Author: Suganthi Nadar

  • second person singular verb ending and tense

    முன்னிலை ஒருமை விகுதிகளும் கால இடைநிலைகளும் முன்னிலை பெயர்சொற்களாகிய நீ,உன் ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை முன்னிலை ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒரு பெயர்ச்சொல்லினால் முன்னிலை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று விகுதி இடைநிலைகள் ஒரு பொருட்பெயரின் எண்ணிக்கை, அதன் செயல்படும் காலத்தை உணர்த்த பயன்படுகின்றன. இங்கு முன்னிலை இடங்களுக்கான ஒருமை விகுதிகளையும்…

  • தன்மை ஒருமை காலம் காட்டும் இடைநிலைகள்

    தன்மை ஒருமை காலம் காட்டும் இடைநிலைகள் தன்மை பெயர்சொற்களாகிய நான், என், ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை தன்மை முன்னிலை ஆகிய இரு இடங்களையும் ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒரு பெயர்ச்சொல்லினால் தன்மை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று விகுதி இடைநிலைகள் ஒரு பொருட்பெயரின் எண்ணிக்கை, அதன் செயல்படும் காலத்தை உணர்த்த பயன்படுகின்றன.…

  • Tamil cases- வேற்றுமை உருபுகள்

    வேற்றுமை உருபுகள்   இடைசொற்கள் பெயர்ச் சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் இணைக்க இடைச் சொற்கள் பயன் படுத்தப்படுவதால் அவை தனியாக இயங்குவதில்லை. இவைத் தனியாக நின்றால் ஒரு பொருளையும் தராது. இடைச் சொற்களின் ஒருவகை வேற்றுமை உருபுகள் என்று அழைக்கப்படும். வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல் ஒரு சொற்றொடர் தொடரில் அமையும் போது ஒருப் பெயர்ச் சொல் சரியானப் பொருளைத் தருவதற்காகப் பயன் படுத்தப் படுகிண்றன, வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் கடைசியில் வந்து…

  • சொல்- அறிமுகம் . Introduction to Tamil words

    ஒரு சொல் என்பது தமிழில் பல பிரிவுகளில் அடங்கும், முதலில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை இலக்கிய வகைச் சொற்கள் இரண்டாவது இலக்கண வகைச் சொற்கள். இலக்கிய வகைச் சொற்களை இயற்சொல், திசை சொல், வடசொல் எனப் பிரிக்கலாம், இந்த வகைச் சொற்களைத் தமிழ் இடைநிலையில் விளக்கமாகப் பார்க்கலாம். இது தொடக்க நிலை என்பதால் தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது தமிழ் கற்றலுக்கு மிகவும் அடிப்படையாகும். அதனால் இங்கு இலக்கண வகைச் சொற்கள்…

  • திணைகள்- ஊடாடும் பட அகராதி

    திணைகள்- ஊடாடும் பட அகராதி

    திணைகள்- பட அகராதி: தமிழில் உள்ள திணைகளைப் பற்றிய விளக்கங்கள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் ஒரு பட அகரமுதலி திணைகளை மனதில் பதிய உதவி செய்யும். ஒருவர் பெயர்ச்சொல்லை சரியாக இலக்கணப்படி தமிழில் எழுத முடியும். ஏன் என்றால் ஒவ்வொரு திணைக்கும் ஏற்றபடி இலக்கண விதிகள் மாறும். அதனால் இந்தப் பட அகரமுதலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பட அகரமுதலிக்கான விளக்கமும் கீழே ஒரு சின்ன விளையாட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. Tamil noun classes – an interactive picture dictionary…

  • Noun classification- (upper class-inferior class)

    Noun classification- (upper class-inferior class)

    தமிழில் ஒரு பெயர் சொல் யாரைக் குறிக்கிறது என்பதைப் பொருத்து இரு வகைகளாகப் பிரிக்கலாம். தெய்வங்களையும் மனிதர்களையும் உயர்திணை என்று தமிழ் இலக்கணம் குறிக்கிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகள் போன்ற ஆறு அறிவு இல்லாத உயிரினங்களையும் உயிரற்ற சடம் பொருள்களையும் தமிழ் இலக்கணம் அஃறிணை எனக் குறிக்கிறது. இந்தப் பாகுபாடு தமிழ் இலக்கணத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது இந்தப் பாகுபாட்டை மனதில் வைத்துக் கொண்டால் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம். இந்தப் பாகுபாடு தன்மை முன்னிலை இடங்களில்…

  • ஆண்பால் பெண்பால்  மீள்பார்வை

    ஆண்பால் பெண்பால் மீள்பார்வை

    ஆண்பால் பெண்பால் மீள்பார்வை ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு வகைகளுக்கு எனப் பயன் படுத்தப்படும் சில சொற்கள் உள்ளன. அவற்றை மாற்றி எழுத முடியாது/ அப்படி எழுதுவது இலக்கண விதி படி தவறாகும். ஆனால் மொழியை முதலில் கற்பவர்கள் இந்தச் சொற்களை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அதனால் ஆணையும் பெண்ணையும் குறிக்கும் சொற்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது அவர்கள் தமிழைப் புரிந்து படிக்கவும் இலக்கணப் பிழையின்றித் தமிழில் எழுதவும் உதவும். இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும்…

error: Copyrights: Content is protected !!