பன்னாட்டு ஒலிப்பு உச்சரிப்பு வரிவடிவ விளக்கப்படத்தில் மொழியியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒலியியல் குறியீடுகள் உள்ளன. தமிழ் உயிரெழுத்துக்களை ஆங்கில உச்சரிப்புடன் இணைக்க இவ்வொலியியல் குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் வெவ்வேறு உச்சரிப்புகளைக் கொண்டுள்ளன. தமிழில், ஒவ்வொரு உயிர் ஒலியின் தனி உச்சரிப்புக்கும் ஏற்றபடி வேறுபட்ட எழுத்து வடிவம் உள்ளது. தமிழ் உயிரெழுத்துகளின் உச்சரிப்பு விளக்கப்படம் இரண்டு கருத்துக்களையும் இணைக்க உதவுகிறது.
தமிழில் ஐந்து அடிப்படை உயிரெழுத்து ஒலிகள் உள்ளன, இ(/ă/), இ (/ĭ/), உ (/ŏŏ/), எ (/ĕ/), ஒ (/ŏ/). இவை குறுகியோ நீண்டோ ஒலிக்கலாம்.ஒவ்வோரு ஒலியின் அளவிற்கும் தனித்தனி உயிரெழுத்துக்கள் அவற்றின் உச்சரிப்பு நீளத்தைக் குறிக்க தனித்துவமான வடிவங்களைக் கொண்டுள்ளன.
தமிழ் மொழியில் ஐந்து குறுகிய உயிரெழுத்துக்களும் ஏழு நீண்ட உயிரெழுத்துக்களும் உள்ளன. உயிரெழுத்துக்கள் உச்சரிக்க ஒரு வினாடி எடுக்கும் போது, அவை குறுகிய உயிரெழுத்துக்கள். இக்குறுகிய குறுகிய உயிரெழுத்துக்கள் குறில் என அழைக்கப்படுகின்றன. குறில்கள் ஒரு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன,ஒரு அடிக்கோடிட்டுக் கொண்ட எழுத்து என்பது ஒரு குறுகிய ஒலி அந்த எழுத்தை ஒலிக்க ஒரு வினாடிநேரம் எடுத்துக் கொண்டால் போதும் என மாணவர்களுக்கு விளக்கவும்.. உயிரெழுத்துக்களை உச்சரிக்க இரண்டு வினாடிகள் ஆகும்போது, அவை நெடில் என்று அழைக்கப்படுகின்றன. விளக்கப்படத்தில் நெடில் உயிரெழுத்துக்கள் இரட்டை அடிக்கோடிட்டுக்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றன.
தமிழ் உயிரெழுத்துக்களில் இரண்டு புணரொலிகள் உண்டு. அவை இரு வேறுபட்ட எழுத்துகளின் இரண்டு ஓசைகள் கலந்து ஒரு ஓசையாக ஒலிப்பது புணரொலியாகும். “ஒரே உயிரொலியுடைய ஈரெழுத்து இணையுயிர்” என்று தேவநேயப் பாவாணர் தன்னுடைய இயற்றமிழ் இலக்கண நூலில் குறிப்பிடுகின்றார்.
அ(/ă/)மற்றும் இ(/ĭ/) உயிரெழுத்து ஒலிகள் ஐ(/a ɪ/) எழுத்துக்குள் உள்ளன. அ(/ă/) மற்றும் உ (/ŏŏ/) உயிரெழுத்து ஒலிகள் ஔ அசையில் உள்ளன . இந்த இரண்டு புணரொலிகளும் நீண்ட உயிரெழுத்துக்கள்.
புலம்பெயர்ந்த தமிழ் வகுப்பறையில் தமிழ் கற்றலுக்கான வளங்கள் தேவை. இந்த கருவிகள் குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே மொழியைப் பயிற்சி செய்வதற்கான குறிப்பாக செயல்படுகின்றன. . தமிழ் உயிரெழுத்துகளின் உச்சரிப்பு விளக்கப்படத்தை எளிதாக வீட்டு அச்சுப்பொறி காகிதத்தில் அச்சிட்டுப் பயன்படுத்தலாம்.
தமிழைக் கற்கவும், பயிற்சி செய்யவும், கற்பிக்கவும் ஊக்கத்தோடு செயல்படுங்கள்.
The International Phonetic Alphabet chart has phonetic symbols based on linguistic principles. We have used their method to connect the Tamil vowels to the English pronunciation. The five English vowels have different pronunciations for each one of them. In Tamil, each pronunciation has its own letter form. The IPA-based Phonic Chart for Tamil helps the Tamil education community to connect both the concepts. There are five basic vowel sounds in Tamilஅ(/ă/), இ(/ĭ/), உ(/ŏŏ/), எ(/ĕ/), ஒ(/ŏ/). These sounds can be short and long. Short and long vowels have distinct forms to denote their pronunciation length. There are five short vowels and seven long vowels. When vowels take one second to pronounce, they are short vowels. A letter with one underline means it is a short sound. When vowels take two seconds to pronounce, they are long vowels. The letter with double underlines means it is a longer sound.
Tamil vowels have two diphthongs. ஐ(/aɪ/) and ஒள (/aw/). அ(/ă/)and இ(/ĭ/) vowel sounds are within the ஐ(/aɪ/) syllable. அ(/ă/) and உ (/ŏŏ/) vowel sounds are with in the ஔ syllable. These two diphthongs are also long vowels.
A diaspora Tamil classroom needs tools that make it easy for the children to carry the learning tools with them. These tools function as a reference for children to practice the language outside the classroom. This IPA-based phonic chart for Tami can be printed on a regular printer paper for ease of use.
Inspire to learn, practice, and teach Tamil.
