு ஒலி, ஒலிப்பதற்கானக் கால அளவை வினாடி என்ற நேர அலகைக் கொண்டு அளக்கலாம். இந்த அலகை மாத்திரை என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. ஒரு வினாடி என்பது ஒரு மாத்திரை என்றும் இரண்டு வினாடிகள் இரண்டு மாத்திரைகள் என்றும் அளக்கப்படுகின்றன. அரை வினாடி நேரம் நீள ஒலிகள் அரை மாத்திரை நீளம் ஒலிப்பதாகக் கணக்கிடப்படுகின்றது.

குறுகிய ஒலி கொண்டு,ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் குறில் என அழைக்கப்படும். உயிரெழுத்துக்களான அ, இ, உ,எ,ஒ குறில் எழுத்துகளின் எடுத்துக்காட்டாகும். நீண்ட ஒலியுடன் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் நெடில் என்று அழைக்கப்படும். உயிரெழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓள நெடில் எழுத்துக்களின் எடுத்துக் காட்டாகும். மிகக் குறுகிய ஒலியுடன் அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் ஒற்று என்று அழைக்கப்படும். மெய் எழுத்துக்களான க்,ங்,ச்,ஞ்.ட்.ண்.த்.ந்.ப்.ம்.ய்.ர்.ல்.வ்.ள்.ற்.ன் ஒற்று ஆகும். ஆய்த எழுத்து ஃ ம் கூட ஒற்று வகையில் சேரும். இந்த ஒலி அமைப்பு எழுத்தைச் சரியாக உச்சரிக்க உதவுவதோடு செய்யுள் இலக்கணத்தின் அடிப்படையாக அமைகின்றன.

These same letters are also are classified based on the syllable sounds.In Tamil,  the duration of the pronunciation can be measured using a time unit called  maaththirai.  Which is one second. One second is measured as one maaththirai and two seconds as two maaththirais. Half-second-long sounds are calculated to sound half a maaththirai long.

Kurril is the short sound and Nedil is the long sound. Kurril takes one second to pronounce. Neddil needs two seconds to pronounce. In vowels the letters அ,இ,உ,எ,ஒ are kurril.In vowels the letters ஆ, ஈ, ஊ, ஏ,ஐ, ஓ, ஒள are neddill. Ottrru takes only half a second to pronounce. The consonants க்,ங்,ச்,ஞ்.ட்.ண்.த்.ந்.ப்.ம்.ய்.ர்.ல்.வ்.ள்.ற்.ன் also has only half second duration. The letter ayyudham ஃ also only takes half a second to pronounce. So consonants and the ayyudham are called ottrru.

செயல்கூறு:Functioality

ஆங்கில எழுத்துக்களில் வரும் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் தன்னிச்சையாகச் செயல்படும். அப்படித் தன்னிச்சையாகச் செயல்படும் எழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.முதலெழுத்துக்கள் சொற்கள் அமைய அடிப்படையாக உள்ளன. உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் முப்பதும் முதல் எழுத்துக்கள் ஆகும்.

ஆனால் தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்தொலியையும் மெய்யெழுத்தொலியும் கலந்து உருவாவதால் அவை உயிர் எழுத்தையும் மெய்யெழுத்தையும் சார்ந்தே அமைகின்றன.

ஆங்கில எழுத்துக்களில் உயிர்மெய் எழுத்து என்ற ஒரு தனி எழுத்துப் பிரிவு இல்லை.இரு ஒலிக்கலவையைக் காட்ட இரு எழுத்துக்கள் தேவை. தமிழில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்து உருவாகும் ஒலிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரி வடிவமே உயிர் மெய் என்று அழைக்கப்படுகின்றன.

சார்பெழுத்துக்களில் உள்ள மெய் ஒலியை நீக்கி விட்டால் உயிர் எழுத்து மிஞ்சி இருக்கும்.சார்பெழுத்துக்களில் உள்ள உயிர் ஒலியை நீக்கி விட்டால் மெய் எழுத்து மிஞ்சி இருக்கும் . இவ்வாறு உயிர்மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் சார்ந்து இயங்குவதால் இவை சார்பெழுத்துக்கள் என அழைக்கப்பட்டன.

The vowels and consonants in the English alphabet act Independently. In Tamil letters that act arbitrarily are called first letters or initial letters. Initial letters form the basis of words. The vowels and consonants are the first letters of the thirty letters. But the Uiyr Meiy letters in Tamil are a mixture of vowels and consonants, so they are based on vowels and consonants. There is no separate form for vowel consonant combination in the English alphabet. Two letters are required to show the  two sound mixtures. In Tamil, the form given to the sounds formed by the combination of vowel and consonant letters is called vowel consonant.In Tamil If the consonant sound is removed from the Uiyr Meiy, the vowel will remain. If the vowel sound is removed from the Uiyr Meiy the consonant remains. Since the vowels  and consonants are independent. They are referred as intial or first letters. The  Uiyr Meiy letters are depended upon vowels and consonants.

வினா எழுத்துக்கள்:Letters to form Questions

கேள்விகள் உருவாக உதவும் எழுத்துகள் வினா எழுத்துக்கள் எழுத்துக்கள் ஆகும் அவை ஆ யா ஓ எ ஏ என்பன. எ, யா என்ற இரண்டு எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்.(எது? யார்? ஏன்?) ஆ ஓ இவை இரண்டும் சொல்ல்லின் கடைசியில் வரும். (அதுவா? அவளுக்கா?) வினா எழுத்துக்களை அகவினா, புறவினா என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். எது? யார்? ஏன்? என்ற சொற்களில் எ,யா,ஏ என்ற வினா எழுத்துக்களை எடுத்து விட்டால் பொருள் தராது. வினா எழுத்தை எடுத்து விட்டால் பொருள் தரமுடியாத வினாக்கள் அகவினா எனப்படும்.

புறவினா என்றால் வினா எழுத்துக்களை எடுத்தாலும் பொருள் தரும்.நீதானா? நீதான் +ஆ என்று பிரித்தால் நீ தான், என்றும் அவனா? என்றக் கேள்வியை(அவன்+ஆ) அவன் தானா? என்று பொருள் தருகிறது.

The letters that help change a word ‘s meaning as a question are referred as questioning letters.The letters ஆ,யா,ஓ,எ, ஏ are also categorized as letters that help ask questions.They are called vina ehlzhuththukkaLl. Vina means queation. These letters help form questions.

There are two types of questioning letters, They are called aggavina and puRravina. Aggavina means the questioning letters are part of the words to be meaningful.If we remove the letters, the words will have no meaning.

எது? யார்? ஏன்? in these words, if we remove எ,யா,ஏ. , there is no meaning. puRavinaa means the letters joins the word to ask questions. If we remove the questioning letter the words will still give meaning to the word. In these questions நீதானா?அவனா? when we split the words like நீதான் +ஆ, அவன்+ஆ and remove the questioning letter ஆ the words நீ தான் , அவன் will still give meaning.

சுட்டு எழுத்துக்கள்:Pointer Letters

உயிர் எழுத்துக்கள் அ இ உ மூன்றும் சுட்டிக் காட்டுவதற்கு பயன் படுவதால் சுட்டெழுத்துக்கள் எனப்படும். உ என்ற எழுத்து அதிகமாகஉபயோகப்படுத்தப் படுவதில்லை. அருகில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டுவது அண்மைச் சுட்டு. இவள் இது என்ற சொற்கள் நல்ல எடுத்துக்காட்டுக்கள். தொலைவில் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டும்போது அண்மைச் சுட்டு.அவள்,அது என்ற சொற்கள் எடுத்துக்காட்டுகள் ஆகும். அ, இ என்ற எழுத்தை எடுத்து விட்டால் பொருள் இல்லை.அவன் இவள் இது அது என்ற சொற்களில் சுட்டெழுத்துக்களை எடுத்து விட்டால் பொருள் எதுவும் இல்லை இவை அகச்சுட்டுக்கள் ஆகும் அ, இ என்ற எழுத்தை எடுத்து விட்டாலும் பொருள் தரும்.இவை புறச் சுட்டுக்கள் ஆகும். அவ்வீடு, இம்மரம், அக்குளம், இப்புத்தகம் என்ற சொற்களில் அ, இ என்ற எழுத்துக்களை எடுத்து விட்டாலும். வீடு, மரம், குளம், புத்தகம் என்று பொருள் தரும்.தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப் படும்.அவை உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுதம்.இந்த எழுத்துக்களை முதல் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் வினா எழுத்துக்கள் சுட்டு எழுத்துக்கள் என்றும் வகைப்படுத்தலாம்.

Once again, the letters are categorized as pointers. The vowels அ இ உ are called pointers. In Tamil they are called chuttu. Chuttu means pointing. When the words point to things nearby, it is called “annmaichuttu” இவள்(this male) இது(this one) are good examples. When we use these letters to point to far away objects they are called “saimaichuttu” அவன்(that man) அது(That one) are good examples.

error: Copyrights: Content is protected !!